கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்!
_________________
நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
_________________
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
_________________
ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமூடி போட்டிருந்தாரு!
_________________
ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
நன்றி: தமிழ் ஜோக்ஸ்
பி.கு: டாக்டர் டெல்பின் மேடம், இதை படிச்சு அடிக்க வர்றாதீங்க. மீ தி எஸ்கேப்..
Saturday, January 12, 2008
முகமூடி கொள்ளை
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 7:34 AM 3 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: தமிழ் ஜோக்ஸ்
Thursday, December 27, 2007
இங்கேயும் ஒரு வாழ்த்து (தலைவிக்கு)
"கச்சேரிக்கு பாட்டு ரெடியா?"
"ரெடி மேடம்!"
"சேம்பலுக்கு ரெண்டு பாட்டு எடுத்து விடு.. கேட்போம்.."
"கல்யாணம் கச்சேரி கால்கட்டு என்னாச்சு.. ரயிலேறி போயாச்சுடா"
"போச்சு போச்சு!!! எல்லாமே இன்னைக்கு ரயிலேறிதான் போகப்போகுது! நான் பிறந்தநாள் கச்சேரிக்கு பாட்டு கேட்டா, நீ கல்யாணத்துக்கு பாட்டு ரெடி பண்ணிட்டிருக்கே?"
"ஏம்மா, இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்ன்னா நாளைக்கு கல்யாண கச்சேரிதானே! அதான் எல்லாம் கலந்த கலவையா ரெடி பண்ணியிருக்கோம்ல.."
"உனக்கு குசும்பு ஜாஸ்தியாயிருச்சுலே.. என்னிக்காவது சொன்னதை சொன்னபடி செஞ்சிருக்கியா நீ?"
"கோச்சிக்காதம்மே.."
"சரி, அழகா ஒரு பிறந்த நாள் வாழ்த்து பாடு"
"ஹேப்பி பர்த்டே டூ யூ..
யூ ஆர் போர்ன் இன் ட ஜூ
லைக் அ மங்கீ எண்ட் கங்கரூ..
ஹேப்பி பர்த்டே டூ யு.."
"அடே அடே.. இது என்ன பிறந்த நாள் வாழ்த்து பாட்டா? ஒருத்தியை வாழ்த்தி பாட சொன்னா, நீ என்ன மங்கீ, கங்காருன்னு எல்லாம் பாடுற?"
"சாரி சாரி... இன்னொரு சான்ஸ் கொடுங்க.... வேற பாட்டு பாடுறேன்.."
"ம்ம்.. சரி.. பாடு"
"எல்லோரும் கொண்டாஆஆஆஆடுவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..."
"ஏன் இந்த இழுவை.. இது ஒரே ஒரு பொண்ணுக்கு பர்த்டே.. எல்லாரும் கொண்டாடுறதுக்கு இது என்ன ஊர் திருவிழாவா?"
"நீங்க ரொம்ப மோசம்.. நான் பாடுற எல்லாத்துக்கும் நீங்க எதிராவே பதில் சொல்றீங்க.. எவ்வளவுதான் நான் தாங்குறது? அவ்வ்வ்..."
"ஒழுங்கா பாடினா யார் தப்பா சொல்ல போறா.. சரி, கடைசியா ஒரு சான்ஸ்.. பாடுறீயா?"
"பாடுறேன் பாருங்க.. நீங்களே அசந்து போக போறீங்க.. அஹெம்"
குரலை சரி செய்கிறார்..
"தல போல வருமா.. ஹேய்.. தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தலை போல வருமா..."
"ம்ம்.. சூப்பர் சாங்... இதுவே வாழ்த்து பாடலா பாடிடுவோம்.. ஆரம்பிக்கலாமா?"
"தல போல வருமா... தல போல வருமா?
நெஞ்சில் பட்டதை சொல்வாளே...
இவளுக்கு இரவிலும் வெயில்தானே..
அட்டகாசத்தில் புயல்தானே.
நீல வானத்தை மடியில் கட்டுவாள்..
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவாள்..."
"ஹேய்.. நிறுத்து.. நிறுத்து... நைட் எல்லாம் வெயில் படம் பார்த்தா வெயிலாகிடுமா? சரி, நீல வானத்தை மடியில் ஏன் கட்டணும்.. எனக்கு இப்பவே காரணம் தெரிஞ்சாகணும்.. சொல்லு சொல்லு"
"பாட்டு பாடுனா, கேட்கணும்.. ஆராய கூடாது... கச்சேரிக்கு லேட்டாச்சு.. ஹ்ம்ம்.. கிளம்புங்க.. (நானும் அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்.. தாங்கலைடா இவங்க பாடு)"
அடுத்து என்ன... தாரை தப்பட்டை முழங்க பேக்கிரவுண்டுல தல போல வருமா பாட்டோடு ஒரு வாழ்த்து செய்தியும் சொல்லியாகணும்ல.. கோவை நகரத்து கொள்கை புயல், பயமறியா பாவையரின் தலைவலி.. ச்சீ.. ச்சீ.. தலைவி.. எங்கத் தங்கத் தல (எத்தனை கேரட்ன்னு எல்லாம் கேக்கப்படாது) அனுசுயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போமாக..
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 1:16 PM 8 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
Thursday, December 6, 2007
விருது வழங்கும் விழா
வந்தவங்களுக்கு எல்லாம் வாங்க வாங்கன்னு சொல்லியே சொல்லியே வாய் வலிச்சிருச்சு. அம்புட்டு கூட்டம் அள்ளி தள்ளிருச்சுல்ல நம்ம சங்கத்து போட்டிக்கான பரிசு வழங்கும் விழாவுல. எல்லாரும் காத்திருக்க சரியா மாலை 6 மணிக்கு விழா துவக்கம். குத்துவிளக்கேத்தி நம்ம விழாவ துவக்கி வெச்சது யாருன்னு உங்களுகு தெரியாதில்ல. கீழ படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.
த்ரிஷா மேடமே தான். அவங்க குத்துவிளக்கு ஏத்தி முடிச்சதும் நம்ம சங்கத்து தலைவி அனு சங்கத்த பத்தியும் சங்கத்து தங்கங்களான எங்கள பத்தியும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு சும்மா மேடையே அதிருச்சுல்ல.. உங்களுக்காக சில படங்கள் இங்கே


எல்லாம் முடிஞ்சு பரிச அறிவிக்கற தருணமும் வந்துது. எல்லாரும் ஆர்வமாய் எதிர்பார்த்த நகைச்சுவை திலக பரிசை வாங்கப்போறது யாருன்னு எதிர்பார்க்க இதுக்கு மேல காக்க வெச்சா நல்லா இருக்காதுன்னு வெற்றியாளர அறிவிக்க நம்ம ஷ்ரேயா கோஷல் மேடைக்கு வந்தாங்க.
அவங்க கொஞ்சும் குரல்ல "பரிசை பெறுபவர் திரு.குசும்பன்" னு சொல்ல நம்ம கேமராவ அப்படியே திருப்பி குசும்பன பாத்தா ஷ்ரேயா கோஷலின் திருவுருவம் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமேன்ற ரேஞ்ச்ல ஜொள்ளூ விட்டுட்டிருக்காரு.. அப்புறம் அவர உலுக்கி எழுப்பி மேடைக்கு கூட்டிட்டு போனா இவர பாருங்க பரிச வாங்காம ஷ்ரேயா கோஷலையே லுக்கு விட்டுட்டு இருக்காரு. :((
இப்படியாக அவர் விட்ட ஜொள்ளுல மயங்கிய ஷ்ரேயா கோஷல் அவருக்குன்னு ஸ்பெஷலா ஒரு பாட்டு பாடினாங்க.
அவருக்கு குடுக்க செஞ்ச அவார்டு இன்னும் ஷ்ரேயா கோஷல் கிட்டயே இருக்கறதா கேள்வி. அவரும் என் நினைவா அது அவங்க கிட்டயே இருக்கட்டும்னு பெருந்தன்மையா சொல்லிட்டாரு.
பரிசு பெற்ற குசும்பருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு இன்னொரு பரிசா எங்கள் சங்கத்தில் ஜனவரி மாதம் சிறப்பு பதிவுகள் போட பெருமையுடன் அழைக்கின்றோம்.
சிரிக்க வைக்க முயற்சித்தது G3 at 2:11 PM 13 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சங்கம் போட்டி
Saturday, December 1, 2007
போட்டியில கலந்து கொண்டவங்களுக்கு நன்றி

நாங்க ரெடி நீங்க ரெடியா? போட்டிக்கான தேதி முடிஞ்சாச்சுங்க. இந்த (நவம்பர்) மாத ஆரம்பத்துல ஆரம்பிச்சு என்ன கொடுமை சார்னு தலைப்பு வெச்சு எழுத சொல்லி இருந்தோம் அதுக்கு நம்ம சக நண்பர்களின் படைப்புகள் பல வந்துச்சு.
ஆனா பாருங்க படம் போட்டு இன்னொரு தலைப்பு வெச்சோம் அதுக்கு மட்டும் ஒரு படைப்பு கூட வரல என்ன கொடுமை சார் இது? :)
கற்பனை பத்தலையா இல்ல படம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சானு தெரியல. எப்டியோ போட்டி நல்லபடியா நடந்து முடிஞ்சுது.
போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம். அதுக்கு முன்னாடி இந்த போட்டில கலந்துகிட்ட எல்லாருக்கும் எங்க பயமறியா பாவையர் சங்கத்து சார்புல நன்றி நன்றி நன்றி :)
சிரிக்க வைக்க முயற்சித்தது அனுசுயா at 9:28 AM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சங்கம் போட்டி
Monday, November 26, 2007
சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!
சொல்லுங்க.. இதுக்கு ஈடாகுமா?
“மெதுவா மெதுவா.. சுவருக்கு வலிக்குமுல்ல.”
“சாவடிக்கிறாங்களே என்னைய!”
மறக்க முடியுற டயலோக்கா இது! எத்தனை தடவை இந்த டயலோக் வச்சி சுத்தி உள்ளவங்களை காமெடியனா ஆக்கியிருக்கோம் நாங்க..
ம்ம்.. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.. போதும் நிறுத்துங்க.. உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நிறுத்துங்க.. இந்த டயலோக் கேட்டதும் எனக்கு வயசாயிடுச்சோன்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சிருப்பீங்களே.. அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக்கூடாது..
நம்ம கவிதாயினியே எனக்கு பாட்டின்னா நான் சின்ன குழந்தைன்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்?
தெரியுமே! உடனே ஆரம்பிச்சிடுவீங்களே அடுத்த டயலோக்கை??
என்ன கொடுமை சார் இது!!!!
அதானே?
கரேக்ட்.. நானும் அதான் சொல்ல வர்றேன்.. போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. வந்து பட்டையை கிளப்பலாம்.. உங்க எண்ட்ரியை பதிவு பண்ணியாச்சா??
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 8:01 PM 7 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சங்கம் போட்டி
Sunday, November 25, 2007
என்ன கொடுமை சார் இது??
தீபாவளிக்கு ஒரு குஷில ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு ஓடியாச்சு. தம்பியும் வந்து ஆஜர் ஆயிட்டான். நம்ம கைலதான் ஒரு கேமரா மாட்டிக்கிச்சு இல்ல ;) சும்மா ப்ரொஃபஷனல் கொரியர் ரேஞ்சுக்கு... ச்சே... ப்ரொஃபஷனல ஃபோட்டோக்ராபர் ரேஞ்சுக்கு வளைச்சுக் கட்டி ஃபோட்டோவா எடுத்து தள்ளினேன். எங்க பாட்டி ஆச்சர்யமா அந்த டிஜிகேமயே பாத்துட்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்ததும் இப்படி யாருமே காட்டினதில்லனு வேற ஒரே ஃபீலிங்கா விட்டுட்டு நான்தான் அதுகிட்ட காட்டறேன்னு என் மேல ஒரு பாசப் பார்வைய வீசுச்சு.
"அய்யோ ஆயா... அவங்க இதுவரைக்கும் வச்சிருந்தது வேற கேமரா. இது இப்போதான் புதுசா வந்திருக்கு" னு நான் சொல்லவும்
"எவ்வளவு கண்ணு இது"-ன்னு கேட்டுச்சு. நானும் அப்படியே பந்தா விடலாம்னு
"இருபதாயிரம்"-னு சொன்னதும் அப்படியானு எதும் சொல்லாம ஆ-னு நாங்க ஃபோட்டோ எடுக்கறதையே பாத்துட்டு இருந்துச்சு. நானும் என் தம்பியும் ஓடி போயி எடுத்த ஃபோட்டொஸ் எல்லாத்தையும் சிஸ்டத்துல காப்பி பண்ணினோம். எங்கம்மாவும் எங்களோட வந்து உக்காந்துக்கிட்டாங்க. எல்லாத்தையும் ஓபன் பண்ணி பாத்துட்டு இருந்தப்போ ஒரு ஃபோட்டோ டிம்மா இருக்குனு நான் ஃபீல் பண்ணவும் என் தம்பி உடனே அதை ஃபோட்டோஷாப்ல போட்டு ப்ரைட்டாக்கினான். என் தம்பி சாஃப்ட்வேர் இஞ்சினியர் கிடையாது. எங்க வீட்டோட ஒரே சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் அடியேன்தான். அதனால அவன் இந்த வேலை பண்ணவும் எங்கம்மா ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. அப்படியே பெருமை தாங்கலை. எனக்குனா ஒரே எரிச்சல். சரி நாம எதாவது பண்ணி நாமளும் ஒண்ணும் சளைச்ச ஆளில்லைனு காட்டனும்னு ஒரு விபரீத முடிவ எடுத்தேன். முடிவ எடுத்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு. அய்யகோ! இந்த இத்து போன ஃபோட்டோஷாப்ப கத்துக்காம போனியேடி செல்லக்குட்டி-னு என்னை நானே நொந்துகிட்டு சரி எதாவது எடுத்து நம்ம MS-Paint அறிவ வச்சு சமாளிச்சடலாம்னு, எங்கம்மா ஃபோட்டோவ எடுத்து இதை பாருங்கம்மா கல்யாண ஆல்பத்துல எல்லாம் போடற மாதிரி பேக்ரவுண்ட் எப்படி மாத்தி தரேனு சொல்லிட்டு களத்துல இறங்கிட்டேன். அட ராமா! உள்ள ஒரு எழவும் புரியலை. நானும் வச்சுக்கிட்டு ஒரு கால் மணி நேரமா திரு தி்ருனு முழிச்சுட்டே உக்காந்திருந்தேன். அட புள்ளையே! சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டயே-னு உள்ளுக்குள்ள ஒரு பரிதாப குரல். எங்கம்மாவும் புள்ள எதாவது பண்ணும் பண்ணும்னு என்னையும் சிஸ்டத்தையும் மாறி மாறி பாத்துட்டே இருந்தாங்க.
என் உடன்பிறப்பு அதுக்கு மேல பொறுக்க முடியாம இங்க குடுக்கானு என் கைல இருந்து மவுஸ வாங்கி கசமுச கசமுசனு ஏதேதோ சித்து வேலையெல்லாம் பண்ணி ஃபோட்டோவ நான் சொன்ன மாதிரி சூப்பரா மாத்தி குடுத்தான். எனக்கு அவமானம் தாங்க முடியலை. எங்கயாவது ஃபேன் ஆஃப் பண்ணியிருக்குதானு பாத்தேன். வேற எதுக்கு???? :(((
எங்கம்மா என்னைய பாத்து கேவலமா ஒரு லுக் விட்டு "உன்னை போயி இவ்ளோ செலவு பண்ணி கம்ப்யூட்டர் படிக்க வச்சா ஒழுங்கா படிக்காம இப்படிதான் ஒண்ணுந்தெரியாம இருப்பியா? அவன் வேற படிச்சாலும் எப்படி சூப்பரா எல்லாம் பண்றான். இப்பயாவது அவன்ட்ட கத்துக்கோ"-னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாங்க. முருகா! ஏன் என்னை சோதிக்கற?!! ஃபோட்டோஷாப் தெரியாததால நான் சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் இல்லைன்ற அவப் பெயரா???? என்ன கொடுமை சார் இது?????
---------------------------------------
போட்டி நாள் முடிய இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கு.. கலந்துக்க நினைப்பவர்கள் சீக்கிரமே உங்க பதிவுகளை அனுப்புங்க..
சிரிக்க வைக்க முயற்சித்தது இம்சை அரசி at 6:09 PM 12 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சங்கம் போட்டி, சும்மா ஜாலிக்கு
Monday, November 12, 2007
மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா
என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..?
ஏன்.. என்னாச்சு சாந்தி..?
நம்ம குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு பாடுறா..!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?
சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?
என்ன முனியம்மா சொல்றே..?
வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..?
புது வேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க வந்தாராம்...!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நம்ப அய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு முனியம்மா..
நான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை வெறுப்பேத்த இப்படியெல்லாம் சொல்றீங்க...!
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 7:03 PM 22 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: தமிழ் ஜோக்ஸ்


