Sunday, November 25, 2007

என்ன கொடுமை சார் இது??

தீபாவளிக்கு ஒரு குஷில ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு ஓடியாச்சு. தம்பியும் வந்து ஆஜர் ஆயிட்டான். நம்ம கைலதான் ஒரு கேமரா மாட்டிக்கிச்சு இல்ல ;) சும்மா ப்ரொஃபஷனல் கொரியர் ரேஞ்சுக்கு... ச்சே... ப்ரொஃபஷனல ஃபோட்டோக்ராபர் ரேஞ்சுக்கு வளைச்சுக் கட்டி ஃபோட்டோவா எடுத்து தள்ளினேன். எங்க பாட்டி ஆச்சர்யமா அந்த டிஜிகேமயே பாத்துட்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்ததும் இப்படி யாருமே காட்டினதில்லனு வேற ஒரே ஃபீலிங்கா விட்டுட்டு நான்தான் அதுகிட்ட காட்டறேன்னு என் மேல ஒரு பாசப் பார்வைய வீசுச்சு.

"அய்யோ ஆயா... அவங்க இதுவரைக்கும் வச்சிருந்தது வேற கேமரா. இது இப்போதான் புதுசா வந்திருக்கு" னு நான் சொல்லவும்

"எவ்வளவு கண்ணு இது"-ன்னு கேட்டுச்சு. நானும் அப்படியே பந்தா விடலாம்னு

"இருபதாயிரம்"-னு சொன்னதும் அப்படியானு எதும் சொல்லாம ஆ-னு நாங்க ஃபோட்டோ எடுக்கறதையே பாத்துட்டு இருந்துச்சு. நானும் என் தம்பியும் ஓடி போயி எடுத்த ஃபோட்டொஸ் எல்லாத்தையும் சிஸ்டத்துல காப்பி பண்ணினோம். எங்கம்மாவும் எங்களோட வந்து உக்காந்துக்கிட்டாங்க. எல்லாத்தையும் ஓபன் பண்ணி பாத்துட்டு இருந்தப்போ ஒரு ஃபோட்டோ டிம்மா இருக்குனு நான் ஃபீல் பண்ணவும் என் தம்பி உடனே அதை ஃபோட்டோஷாப்ல போட்டு ப்ரைட்டாக்கினான். என் தம்பி சாஃப்ட்வேர் இஞ்சினியர் கிடையாது. எங்க வீட்டோட ஒரே சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் அடியேன்தான். அதனால அவன் இந்த வேலை பண்ணவும் எங்கம்மா ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. அப்படியே பெருமை தாங்கலை. எனக்குனா ஒரே எரிச்சல். சரி நாம எதாவது பண்ணி நாமளும் ஒண்ணும் சளைச்ச ஆளில்லைனு காட்டனும்னு ஒரு விபரீத முடிவ எடுத்தேன். முடிவ எடுத்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு. அய்யகோ! இந்த இத்து போன ஃபோட்டோஷாப்ப கத்துக்காம போனியேடி செல்லக்குட்டி-னு என்னை நானே நொந்துகிட்டு சரி எதாவது எடுத்து நம்ம MS-Paint அறிவ வச்சு சமாளிச்சடலாம்னு, எங்கம்மா ஃபோட்டோவ எடுத்து இதை பாருங்கம்மா கல்யாண ஆல்பத்துல எல்லாம் போடற மாதிரி பேக்ரவுண்ட் எப்படி மாத்தி தரேனு சொல்லிட்டு களத்துல இறங்கிட்டேன். அட ராமா! உள்ள ஒரு எழவும் புரியலை. நானும் வச்சுக்கிட்டு ஒரு கால் மணி நேரமா திரு தி்ருனு முழிச்சுட்டே உக்காந்திருந்தேன். அட புள்ளையே! சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டயே-னு உள்ளுக்குள்ள ஒரு பரிதாப குரல். எங்கம்மாவும் புள்ள எதாவது பண்ணும் பண்ணும்னு என்னையும் சிஸ்டத்தையும் மாறி மாறி பாத்துட்டே இருந்தாங்க.

என் உடன்பிறப்பு அதுக்கு மேல பொறுக்க முடியாம இங்க குடுக்கானு என் கைல இருந்து மவுஸ வாங்கி கசமுச கசமுசனு ஏதேதோ சித்து வேலையெல்லாம் பண்ணி ஃபோட்டோவ நான் சொன்ன மாதிரி சூப்பரா மாத்தி குடுத்தான். எனக்கு அவமானம் தாங்க முடியலை. எங்கயாவது ஃபேன் ஆஃப் பண்ணியிருக்குதானு பாத்தேன். வேற எதுக்கு???? :(((

எங்கம்மா என்னைய பாத்து கேவலமா ஒரு லுக் விட்டு "உன்னை போயி இவ்ளோ செலவு பண்ணி கம்ப்யூட்டர் படிக்க வச்சா ஒழுங்கா படிக்காம இப்படிதான் ஒண்ணுந்தெரியாம இருப்பியா? அவன் வேற படிச்சாலும் எப்படி சூப்பரா எல்லாம் பண்றான். இப்பயாவது அவன்ட்ட கத்துக்கோ"-னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாங்க. முருகா! ஏன் என்னை சோதிக்கற?!! ஃபோட்டோஷாப் தெரியாததால நான் சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் இல்லைன்ற அவப் பெயரா???? என்ன கொடுமை சார் இது?????

---------------------------------------
போட்டி நாள் முடிய இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கு.. கலந்துக்க நினைப்பவர்கள் சீக்கிரமே உங்க பதிவுகளை அனுப்புங்க..

12 Comments:

said...

உண்மைலே கொடுமை தான் - நமது அறிவெல்லாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க இயலாத தருணத்தில் - மதிக்கப்படுவதில்லை.

நான் தப்பிச்சிக்குவேன் - இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கிட்ட நகச்சுத்திக்கு மருந்து கேக்க்குறீயே அறிவிருக்கா உனக்கு - திட்டிடுவேன்

said...

இம்சையோட அடுத்த இம்சைய பத்தி எழுதனும்...டைம் கிடச்சா செஞ்சிடரேன்

said...

இதை பாருங்க யக்கோவ்!!! :-)

said...

சிரிக்க வைக்க முயற்சி செஞ்சி எப்படியோ புன்னகைக்க வச்சீங்க. நன்றி

said...

ஹா..ஹா.. இப்பவாவது.. பெண்கள் பின்(னாடிதான் போட்டோஷாப் கத்துக்கிற) புத்தின்னு ஒத்துகோங்க..
ஆண்கள் தானே எப்பவும் சகலகலா வல்லவர்கள்..ஹிஹி...

said...

// Baby Pavan said...

இம்சையோட அடுத்த இம்சைய பத்தி எழுதனும்...டைம் கிடச்சா செஞ்சிடரேன //

பட்டைய கெளப்புடா ராசா..

said...

//எனக்கு அவமானம் தாங்க முடியலை. எங்கயாவது ஃபேன் ஆஃப் பண்ணியிருக்குதானு பாத்தேன். வேற எதுக்கு???? :(((//

கவலப் படாதிங்க.. எங்க பிரார்த்தனை எல்லாம் வீண் போகாது. குளிர்காலத்துல உங்களுக்கு இப்படி ஒரு அவமானம் வராமலா போய்டும்? அப்போ ஒரு பேன் என்ன எல்லா பேனுமே ஆப்(பு)ல தான் இருக்கும். :P

said...

அட picasa பிகாஸா இருக்கில்ல. photoshop என்னான்னே தெரியாம நாங்கல்லாம் அதை வச்சே எவ்வளவு பிலிம் காட்டறோம்?

said...

நல்ல இயல்பான நகைச்சுவையான பதிவு...

said...

//
~பொடியன்~ said...

கவலப் படாதிங்க.. எங்க பிரார்த்தனை எல்லாம் வீண் போகாது. குளிர்காலத்துல உங்களுக்கு இப்படி ஒரு அவமானம் வராமலா போய்டும்? அப்போ ஒரு பேன் என்ன எல்லா பேனுமே ஆப்(பு)ல தான் இருக்கும். :P

//
repeateyyyyyyy

said...

இல்லைனா எனக்கு ஒரு போன் போடுங்க நான் வந்து fan ஆப் பண்ணி தாரேன்.

Anonymous said...

hi PPS,

very homely and cute real jokes.

go ahead.


VJ frm Singai

 

BLOGKUT.COM