Wednesday, November 7, 2007

தீப ஒளி வாழ்த்துக்கள்..

வாங்க மக்களே வாங்க..

அட எல்லாரும் தீபாவளி மூட்ல இருக்கீங்களா? சூப்பருங்க. வருஷத்துல ஒரு முறைதாங்க வருது தீபாவளி! 2-3 நரகாசுரன் இருந்திருந்தா வருஷத்துல 2-3 தடவை தீபாவளிங்கிற பேருல கொண்டாடி பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா காது செவுடாகிற மாதிரி வெடி கொளுத்தி போடலாம்தான்.. ஆனா பாருங்க.. நம்ம ஆதங்கத்தை கேட்கத்தான் ஆள் இருக்கா என்ன..

கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. G3 ரெண்டு நாளைக்கு முன்னவே சங்கத்து பக்கம் ஆளை காணோம். கேட்டால் யார் யார் வீட்டுக்கு எப்பெப்போ போகணும், என்ன சமையல்ன்னு குறிப்பெடுத்துட்டு இருக்காங்க. ஹ்ம்ம்.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு!

இம்சை அரசி விகடன்ல வந்துட்டேன்னு ட்ரீட் தர்றேன்ன்னு சொன்னாங்க. குரல் மட்டும்தாங்க கேட்டுச்சு. அதுக்கப்புறம் அவங்களையும் சங்கத்து பக்கம் காணவே இல்லை. ஆமா.. காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டணும்ங்க. கண்மணியக்கா காணாமல் போயிட்டாங்க. எங்கேயாவது பார்த்தீங்கன்னா சங்கத்துல கொண்டு வந்து விடுங்க. இவருடைய அங்க அடையாளங்கள்: ரெண்டு கண்கள், அவைகளை மறைக்கிற மாதிரி பெரிய சோடா பொட்டி கண்ணாடி, ரெண்டு காதுகள். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. ஒரே ஒரு மூக்கு.. ஒரே ஒரு வாய்தான். கைகளும் கால்களும் ரெண்டுதான்னு நினைக்கிறேன்..

அனுசுயா இங்கேதான் எங்கேயோ இருந்தாங்களே!

“அனுசுயா.. அனுசுயா.. இருக்கீங்களா?”

ஹ்ம்ம்.. இவங்க மட்டும்தான் என்ன பண்ணுவாங்க. கோவை மாநகரமே இவங்களை நம்பிதானே இருக்கு..

என்ன கொடுமை சார் இது!!!!

சரிங்க.. ஒத்த ஆளா இங்கே நின்னாலும், பாப்பாக்களின் சார்பா எல்லாருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்... சே சே.. தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்படியே கீழே இந்த வாழ்த்து பொட்டியை பாருங்க..


என்னத்தான் வளர்ந்தாலும் நம் அடையாளத்தை, கலாச்சாரத்தை மறந்திட கூடாதுங்க. எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் சந்தோஷமாக இருக்க இறைவனை வணங்குவோமாக..

சரி, இப்போது இன்னொரு முக்கியமான மேட்டர்.. சங்கம் போட்டிக்கு உங்கள் படைப்பு ரெடியாச்சா? இன்னும் இல்லையா? என்ன கொடுமை சார் இது!! ஒரு சின்ன பையன் போட்டின்னு வந்துட்டா கலத்துல குதிக்காமல் விடுறதில்லைன்னு பட்டையை கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

இந்த தீபாவளி விழாவில் “என்ன கொடுமை சார் இது!” தலைப்புக்கு பொருத்தமா எதாவது இருந்தால் அதையும் எழுதலாமே!

ஆமா... தலை தீபாவளி கொண்டாடும் அண்ணாக்களும் அக்காக்களும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்களுக்கு படத்தை கொண்டு பதிவெழுதும் போட்டி பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க.

அனைவருக்கும் மீண்டும்
தீபாளி வாழ்த்துக்ள்!!!

28 Comments:

said...

ஆஹா, கலக்குது டெம்ப்ளேட்.. தீவாளி வாழ்த்துக்கள்

said...

அக்கோவ், கேப்ல என்ன கொடுமை சார் போட்டிக்கு பதிவு போட்ட மாதிரி இருக்கு. சங்கத்து ஆட்களுக்கு அனுமதி கிடையாதாமே?

"தீப ஒளி வாழ்த்துக்கள்.."

said...

அனைவருக்கும் மீண்டும்
தீபாவளி வாழ்த்துக்கள்!!!

said...

ஒரு சின்ன பையன் போட்டின்னு வந்துட்டா கலத்துல குதிக்காமல் விடுறதில்லைன்னு பட்டையை கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

என்ன கொடுமை இது! அப்ப நான் தான் 1ஸ்ட்டா!

said...

அத்தை'ஸ் மாமா'ஸ் சீக்கிரம் போட்டிக்கு வாங்க....

said...

சிரிக்க வைக்க முயன்றது ஃமைபிரண்டு..ஹா..ஹா..நெசமாவே சிரிச்சிட்டேன் ஃமைபிரண்டு..

//கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. //
அவிங்களையும் விட்டு வைக்கலையா..ஹிஹி...
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும்.ஜி3 சங்கத்துக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

said...

// என்ன் ஃமை பிரண்டு,இன்னும் கேப் பட்டாசு வெடிக்க போகலையா?..இங்க இருக்கீங்க..ஹிஹி.

.:: மை ஃபிரண்ட் ::.
இம்சை அரசி
பாவை
காயத்ரி
அனுசுயா
கண்மணி
G3
எல்லாருக்கும் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் ரசிகன்.

said...

\\கண்மணியக்கா காணாமல் போயிட்டாங்க. எங்கேயாவது பார்த்தீங்கன்னா சங்கத்துல கொண்டு வந்து விடுங்க. இவருடைய அங்க அடையாளங்கள்: ரெண்டு கண்கள், அவைகளை மறைக்கிற மாதிரி பெரிய சோடா பொட்டி கண்ணாடி, ரெண்டு காதுகள். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. ஒரே ஒரு மூக்கு.. ஒரே ஒரு வாய்தான். கைகளும் கால்களும் ரெண்டுதான்னு நினைக்கிறேன்..\\

செ.செ.சூ :))

said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :)

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

said...

excuse me

may i come inside

said...

wishes to all!

said...

மங்களூர் சிவா said...
wishes to all!

November 10, 2007 11:19 AM

மாம்ஸ் இது பொங்கல் வாழ்த்து தானெ, தீபாவளி முடிந்து 2 நாள் ஆச்சி.....தூங்கீட்டீங்களா

said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
மை ப்ரண்ட்!!

said...

இனிய இதயங்கனிந்த தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்

said...

belated deepawali wishes...romba naal kazhichchu blog pakkam varren...unga blogs ellaam padichchen...arumai! inimel adikkadi unga sangaththukku varuven!

said...

@ILA(a)இளா:

//ஆஹா, கலக்குது டெம்ப்ளேட்.. தீவாளி வாழ்த்துக்கள்//

கலக்கலா இருக்கணும்ன்னுதான்.. :-D நன்றி இளா. :-)

said...

@வித்யா கலைவாணி :

//அக்கோவ், கேப்ல என்ன கொடுமை சார் போட்டிக்கு பதிவு போட்ட மாதிரி இருக்கு. சங்கத்து ஆட்களுக்கு அனுமதி கிடையாதாமே?

"தீப ஒளி வாழ்த்துக்கள்.."//

அக்கா, சங்கத்து மக்களுக்கு அனுமதி கிடையாது. அதனால எங்க பதிவை கண்டு பயம் வேண்டாம். நீங்க தைரியமா கோதாவுல குதிங்க.. :-)

said...

@Baby Pavan:

//அனைவருக்கும் மீண்டும்
தீபாவளி வாழ்த்துக்கள்!!!//

வாழ்த்துக்கள் கண்ணா. :-)


//என்ன கொடுமை இது! அப்ப நான் தான் 1ஸ்ட்டா!//

ஆமாண்டா. நீதான். ஆனால், இப்போ போட்டிக்கு ஆள் வந்தாச்சு. ;-)

//அத்தை'ஸ் மாமா'ஸ் சீக்கிரம் போட்டிக்கு வாங்க....//

வந்துட்டே இருக்காங்க களவாணி ஆண்டின்னு தகவல் வந்துச்சே! ஆமா, உங்கப்பா கலந்துக்கலையா?

said...

@ரசிகன்:

//சிரிக்க வைக்க முயன்றது ஃமைபிரண்டு..ஹா..ஹா..நெசமாவே சிரிச்சிட்டேன் ஃமைபிரண்டு..//

உங்களை நிஜமாகவே சிரிக்க வைத்ததில் எனக்கும் பெரு மகிழ்ச்சி ரசிகன்.. நீங்களும் பல பேரை சிரிக்க வைப்பதை கண்டேன். மகிழ்ச்சி. :-)

////கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. //
அவிங்களையும் விட்டு வைக்கலையா..ஹிஹி...//

யாரை விட்டுவச்சோம் இவங்களை மட்டும் விடுறதுக்கு. :-P

//என்ன் ஃமை பிரண்டு,இன்னும் கேப் பட்டாசு வெடிக்க போகலையா?..இங்க இருக்கீங்க..ஹிஹி.//

பட்டாசு வெடிக்க கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்க. :-( ஊருக்கு போய்தான் பார்க்கணும். :-)

said...

@கோபிநாத்:

//செ.செ.சூ :))//

ம்ம்.. நல்ல வேளை. கண்மணியக்கா ஊருக்கு இன்னும் திரும்பலை. வந்து கேட்டாலும் இது கோபியண்ணன் ஐடியான்னு வெளியே சொல்ல மாட்டேன் அண்ணா. :-P

said...

@கோபிநாத்:

//செ.செ.சூ :))//

ம்ம்.. நல்ல வேளை. கண்மணியக்கா ஊருக்கு இன்னும் திரும்பலை. வந்து கேட்டாலும் இது கோபியண்ணன் ஐடியான்னு வெளியே சொல்ல மாட்டேன் அண்ணா. :-P

said...

@பாரதிய நவீன இளவரசன்:


//உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
//

வாழ்த்துக்கள் இளவரசா.. :-)

said...

@மங்களூர் சிவா:


//excuse me

may i come inside//

வாங்க வாங்க.. உங்களுக்கு இல்லாத இடமா..

said...

@Baby Pavan:

//மங்களூர் சிவா said...
wishes to all!

November 10, 2007 11:19 AM

மாம்ஸ் இது பொங்கல் வாழ்த்து தானெ, தீபாவளி முடிந்து 2 நாள் ஆச்சி.....தூங்கீட்டீங்களா//

ஹாஹாஹா.. அப்படி போடு பவன். :-))))

said...

@நானானி:


//இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
மை ப்ரண்ட்!!
//

வாங்க நானானி பாட்டி. ரொம்ப நாள் ஆச்சு பார்த்து.. நல்லா இருக்கீங்களா? :-)

said...

@cheena (சீனா):


//இனிய இதயங்கனிந்த தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்//

வாழ்த்துக்கள் சீனா. :-)

said...

@Gayathri Chandrashekar:

//belated deepawali wishes...romba naal kazhichchu blog pakkam varren...unga blogs ellaam padichchen...arumai! inimel adikkadi unga sangaththukku varuven!//

வாங்க காயத்ரி.. கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி வாங்க.. பழகலாம். :-))

 

BLOGKUT.COM