விஷயம் தெரியுமா உங்களுக்கு? காதை கொடுங்க.. எல்லா உணவும் இந்தியர்களிடமிருந்துதான் காப்பியடிக்கப்பட்டதாமே?
அட.. எல்லாம் உண்மைங்க.. நீங்க நம்பலைன்னா கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க.. நாம் சாப்பிடுற KFC, pizza, Mexican Paiia, Speggetti எல்லாமே நம்முடைய உணவுதான் என்று ஆதாரத்துடன் சொல்றார் இவர். ;-)
Thursday, April 3, 2008
எல்லாமே இந்திய உணவுதான்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 6:57 PM 7 சிரிப்பொலிகள்
Monday, March 24, 2008
எங்க தலைக்கு இன்னைக்கு கண்ணாளம்..
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
எங்கே பார்த்தாலும் இப்போது திருமண மயம்.
ஆனால், இன்று ஒரு ஸ்பெஷல் வி.ஐ.பிக்கு திருமணம்..
அது யாருங்கோ?
எங்க தலைவிங்கோ!
பெயர் என்னங்கோ!
அட அவங்க எங்க அனு.. அனுசுயாதானுங்கோ!
இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போது அவங்க திருமணமும் கோலாகலமாக சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.
பயமறியா பாவையர்ங்கிறதுனால எதுலேயும் துணிவுடன் செயல்படுவாங்க என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
மாப்பிள்ளையும் பொண்ணும் (A. சுந்தரம் - V அனுசுயா) எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ நாங்களும் நீங்களும் பிரார்த்திப்போமாக..
மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா - நல்ல
மருமகள் தான் வந்த நேரமடா
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 5:49 AM 19 சிரிப்பொலிகள்
Tuesday, February 26, 2008
இத்தனை காலமா "உண்மையா " உழைச்சுகிட்டுதான் இருக்கோம்
முதலாளி வேலைகேட்டு வந்தவரிடம்...
நீ நிறைய பொய் சொல்லுவியா..?
இல்ல சார்.. ஆனா கூடிய சீக்கிரம் கத்துகிட்டு உங்க நிறுவனத்தில் பெயர் எடுப்பேன்..
________________________________________
பின்னர் வேலை கிடைத்த அவரும் அவரது தாயும்..
ஏண்டா தம்பி.. பொய் சொல்ற ஆள் எதுக்கு அவங்களுக்கு தேவையாம்..?
தெரியலேம்மா.. இப்போதைக்கு எனக்கு சேல்ஸ்மேன் வேலை கொடுத்திருக்காங்க.. பிற்காலத்தில், பி.ஆர்.ஓ. ஆக ஆக்கறேன்னு சொல்லியிருக்காங்க..!
_________________________________________
வேறொரு இடத்தில்.. முதலாளி வேலைகேட்டு வந்த பெண்ணிடம்...
என்னம்மா நீ..? உன்கிட்ட என்ன திறமை இருக்குன்னா, நல்லா கூடை, ஸ்வெட்டர் எல்லாம் பின்னுவேன்னு சொல்றியே..? அதுக்கும் ஆபீஸ் வேலைக்கும் என்ன சம்பந்தம்..?
முன்ன வேலை செய்த இடங்களில் ஆபீஸ் நேரத்தில்தான் சார் அதெல்லாம் பின்னினேன்..!
__________________________________________
நண்பர் : எவ்வளவு காலமா இந்த நிறுவனத்தில் உண்மையா உழைச்சுகிட்டு இருக்கே..?
மொக்கை : அந்த மேனேஜர் கடன்காரன் என்னை டிஸ்மிஸ் பண்ணப்போறேன்னு எப்போ மிரட்டினானோ... அப்போலேருந்து..!
__________________________________________
வங்கி மேலாளர், ஊழியரிடம்..
எங்கேய்யா அந்த கேஷியர் போய்த் தொலைஞ்சான்..?
சீட்டாட்ட கிளப்புக்கு போயிருக்கார் சார்..
வேலை நேரத்தில என்ன சீட்டாட்டம்.. ?
சீட்டாட்ட முடிவை வச்சுதான் அவர் வேலை நிலைக்குமா என்னான்னு தெரியுமாம் சார்..!
நன்றி: தமிழ் ஜோக்ஸ்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 7:09 PM 5 சிரிப்பொலிகள்
Monday, February 11, 2008
தலைவலி மாத்திரைகள் இம்மாதம் அதிக விற்பனையாவதற்கு என்ன காரணம்?
எங்கள் நன்றியினை சிம்புவின் "காளை" படத்திற்கு அன்புக் காணிக்கையாக்குகிறோம்.
இப்படிக்கு
சாரிடான், மெட்டாசின், அனாசின், ஆக்ஷன் 500, நோவால்ஜின் கம்பெனிகள்.
****
பேராசிரியர் வணிகவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பேரா : ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு பைனான்ஸ் கிடைக்கும் இடங்களில் அதிமுக்கியமான ஒன்றைக் கூறு.
மாணவன் : மாமனார்..
****
குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
பையன் : ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!??
****

ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். எவ்வளவு ஆச்சரியம்! இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
****
நபர் : சிரிச்ச பழம் ஒண்ணு கொடுங்க
கடைக்காரர் : அப்படின்னா??
நபர் : அழுகாத பழம் தான் சிரிச்ச பழம்.
நன்றி: நிலாச்சாரல்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 3:25 PM 9 சிரிப்பொலிகள்
Monday, January 21, 2008
பெண்கள் அழகு நிஜ அழகா? எப்பொழுது?

நான்: சுவாமி பெண்கள் எப்பொழுது மிகவும் அழகாக இருப்பார்கள்? அவர்களுக்கு இருப்பது நிஜமான அழகா?
சுவாமி: குழந்தாய் என்ன இது சின்ன பிள்ளை தனமாக கேள்வி உனக்கு எப்பொழுது அழகா தெரிகிறார்கள் சொல் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன்.
நான்: சுவாமி சில சமயம் தொட்டில் குழந்தையாக ஈஈஈ என்று பொக்கை வாய் காட்டி சிரிக்கும் பொழுது அழகாக தெரிகிறது.
சுவாமி: இல்லை, அப்பொழுது நீ கூட அழகாய்தான் இருந்து இருப்பாய்!!!
நான்: (இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்) நடக்க தெரியாமல் தத்தகா பித்தகா என்று நடக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மண் தரையில் சொப்பு சட்டிவைத்து மண் சோறு சமைத்து விளாயாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மாமா பச்சை ஓலை கட்டிய பிறகு புதிதாய் போட்ட தாவணியில் வெளியே வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: 12 வது படிக்கும் பட்டணத்து பெண் குட்டியோண்டு பாவாடை சட்டையில் புத்தக மூட்டை தூக்கி செல்லும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: தோட்டத்து மல்லிகையை பறித்து பூ கட்டும் பொழுது? சுவாமி: இல்லை
நான்: தலை குளித்து நுனியில் ஒரு முடிச்சு போட்டு லேசான ஈரம் படர்ந்து கோவிலுக்கு வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: வெவ்வெவ்வே என்று பழிப்பு காட்டும் பொழுது?
சுவாமி: இல்லை

நான்: விழி ஓரத்தில் கண்ணீரும் அதை மறைக்க உதட்டு ஓரத்தில் பொய் சிரிப்பும் சிரிக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் பட்டு சேலை சர சரக்க மாலை போட்டு மண கோலத்தில்?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் வயிறு பெருத்து முகம் பூரித்து நிறை மாத கர்பிணியாய் இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை

நான்: குழந்தை பெற்று குழந்தையோடு குழந்தையாகி மூக்கோடு மூக்கு உரசி விளையாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: பொக்கை வாய் தெரிய சிரித்து தோல் சுருங்கி பாட்டியாக இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: சுவாமி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் குழந்தை முதல் பாட்டிவரை எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் இதுக்கு மேல் ஒன்னும் சொல்ல முடியாது நீங்களே சொல்லிவிடுங்கள் குருவே!
சுவாமி: பெண் என்று வந்த பிறகு அவள் எப்பொழுதுமே அழகுதானாட! இப்பொழுது அப்பொழுது என்று எல்லாம் பிரித்து சொல்ல முடியாது! எப்பொழுதுமே அழகாய் தான் இருக்கிறாள் பெண் உன் பார்வை தானடா வித்தியாசபடுகிறது.

குறிப்பு: 1) இந்த பதிவை சுயநினைவோடும், யாருரைய மிரட்டலும் இல்லாமல் நானே எழுதியது.
2) அருகில் பா.பா சங்கத்து ஆட்கள் யாரும் இல்லை அவர்கள் கையில் கத்தி, தூக்கு கயிறு, விசம், கவிதாயினி கவிதை, அய்யனார் கவிதை தொகுப்பு புத்தகம் எல்லாம் வைத்து என்னை மிரட்டவில்லை நானே சொந்தமாக எழுதியது அவ்வ்வ்வ்வ்:(
சிரிக்க வைக்க முயற்சித்தது குசும்பன் at 10:05 AM 26 சிரிப்பொலிகள்
Thursday, January 17, 2008
பபாச...புதிர்களுக்கான விடைகள் இங்கே
பபாச போட்ட புதிர்
புதிர்களுக்கான விடைகள் இங்கே:
1.பால்;தயிர்;நெய்
2.முருங்கை [இலை;முருங்கைப் பூ;முருங்கைக்காய்]
3.மீன்;மீன் பிடிப்பவன்;தூண்டில் புழு
4.கோழி [முட்டை]
5.தேங்காய்;[நெத்துக் காயில் இருக்கும் பூ] எலுமிச்சை பழம் [ஊறுகாயாவது]
6.வெற்றிலை
7.எலுமிச்சைபழம் [கொடியில்]
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 5:27 PM 1 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: புதிர்;விடைகள்
Wednesday, January 16, 2008
கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...
"ஹைய்யா...மை ஃபிரண்ட் காலி.. நான் ஜாலி!"ன்னு குதூகலமாய் ஆட்டம் போடுறீங்களா? விடமாட்டேன் நான்.. இதோ வந்துட்டேன்ல..
ரெண்டு நாள் ஊருல இல்லன்னா என்னென்னவோ கதை கட்டி விட்டுடுறாங்கப்பா.. இனி பதிவே எழுதவே மாட்டா.. காயிலான் கடையில உள்ள பாட்டு சீடி எல்லாம் தீர்ந்துபோச்சுன்னு வெளியில அரசல் புரசலா கோஸ்ஸிப் லீக் ஆச்சு..
ஆனால், எங்க குரு ஒரு விஷயம் சொன்னாரு.. "உன்னை பத்தி ஒரு கோஸ்ஸிப் வருதுன்னா நீயும் வளர்ந்துட்டே வரன்னு அர்த்தம்"ன்னு. இது உண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால், இங்க இந்த நிமிடம் அந்த குரு யாருன்னு சொல்லியே ஆகணும்.. அது மட்டுமல்ல.. இவருடைய இண்ட்ரோ இங்கே ரொம்ப ரொம்ப முக்கியம்..
"என்னால் அவள் ரெண்டு மாதம்" என்ற தலைப்புல ஒரு பதிவு. சர்வேசன் போட்டியிலேயே ஒரு கலக்கு கலக்கி கடைசி சுற்று வரை போனது. எழுதுனவரு யாரு? இப்படி கேட்ட உடனே நீங்க சர்வேசன் பதிவுக்கு ஓடுறீங்களா? எதுக்கு அவ்வளவு தூரம் ஓடுறீங்க.. இருங்க.. நானே சொல்றேன்.
டக்ன்னு யாருன்னு சொல்லிட்டா பதிவு டக்ன்னு முடிஞ்சிடாதா? அதனால கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாய்ண்ட் சொல்றேன் இஅவரை பற்றி..
இவரை பற்றி இன்னும் விரிவா சொல்லணும்ன்னா பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவர். கலாய்க்க புகைப்படம் இருந்தால், அதையும் இவருக்கு ஒரு மெயிலில் தட்டி விட்டல் போதும். அடுத்த கலாய்த்தல் உங்களைப்பற்றிதான்.
அசத்த போவது யாரு ஸ்டைல்ல பாபு பிரதர்ஸ் கேட்பாங்கல்ல.. அந்த மாதிரி.. உங்களுக்கு நகைச்சுவையா, மிமிக்ரியா, வெராய்ட்டியா? எந்த மிட்டாய் வேணும்?-ன்னு கேட்டா நாம் ஏதாவது ஒன்னே ஒன்னு கேட்டு அந்த மிட்டாய் மட்டும் போதும்ன்னு சொல்லி வாங்கிக்குவோம்.
ஆனால், இவரு இருக்காரே.. எல்லாமே கொடுங்க.. நகைச்சுவை, ஜொலுல், கதைன்னு எல்லா வெராய்ட்டியும் செய்வாரு. ஆனால், ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்னுல ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருப்பாங்கல்ல.. இவருக்கு குசும்பு மற்றும் கலாய்த்தல். அய்யனாரை வைத்தே இவர் 7 முறை இவருடைய குசும்புத்தனத்தை காட்டியிருப்பார்.
இதுக்கு மேலே சஸ்பென்ஸ்ன்னு சொல்லி கண்டினியூ பண்ண முடியாது. அதான், நீங்க ஏற்கனவே யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே. ஏன் திடீர்ன்னு இவர் இங்கே என்று நீங்க கேட்கமாட்டீங்க.. காரணம்தான் உங்களுக்கு தெரியுமே..
அண்ணாத்தே சங்கம் போட்டியில சேம்பியன் ஆகி ஷ்ரேயா கோஷல் கிட்ட கோப்பை வாங்கினாரே.. அதான் கோட்டு சூட்டு போட்டு போட்டோ கூட எடுத்திருந்தாரே.. பொங்கல் அன்னைக்கே இந்த பதிவை போட்டு அண்ணாத்தே கையில கலப்பை ஒன்னு கொடுத்து எழுதுங்க குருவேன்னு சொல்லியிருக்கணும்.. அதனால என்ன? இன்னையில இருந்து ஒரு மாதம் கொடுத்துடுவோம்..
இந்தாங்க ஈ-கலப்பை..
கலக்(ங்)கட்டும் எட்டு திக்கும்..
வாழ்த்துக்கள் குசும்பன் அவர்களே..
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 9:54 PM 6 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: குசும்பன், சங்கம் போட்டி




