அட எல்லாரும் தீபாவளி மூட்ல இருக்கீங்களா? சூப்பருங்க. வருஷத்துல ஒரு முறைதாங்க வருது தீபாவளி! 2-3 நரகாசுரன் இருந்திருந்தா வருஷத்துல 2-3 தடவை தீபாவளிங்கிற பேருல கொண்டாடி பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா காது செவுடாகிற மாதிரி வெடி கொளுத்தி போடலாம்தான்.. ஆனா பாருங்க.. நம்ம ஆதங்கத்தை கேட்கத்தான் ஆள் இருக்கா என்ன..
கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. G3 ரெண்டு நாளைக்கு முன்னவே சங்கத்து பக்கம் ஆளை காணோம். கேட்டால் யார் யார் வீட்டுக்கு எப்பெப்போ போகணும், என்ன சமையல்ன்னு குறிப்பெடுத்துட்டு இருக்காங்க. ஹ்ம்ம்.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு!
இம்சை அரசி விகடன்ல வந்துட்டேன்னு ட்ரீட் தர்றேன்ன்னு சொன்னாங்க. குரல் மட்டும்தாங்க கேட்டுச்சு. அதுக்கப்புறம் அவங்களையும் சங்கத்து பக்கம் காணவே இல்லை. ஆமா.. காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டணும்ங்க. கண்மணியக்கா காணாமல் போயிட்டாங்க. எங்கேயாவது பார்த்தீங்கன்னா சங்கத்துல கொண்டு வந்து விடுங்க. இவருடைய அங்க அடையாளங்கள்: ரெண்டு கண்கள், அவைகளை மறைக்கிற மாதிரி பெரிய சோடா பொட்டி கண்ணாடி, ரெண்டு காதுகள். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. ஒரே ஒரு மூக்கு.. ஒரே ஒரு வாய்தான். கைகளும் கால்களும் ரெண்டுதான்னு நினைக்கிறேன்..
அனுசுயா இங்கேதான் எங்கேயோ இருந்தாங்களே!
“அனுசுயா.. அனுசுயா.. இருக்கீங்களா?”
ஹ்ம்ம்.. இவங்க மட்டும்தான் என்ன பண்ணுவாங்க. கோவை மாநகரமே இவங்களை நம்பிதானே இருக்கு..
என்ன கொடுமை சார் இது!!!!
சரிங்க.. ஒத்த ஆளா இங்கே நின்னாலும், பாப்பாக்களின் சார்பா எல்லாருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்... சே சே.. தீபாவளி வாழ்த்துக்கள்!
அப்படியே கீழே இந்த வாழ்த்து பொட்டியை பாருங்க..
என்னத்தான் வளர்ந்தாலும் நம் அடையாளத்தை, கலாச்சாரத்தை மறந்திட கூடாதுங்க. எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் சந்தோஷமாக இருக்க இறைவனை வணங்குவோமாக..
சரி, இப்போது இன்னொரு முக்கியமான மேட்டர்.. சங்கம் போட்டிக்கு உங்கள் படைப்பு ரெடியாச்சா? இன்னும் இல்லையா? என்ன கொடுமை சார் இது!! ஒரு சின்ன பையன் போட்டின்னு வந்துட்டா கலத்துல குதிக்காமல் விடுறதில்லைன்னு பட்டையை கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..
இந்த தீபாவளி விழாவில் “என்ன கொடுமை சார் இது!” தலைப்புக்கு பொருத்தமா எதாவது இருந்தால் அதையும் எழுதலாமே!
ஆமா... தலை தீபாவளி கொண்டாடும் அண்ணாக்களும் அக்காக்களும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்களுக்கு படத்தை கொண்டு பதிவெழுதும் போட்டி பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க.
அனைவருக்கும் மீண்டும்
தீபாவளி வாழ்த்துக்கள்!!!








