Tuesday, October 16, 2007

லேடீஸ் ஹாஸ்டல் லூட்டீஸ்

அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால அமைதியா இருந்துட்டேன் . இனிமேல் தொடர்ந்து வருவேனு நினைக்கறேன். சரி மேட்டருக்கு வருவோம். காலேஜ் லைஃப் லூட்டீஸ், ராகிங் காமெடி, காலேஜ் லவ் ஸ்டோரீஸ் இப்படி காலேஜ் வச்சு நிறைய எழுதியிருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல நாங்க பண்ணின லூட்டீஸ் எல்லாம் எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ ஒரு சின்ன ட்ரை :)))

நான் UG படிச்ச காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட். அதும் ஃபர்ஸ்ட் இயர்ல அப்போதான் ஸ்கூல் முடிச்சு வந்த பொண்ணுங்கன்றதால எல்லாம் வார்டனை பாத்தா ரொம்ப பயந்துப்பாங்க. நாமதான் எங்க போனாலும் விதிவிலக்குதானே. நமக்குனு ஒரு செட் வேற எங்க போனாலும் அமைஞ்சிடுது. ஹி... ஹி... போயி ஒரு மாசத்துல லூட்டிய ஆரம்பிச்சாச்சு. எங்க ரூம்ல இருக்கறது எல்லாமே பயங்கர அராத்து கேஸுங்க. எப்பவும் ரொம்ப ஜாலியா இருக்கும். அதனால வேற ரூம் பொண்ணூங்களும் எங்க ரூம்ல எப்போதும் இருப்பாங்க. எப்பவும் ஒரு பன்னெண்டு, பதிமூணு பேரு இருப்போம்.

தினமும் சாயந்திரம் 6 மணில இருந்து 8 மணி வரைக்கும் ஸ்டடி அவர். காலேஜ் வந்ததுக்கப்புறமும் படி படின்னா நல்லாவா இருக்கு??? கொஞ்சமாவது அவங்களுக்கு மேல் மாடி வேலை செய்யக்கூடாது??? ச்சே... ச்சே... என்ன ஆளுங்க இவங்கன்னு ஒரு மூச்சு ஃபீல் பண்ணிட்டு வழக்கம் போல எங்க அரட்டை கச்சேரிய ஆரம்பிச்சோம். அப்படியே குட்டி குட்டி வட்ட மேஜை மாநாடு போட்டு அப்படி அப்படியே ஜோதில ஐக்கியமாயிட்டோம்(ஒண்ணா போட்டா வார்டன் வரப்போ மாட்டிக்குவோம்னு ஒரு சேஃப்டிக்காக). நானும் இன்னும் ஒரு மூணு பேரும் சேர் போட்டு உக்காந்து மாநாடு நடத்திட்டு இருந்தப்பதான் எங்க கண்ணுல படற மாதிரி உக்காந்திருந்த ஒரு கேங் அப்படியே மெல்ல எழுந்து நின்னாங்க. நாங்க நாலு பேரும் அவங்களைப் பாத்து ஏன்டி நிக்கறீங்க அப்படி இப்படின்னு கேட்டு பயங்கரமா ஓட்டறோம் அவளுங்க வாயவே திறக்கவே இல்லை. என்னடா இதுனு மெல்ல திரும்பி பாத்தா கதவுகிட்ட வார்டன்........ ஓ மை காட்..........

அடுத்த அஞ்சு நிமிஷத்துல வார்டன் ரூம்ல நின்னுட்டு இருந்தோம் :'( எங்க வார்டன் ரூம்ல ரூமை ரெண்டா பிரிக்கிற மாதிரி ஸ்க்ரீன் போட்டிருப்பாங்க. ஸ்க்ரீன்க்கு ஒரு பக்கம் அவங்க பெட் இருக்கும். கதவுக்கு பக்கம் இருக்கற சைடுல டேபிள் போட்டு நிறைய கதை புக்ஸ் வச்சிருப்பாங்க. ஒரு ரெண்டு பேர் மட்டும் அவங்க கண்ணுல படற மாதிரி போயி நிப்போம்(இது டர்ன் பேசிஸ்). இந்த தடவை டர்ன்ல நான் மாட்டிட்டேன். நானும் இன்னொரு பொண்ணும் வார்டன் முன்னாடி நின்னோம். அவங்க பாட்டுக்கு வாயில வந்ததெல்லாம் சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தலைய குனிஞ்சு ஓரக்கண்ணுல ஸ்க்ரீன் அந்த பக்கம் இருந்த துரோகிங்களை பாத்துட்டு நின்னோம். பிசாசுங்க கொஞ்சமாவது நாங்க பாவம்னு நினைக்க வேணாம். எல்லாம் சிரிச்சு சிரிச்சு ஹஸ்கி வாய்ஸ்ல எங்களை கமென்ட் அடிச்சிட்டு இருக்காளுங்க. அவளுங்க சிரிக்கறதை பாத்து எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஒருத்தி வேக வேகமா அங்க இருந்த கதை புக்ஸ் எடுத்து எது நல்லா இருக்குனு மேலோட்டமா பாத்து கலெக்ட் பண்ணிட்டு இருந்தா.

வார்டன் திட்டி சோர்ந்து போயி இதுங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுனு ஒரு கட்டத்துல "இந்த வாரம் ஊருக்கு கூட்டிட்டு போக உங்க பேரண்ட்ஸ் வருவாங்க இல்ல. அப்போ என்னை வந்துப் பாத்து என் பொண்ணு இனிமே இப்படி செய்ய மாட்டானு லெட்டர் எழுதி கொடுத்தாதான் விடுவேன்"-ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்க. உடனே எல்லாரும் பயந்து போயிட்டோம். "இல்லை மேம்.... இனிமேல் இப்டி பண்ண மாட்டோம். ப்ளீஸ் மேம். இது ஒரு தடவை விட்டுடுங்க"-ன்னு அப்படியே பிட்ட போட்டோம். அவங்களும் அசர மாதிரி தெரியலை. நானும் என் ஃப்ரெண்டும் மூஞ்சிய ரொம்ப பாவமா வச்சுட்டு(நமக்கு நடிக்க சொல்லியா தரணும்) பேசி பேசி கடைசில எங்களையே என்ன பனிஷ்மென்டுனு சொல்ல சொன்னாங்க. ரொம்ப யோசிச்சு யோசிச்சு "ஒரு வாரத்துக்கு காலைல 6 to 8 உங்க ரூம் முன்னாடி உக்காந்து படிக்கறோம்"-னு நான் சொன்னேன். எங்காளுங்க எல்லாம் ஆடிப் போயிட்டாளுங்க. எங்க சூரியன் 8 மணிக்குதான் உதிக்கும். அதுவும் ஒருத்தி 8.30 மணிக்கே அலாரம் வச்சுதான் எழுவா. அப்படியே ஆத்தா கணக்கா என்னை மொறைக்கறாளுங்க. ஆனா எங்க வார்டன் அப்டியே ஷாக் ஆகி "ஓஹோ! உங்களுக்கு படிக்கிறது ஒரு பனிஷ்மென்டா?" அப்படினு கேட்டதும் தான் ஆஹா! மேட்டர் இப்டி வில்லங்கமா போகுதேனு "இல்ல மேம். காலைல 6 மணிக்கு எழுந்து வரணும் இல்ல. அதை பனிஷ்மென்டுனு சொன்னேன்" அப்படி இப்படினு சமாளிச்சு வச்சோம்.

"சரி அதையே பண்ணுங்க"-ன்னு அவங்க சொன்னதும் அப்பாடா ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சோம்னு நினைச்சோம். ஏன்னா அவங்களே எப்பவும் 8 மணிக்குதான் எழுந்திருப்பாங்க. சோ நாங்க 7.45க்கு அங்க ஆஜர் ஆனா போதும். ஒரு வாரம் கஷ்டப்பட்டு போயிடலாம்னு சந்தோஷமாகிட்டோம். மறுபடியும் அவங்க "அப்படியே எல்லாரும் ஆளுக்கு 100 ரூபா ஃபைன் கட்டிடுங்க"-ன்னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாங்க. ஆஆஹ்ஹ்ஹ்!!!!! எங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு. திருப்பி நானும் என் ஃப்ரெண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினோம். அதுக்கப்புறம் "சரி நீங்களே சொல்லுங்க. எவ்ளோ ஃபைன் கட்டறீங்க" ன்னு கேட்டாங்க. நான் மெல்ல "ஃபைவ் ருபீஸ்" ன்னேன். என்னோட நின்னுட்டிருந்தவ "ட்வென்டி ஃபைவ் ருபீஸ்"னு சத்தமா சொன்னா. எனக்கு வந்ததே கோபம். 'அடி பாவி! அஞ்சு ரூபாயில முடிக்கலாம்னு நான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன். அப்படியே பேசி ஒரு பத்து ருபாயிக்கு ஒத்துக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த டாக் இப்படி சொதப்பிடுச்சே" எனக்கு ஒரே கடுப்பு. சைடுல பாத்தா எல்லாரும் எங்களை கொல வெறியோட பாக்கறாளுங்க. வார்டன் என்னடாடான்னா "100 ரூபா எங்க ... 25 ரூபா எங்க ... அதெல்லாம் முடியாது"ன்னுட்டாங்க. அப்புறம் அதுக்கு ஒரு அரை மணி நேரம் பேசி ஓகே பண்ணிட்டு வந்தோம். ஆனா கடைசி வரைக்கும் நாங்க அந்த 25 ரூபாயை கட்டவே இல்லை. காலைல ஒரு 7.45, 7.50க்கா போயி அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்துடுவோம். ஹ்ம்ம்ம்............. ஆனா இப்படி அடிக்கடி மாட்டி வார்டன் ரூமுக்கு போயிட்டு வந்ததாலதான் எங்க அறிவு ரொம்ப விசாலமடைஞ்சிது. ஏன்னா பல விதமான புக்ஸ்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) அங்க இருந்துதான் சுட்டுட்டு வந்தோமில்ல ;)

12 Comments:

said...

ரொம்ப கஷ்டப்பட்டு பதிவு எழுதினதுக்காக ஒரு அட்டண்டன்ஸ்

said...

மத்தபடி ஸ்பெஷலா ஒன்னும் இல்ல பதிவுல.

இன்னும் சென்னை தமிழ்ல சொல்லனும்னா 'சப்பை' மேட்டரு

said...

பேசாம நீங்களே fake வார்டனா இருந்து இருக்கலாம்

said...

Internet Explorer doesnt display Tamil Unicode fonts and Images the way you wanted .Thats why you see "src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/3.gif"> as a text in the post,why dont u use http://tamilkeyboard.blogspot.com/ to write your posting(it has preview tab also).Thanks!

said...

ரொம்ப நாள் கழிச்சி பதிவுக்கு வர்ரேன். நலமா?

காலைல ஆறு மணின்னா எப்படியிருக்கும்? மறந்து போச்சே!

ஆக மொத்தத்துல படிக்கிறப்போ இம்சை அரசி அமைதியின் சிகரம்.....

said...

கருப்பா குள்ளமா ஒரு மேத்ஸ் மேடம் இருந்தாங்களே, நியாபகம் இருக்கா ?

அவங்க பேரு என்ன ?

நமது திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியின்(ஆர்.இ.சி !!!) எதிரே அவங்களுக்கு ஒரு சிலை வைக்கலாம்னு இருக்கேன்...

யுனி எக்ஸாம் - டி.இ பேப்பர்ல ஒன்னும் தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்....அவங்க தான் எடுத்தாங்க அந்த பேப்பர்...

என் மேல கொஞ்சம் ஸாப்ட் கார்ணர் அவங்களுக்கு..

சரி ஒழிஞ்சு போ அப்படின்னு, அவங்க கிட்ட சி.வீ.ஆர் ஹாஸ்டல்ல அதே பாடத்தை ட்யூஷன் படிச்ச பொண்ணு (எனக்கு முன்னால் உட்கார்ந்து மடமடனு எழுதி தள்ளிக்கிட்டிருக்கு) கிட்ட சிபாரிசு பண்ணி, கொஞ்சம் இவனுக்கு பேப்பரை காட்டித்தொலைன்னு சொல்லி, நம்ம வாழ்க்கையில் ஒளி,மின்னல்,தூங்காவிளக்கு ஏத்திவிட்டாங்க...

எங்கிருந்தாலும் அந்த மேடம் வாழ்க...

உங்க ஹாஸ்டல் அப்படி....உங்க காட்பாதர் ஒல்லி சோமு சார் (உங்க நாவல் கண்மணில வர அவர் தானே காரணம்) கிட்ட நான் அடிச்ச லூட்டிய சொன்னா அப்புறம் என்னை கொலைவெறியோட தொரத்துவீங்க...

:))))))

said...

அக்காவ்.. ரொம்ப நல்லா இருக்கு..

என்னையும் சங்கத்துல சேத்துக்குவீளா..

said...

ஒன்னும் பெர்சா இல்லியே !! லூட்டின்னா என்னன்னு தெரியுமா ?? மாட்டிக்கிட்டு தப்பிச்சு வர தைர்யம் வேணும் - இருந்தாலும் பொம்பளெப் புள்ளெங்க - ம்ம்ம் - சரி சரி

said...

//காலேஜ் வந்ததுக்கப்புறமும் படி படின்னா நல்லாவா இருக்கு???//

அட நீங்களும் அவுக கட்சித்தானா...?

said...

dappa matteru.. onniyume illa

said...

//அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால அமைதியா இருந்துட்டேன் . இனிமேல் தொடர்ந்து வருவேனு நினைக்கறேன்//.. போஸ்ட் பன்னது அக்-16.. இன்னிக்கு தேதி அக்-30.. இதுக்கு பேர்தான் தொடர்ந்து வரதா ஆண்டி?

--வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா--
பேசாம சங்கத்த கலச்சிட்டு அத கட்சியா மாத்திடுங்க. பயமறியா பாவையர் கட்சினு. வாக்குறுதிய தான் காப்பாத்த முடியலயே.

said...

ammani ithu unakke nalla irukkaa.. ladies hostel luutti paththi naanee ezhuthiduveen appuRam... evvalavu hot visayangal irukku nee ennadaannu kathaibook padissa visayaththai ezhuthiyirukka... ok ok ithu thodarthaane... oruvelai climax suuuda irukkumo ennavo.. will read the posts till you finish it! keep writing more...

anbudan
osai chella

 

BLOGKUT.COM