Monday, July 23, 2007

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்...

முதல்ல 22-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் தலைவி மை ஃப்ரண்டிற்கு ஒரு வாழ்த்த சொல்லிட்டு அவங்க குடுத்த அருமையான விருந்துக்கு ஒரு நன்றியும் சொல்லிட்டு பதிவ ஆரம்பிப்போம்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க?? எங்க சங்கத்து மக்களெல்லாம் பயங்கரமா களைச்சு போய் இருக்காங்க.. அட, அப்படி என்ன களைப்புன்னா கேக்கறீங்களா?? மலேசியா வரைக்கும் போய் ஊர சுத்தி பாத்துட்டு வந்திருக்கோமில்ல.. அதான்.. ஆனா எவ்ளோ தான் களைப்பா இருந்தாலும் சங்கத்துல பதிவு போடற கடமைய தவற விடலாமா சொல்லுங்க.. அதான்... திரும்பி வந்ததும் பதிவ போட ஓடோடி வந்துட்டேன் :))

சங்கத்துல நாங்க எல்லாரும் தலைவியோட பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்னு ஒரு வட்ட மேஜை மாநாடு போட்டு யோசிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ தான் நம்ம அனுசுயா வந்து இதை சாக்கா வெச்சு நாம் எல்லாரும் ஒரு தடவை மலேசியா போயிட்டு வரலாமேன்னு சொல்லி சும்மா இருந்த எங்களையும் கிளப்பி விட சரின்னு நாங்களும் பொட்டி படுக்கையோட ப்ளைட் ஏறிப்புட்டோமில்ல மலேசியாவுக்கு.. (யாருப்பா அங்க யாரோட செலவுலன்னு சவுண்ட் உடுறது?? எல்லாம் நம்ம சங்கத்து கஜானா காசு தான்.. இதுக்கு கூட உதவலனா அப்புறம் சங்கம் எதுக்கு? அதுக்கு ஒரு கஜானாதான் எதுக்குங்கறேன்? )

நாங்க மலேசியா வர்ற விஷயத்த தலைவி கிட்ட சொல்லலை.. எங்கள நேர்ல பாக்கறது அவங்களுக்கு ஒரு இன்ப(???) அதிர்ச்சியா இருக்கட்டுமேன்னு சஸ்பென்ஸாவே விட்டுட்டோம் (முன்னாடியே நாங்க சொல்ல, அப்புறம் அவங்க அவசரப்பட்டு எங்கள வர வேணாம்னு சொல்லிப்புட்டா என்ன பண்றது?? ஹி..ஹி.. நாங்க எல்லாம் விவரமில்ல :))) அதனால மலேசியா ஏர்போர்ட்ல இறங்கினதும் பக்கத்துல இருந்த ஹோட்டல்ல போய் செட்டில் ஆயிட்டோம்.. அப்புறம் அங்க இருந்து கிளம்பி, எங்க ப்ளான்படி கரெக்டா 12 மணிக்கு மை ஃப்ரண்ட் வீட்டுக்கு போய் சேந்தோம்.

எங்கள பாத்ததும் தலைவிக்கு ஒரு நிமிஷம் அதிர்ச்சில பேச்சே வரலை.. அப்புறம் கொஞ்சம் சுதாரிச்சதும் எங்க எல்லாரையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கெல்லாம் எங்கள அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டாங்க. அவங்க அப்பாவும் அம்மாவும் இதை சாப்பிடறீங்களா அதை சாப்பிடறீங்களான்னு ஒரே பாச மழை.. அதுல எல்லாம் நனைஞ்சு நாங்க தூங்கப்போறப்போ பொழுதே விடிஞ்சிருச்சு.. அப்ப்டியும் ஒரு குட்டி தூக்கத்த போட்டுட்டு காலைல எழுந்து பாத்தா....

என்னதிது? எல்லாத்தையும் ஒரே பதிவுலயே சொல்லிடனுமா?? நோ.. நோ.. மீதி விஷயங்கள் அடுத்த பதிவுல தான் சொல்லுவோம் ;))

Friday, July 20, 2007

ப.பா.ச விலிருந்து கண்மணி வெளி நடப்பு

வர்ர வர்ர இந்த சிறுசுங்களுக்கு வயசானவங்கன்னு
ஒரு மரியாதையே இல்லீங்க.x(

அப்படி என்ன நமக்கு பல்லெல்லாம் கொடிப் போயி
'குடுகுடு' வயசா ஆயிடுச்சி.>:)

ஏதோ வயசான ஆயா மாதிரி நம்மள கலந்துக்காம இதுகளா லூட்டி அடிக்கிதுகள்.

பெரியவங்க அனுபவசாலின்னு ஒரு பயம் வேண்டாம்
சாட்டுன்னா இதுகளே பேசிக்கிறது.நம்மள இன்வைட் பண்ரதில்ல.
பதிவு போட்டாலும் இதுக இஷ்டம்தான்.நம்ம கேக்கறதில்ல.

இதுங்க லூட்டிக்கெல்லாம் ஈடு கொடுக்க நாம என்ன வாலிபமா?இல்லை வெவரம் இல்லாதவங்களா?

சங்க நடவடிக்கை ஒன்னும் நம்மகிட்ட சொல்றது இல்லை.சங்கம் இருக்கான்னு தெரியலை.
அது அது தானா பதிவு போட்டுக்கிதுங்க போலும்.

டீம்ல இருந்தாலும் நாம சும்மா பேருக்குத்தான்.ஏதோ வயசானவளாச்சே ஒரு பாடிகார்டு மாதிரி இருப்பமின்னு நெனச்சுத்தான் ஒப்புக்கிட்டேன்.

வயசானா என்னங்க நமக்கு இல்லாத ஒலக அனுபவமா?இல்ல நாம அடிக்காத லூட்டியா?
அத இத பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.

எளசுங்களுக்கு சமமா நம்ம லூட்டியடிக்க முடியுமா ?நாம அந்த காலத்து சாவித்திரி சரோஜா தேவி ரேஞ்சு.
இதுக இந்தக்கால அசின் திரிஷா ரேஞ்சு ன்னு ஒதுங்கியிருந்தா ஒரேயடியா நம்மள கழட்டி விட்டுடிச்சிங்க போலும்.

அக்கா எங்கிருக்கீங்க என்ன பண்றீங்க உங்க பதிவு இல்லாம புள்ளைங்க ஏங்கிப் போயிட்டம்னு கொஞ்சமாச்சும் ஒரு அக்கறை வேணாம்.

இருக்கிற வேலைய வுட்டுட்டு காலேஜு கடலைன்னு இதுக மாதிரி நாம பதிவு போட்டுகிட்டிருக்க முடியுமா?

நாம பாக்காத காலேஜா போடாத கடலையா?அத்த ஒரு பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.;)

பாய் ஃபிரண்ட் வேனுமா வேணாமன்னு கேக்குதுங்க.

பாயைப் பிராண்டற வயசுலா நாம பாய்பிரண்டு பத்தி பேச முடியுமா?
என்னயிது சின்னப் புள்ளைத்தனமாயிருக்கு.:-/

சின்னப் புள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.அனுபவிக்கிற வயசு.
பிரியாமணி அதான் நம்ம பருத்திவீரன் 'முத்தழகு' ஒரு பேட்டியில சொன்ன மாதிரி

இந்த நாள் இந்த நிமிடம் இந்த வயசு ன்னு
வாழ்க்கையை அனுபவிக்கனும்.
=D>

அதுக்காக ஒரு வயசு வரைமுறை வேனாம்?நம்மள கேட்டா இப்படி செய்யுதுங்க ச்சே...
வெறுத்துப் போச்சுங்க அதான் வெளியப்போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

வயசுக்கும் மரியாதை இல்லை.

நம்மள ஏதோ ஓல்டு மாங்க்னு நெனைக்கிறவங்க கூட எப்படி காலம் தள்ள முடியும்.

அதான் வெளி நடக்கலாம்னு முடிவு செஞ்சேன்...செஞ்சிட்டேன்.

ஆமா நான் என்ன சொல்ல வர்ரேன்னு கேக்கறீங்களா?

யாரைப் பத்தி சொல்றேன்னு குழம்புதா?:-/

சங்கத்தை விட்டு வெளியே கொஞ்சம் காத்தாடப் போறத்தான் வெளி நடப்புன்னேன்.
நீங்க என்ன ஆஹா....பூசல் வெடிச்சிடுச்சின்னு பாத்தியளா

கெளம்பிட்டாய்ங்கய்ய்யா.......கெளம்பிட்டாய்ய்ங்க...:((

இதுக கூட்டணியே வேண்டாம்னு ஒதுங்கிக்கிறேன்.வர்ட்ட்டா

இப்ப நான் என்ன சொல்ல நெனச்சேன் ?

என்ன சொல்லிக்கிட்டிருக்கேன்?

யாருக்குத் தெரியும்?

ஏதோ 'மொக்கை' போடுன்னாங்க போட்டுட்டேன்.
கெலிச்சா அப்பாலிக்கா சொல்லியனுப்பறேன்.

சரி .... சரி ரொம்ப வழியுது மூஞ்சத் தொடச்சிக்கோ ராசா =))

வர்ட்டா.....:-h

Friday, July 13, 2007

ப.பா.ச.வில் உட்கட்சி பூசல்..

ப.பா.ச.வில் உட்கட்சி பூசல்.. மூத்த உறுப்பினரான கண்மணி அக்கா கட்சியை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. அங்கு நடப்பவை அனைத்தும் உங்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஓவர் டூ ப.பா.ச. கட்சி ஆபீஸ்...

****************************************************************


.:: மை ஃபிரண்ட் ::., ஜி3, அனுசுயா, இம்சை அரசி அனைவரும் மிகவும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் சந்தோஷத்தை பார்த்ததும் கண்மணி அக்காவின் கோவம் இன்னும் அதிகமாகிறது.

கண்மணி : ஏய் வாலுங்களா? என்ன எல்லாருக்கும் இவ்வளவு சந்தோஷம்??

.:: மை ஃபிரண்ட் ::. : இது என்னடா இது வம்பா போச்சு? சந்தோஷமா இருக்கறது தப்பா?

கண்மணி : சந்தோஷமா இருக்கறது தப்பில்லே.. ஆனா நான் ஒருத்தி இங்க கடுப்புல இருக்கும் போது நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கறது தப்பு தான்.

ஜி3 : என்னது? நீங்க கடுப்புல இருக்கீங்களா? என்ன ஆச்சு?? யார் என்ன சொன்னாங்க உங்கள?? சொல்லுங்க. யாரா இருந்தாலும் ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்..

கண்மணி : ஆமா.. இந்த பில்-டப் க்கு ஒன்னும் குறைச்சல் இல்லே.. எல்லாரும் காயத்ரி பிறந்தநாள் விழாக்கு போனீங்களே.. எவளாவது ஒருத்தியாவது என்ன கூப்பிட்டீங்களா?? உங்கள்ல யாருக்காவது என் நினைப்பு இருக்கா??

அனுசுயா : தோ பார்றா.. யக்கோவ்.. நாம எல்லாரும் ஒரு குடும்பத்து மக்கள்... நீங்க வந்து பெரியவங்களா லட்சணமா முன்ன நின்னு நடத்தி குடுத்திருக்கனும்.. அப்படி நீங்க பண்ணாததும் இல்லாம எங்க மேலயே குறை வேற சொல்றீங்க??? கலி காலம்டா சாமி.. :(((

இம்சை அரசி : ஆனாலும் உங்கள மாதிரி இல்ல காயத்ரி.. அவ நீங்க வரலைன்னு எவ்வளவு கவலை பட்டா தெரியுமா? அன்னிக்கு பூரா அவ கோழிக்கால தவிர வேற எதுவுமே சாப்பிடல.. நான் அக்காவுக்கு மெயில் அனுப்பியும் கூட அவங்க வரலியேன்னு வருத்தப்பட்டுட்டிருந்தா.. ஒரு போன் பண்ணியாவது நீங்க அவள வாழ்த்தி இருக்கலாம்..

கண்மணி : என்னது எனக்கு மெயில் அனுப்பினாளா??? எங்க இங்க வந்து பாரு.. அவ கிட்ட இருந்து ஒரு மெயிலும் வரலை எனக்கு..

(எல்லாரும் அங்கு எட்டி பார்க்க.. கண்மணியக்காவின் இன்பாக்ஸில் நிஜமாகவே காயத்ரியின் மெயில் இல்லை.. நம் தலைவி .:: மை ஃபிரண்ட் ::. -ற்கு ஒரு பொறி தட்ட ஸ்பாம் ஃபோல்டரை (Spam folder) திறந்து பார்த்தால் காயத்ரியின் மெயில் அப்பாவியாய் அங்கு உட்கார்ந்திருக்கிறது )

அனுசுயா : பாத்தீங்களா... அவங்க மெயில் அனுப்பினத நீங்க கவனிக்காம எங்கள கோச்சிக்கறீங்களே??

கண்மணி : மன்னிச்சிக்கோங்கபா.. :-(((

ஜி3 : நீங்க மன்னிப்பு காயத்ரி கிட்ட தான் கேக்கனும்.. அவ நீங்களா போன் பண்ணி பேசினாதான் இனி சங்கத்து பக்கம் வருவேன்னு சொல்லிட்டா.. உங்க கிட்ட இருந்து போன் வராத சோகத்துல ஒரு கவிதைகூட எழுதி இருக்கா பாருங்க..

"முடிவற்று நீளும் இரவொன்றில்
கணங்களின் பிரக்ஞையற்று
மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...

கண்ணெதிரே சுவற்றில்
படபடத்துத்
துடித்து
நிலைகொள்ளத் தவித்து
இருப்பிற்காய் போராடி
முடிவில்
சடலமாய்ச் சரிகிறது நாட்காட்டி...

திட்டமிட்டு கொலையொன்றைச்
செய்துமுடித்த திருப்தியோடு
திரும்பிப் போகிறது
காற்றும்..
உன் நினைவும்!"

இம்சை அரசி : ( ஜி3 காதில்) இது அவ டீமாஸ்டர பத்தி எழுதினது தானே.. நீ மாத்தி சொல்ற???

ஜி3 : ( இம்சை அரசி காதில்) ஷ்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. கண்டுக்காத :)

கண்மணி : அவ்வ்வ்வ்... என் மேல என் தங்கத்துக்கு இம்புட்டு பாசமா?? இதோ இப்பவே அவளுக்கு போன் பண்றேன்..

ட்ரிங்..ட்ரிங்...

காயத்ரி : ஹலோ

கண்மணி : செல்லம்.. நான் தாண்டா கண்மணியக்கா பேசறேன். சாரிமா உன் பிறந்தநாள் விழாவுக்கு வராததுக்கு.. ஜி-மெயில் சதி செஞ்சிடுச்சு :(( நீ இல்லாம அபீஸே களை கட்ட மாட்டேங்குது. சீக்கிரம் வாம்மா.. உனக்காக கோழிக்கால் ப்ரை வாங்கி வைக்கிறேன்..

காயத்ரி : ஆஹா.. இதோ வந்துட்டேன்க்கா.. நீங்க இம்புட்டு பாசமா கூப்பிட்டு நான் வராம இருப்பேனா சொல்லுங்க :))

*****************************************************

அடடா.. சரவெடியாய் வெடிக்கும் என எதிர்பார்த்தால் இப்படி புஸ்வானமாய் மாறிவிட்டதே :-(( இந்த கட்சியில் ஒன்றும் தேறவில்லை.. நாங்கள் வேறு ஒரு கட்சி ஆபீஸில் இருந்து உங்களை மீண்டும் சந்திக்கிறோம்..

நன்றி.. வணக்கம்..

Thursday, July 12, 2007

பொறி(ரி)யல் படிப்பு

வணக்கம் மக்களே இப்பத்த மார்க்கெட் என்னனா சமையல் குறிப்பு எழுதறதுதான் அதான் நானும் சமையல் குறிப்பு எழுத வந்துட்டேன். (அது யாரது ஓரமா சிரிக்கறது ) ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சிரிக்ககூடாது.

அதி காலைல விடிஞ்சும் விடியாததுக்கு முன்னாடி (7 மணிக்கு) போன் மணியடிச்சுது. யாருடா இது இப்டி நடு ராத்திரில போன் பண்ணறாகனு யோசிச்சுகிட்டே போன எடுத்தா என் உயிர் தோழி கனகாதான் லைன்ல.

என்னடி அதிசயம் இந்நேரத்துக்கு போன் பண்ற.

ஒரு சின்ன சிக்கல்டி நீதான் ஒரு தீர்வு சொல்லனும்

சொல்லிடுவோம் என்ன பிரச்னை சொல்லுடி

ஒன்னுமில்ல எங்க அம்மா காலைல ஒரு கல்யாணத்துக்கு போகனும்னு அவசரமா சாதம் பருப்பு மட்டும் செஞ்சிட்டு போயிட்டாங்க. ஆனா எங்க அப்பாவுக்கு பொரியல் செஞ்சே ஆகனும் அதான் பிரச்னை

சரிடி இதுல என்ன பிரச்னை செய்ய வேண்டியதுதான

என்னடி நீயுமா இப்டி பேசற எனக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம் திடீர்னு பொரியல் செய்ய சொன்னா என்ன செயறதுடி அதிலயும் எங்க அப்பா ஈசியா முட்டை போட்டு பண்ணிடுனு சொல்லிட்டு வாக்கிங் போயிருக்காருடி

சரி இவ்ளோதான பிரச்னை நாமெல்லாம் பொறியியல் படிச்சவங்க இந்த சாதாரண பொரியலுக்கு பயப்படலாமாடி?

அடியே அது பொறியியல் இது பொரியல்

அதனால என்ன அங்க எப்டி எதுவும் தெரியாம லேப்ல பாஸ் பண்ணலயா அந்த மாதிரிதான் இதுவும்

சரி சரி அப்டினா எப்டி செய்றதுனு நீயே சொல்லி குடுடி

அவ்ளோதான விடு முதல்ல வெங்காயம் தக்காளி எல்லாம் வெட்டிக்கோ

ம் சரி அப்புறம்

அடுப்புல பாத்திரம் வெச்சு எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து தாளிச்சு இந்த வெங்காயம் தக்காளி கொத்தமல்லி எல்லாம் போட்டு வதக்கிக்கோடி

ம் அப்புறம்

முட்டைய எடுத்து ஒடைச்சு ஊத்திக்கோ

ம்

அப்புறம் ரெண்டு சொம்பு தண்ணிய ஊத்தி நல்லா மூடி வெச்சுடு பத்து நிமிசம் கழிச்சு எறக்கிட்டீனா முட்டை பொரியல் ரெடி

அட இவ்ளோதானா சரிடி நான் செய்யறேன் அப்டீனு போன் கட் பண்ணுனா

அப்ப எங்க அம்மா வந்தாங்க என்னடி காலைல போன் பேசிகிட்டு போய் ஆபீஸ் கிளம்பற வழிய பாருனாங்க. இல்லமா என் தோழிக்கு முட்டை பொரியல் செய்ய சொல்லி குடுத்தேன் அதான் பேசுனேன்னு சொன்னேன். அத கேட்டுட்டு எங்கம்மா சரி எப்படி சொன்ன சொல்லுனாங்க . கடைசி வரைக்கும் கேட்டுட்டு எங்க அம்மா சிரிச்சாங்களே ஒரு சிரிப்பு. அது ஏன்னுதான் புரியல உங்களுக்காவது புரியுதுங்களா?

Tuesday, July 10, 2007

கடலைன்னா என்ன???

ஹாய் ஹாய் ஹாய்..... மக்கள்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க? பாத்தே ரொம்ப நாளாச்சு. இதுக்கு மேல வராம இருந்தேனா இப்டி ஒருத்தி இருக்கறதே எல்லாருக்கும் மறந்து போயிடும்ன்ற பயத்துல வரல..... ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா ஒரு டாபிக் கிடச்சது. அதான் நம்ம மக்கள்ஸ் அறிவு எந்த அளவுக்கு பெருகி போயிருக்குனு பாக்கலாம்னுதான் வேக வேகமா ஓடி வந்தேன்.


எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.


கடலைன்னா என்ன?


போன வெள்ளி கிழமை என் ஃபோன் பில் கட்ட வரிசைல நின்னப்ப எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு. பின்னாடி ஒரு பையன். ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அந்த பையன் கொஞ்சம் லேட்டா வந்துட்டான். அவன் வரதுக்குள்ள நான் கரடி மாதிரி நடுவுல போயிட்டேன் போல. அவன் வந்ததும் அந்த பொண்ணு சைடுல வர சொல்லி கூப்பிட்டுச்சு. இனி ஓவர் டு கான்வர்சேஷன்


அவன் : அதான் உன்கிட்ட கடலை போடறதுக்குன்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே அவன்ட்ட கடலை போடு



அவள் : ஏ! அதுக்கு பேரு கடலை இல்ல



அவன் : கடலை இல்லாம வேற என்னவாம்?



அவள் : தெரிஞ்சவங்ககிட்ட பேசினா அதுக்கு பேரு கடலை இல்ல. தெரியாதவங்க கிட்ட தேவை இல்லாம பேசினாதான் கடலை



அவன் : யார் சொன்னா? ஒரு மேட்டரும் இல்லாம வெட்டியா நேரம் போறது தெரியாம பேசிட்டு இருந்தா அதுக்கு பேரு கடலை


இப்படியே அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. கடைசில ஒரு முடிவுக்கு வராமலே பேச்ச மாத்திட்டாங்க. அப்போதான் எனக்கு அந்த சரித்திர புகழ் வாய்ந்த சந்தேகம் வந்தது. கடலைன்னா என்ன?


நான் காலேஜ்ல படிக்கும்போது நல்லா சிரிச்சு பேசினாலே கடலை போடறன்னு ஓட்டுவாங்க. என் ஃப்ரெண்டு ஒருத்தி அப்படியே மூக்க பொத்திக்குவா(ஏன்னா கடலை ஓவரா வறுத்து தீஞ்சி போச்சாம்). அப்போல்லாம் சும்மா ஜாலிக்காக ஓட்டறதுக்கு இந்த பேரை யூஸ் பண்றாங்கன்னு நினைச்சேன். அப்புறமா ஒரு ஃப்ரெண்டு கோனார் நோட்ஸ் விளக்கவுரை கணக்கா விளக்கம் குடுத்தா. அதாவது பையனும் பொண்ணும் பேசினா அது கடலையாம். பொண்ணும் பொண்ணும் பேசினா அது மொக்கையாம். ஓ அப்படியா!ன்னு நானும் வாயப் பொளந்துட்டு கேட்டுட்டு இருந்துட்டேன்(என்ன பண்றது.... அவ்ளோ நல்ல பொண்ணு நானு).


அதுக்கப்புறம் ஒரு தடவை குமுதம்லயோ ஆ.வி.லயோ ஏதோ காலேஜ் பசங்க விளக்கம் கொடுத்துருந்தாங்க. அதாவது கடலை வறுக்கும்போது(நிஜ கடலைங்க) பாத்து கேர்ஃபுலா வறுக்கனுமாம். வறுபட்டுடுச்சுனு நினைச்சு பாத்தா வறுபடாம இருக்குமாம். இன்னும் வறுபடலைனு நினைச்சு நல்லா வறுத்தா தீஞ்சு போயிடுமாம். அந்த மாதிரிதான் பொண்ணுங்ககிட்ட பாத்து ஜாக்கிரதையா பேசனுமாம். அதனாலதான் பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறத கடலை வறுக்கறதுன்னு சொல்வாங்களாம். அது பேச்சு வாக்குல கடலை போடறதுன்னு மாறி போயிடுச்சாம். அப்போ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா இப்போ சந்தேகம் வந்துடுச்சு. அப்போ பொண்ணு பையன்கிட்ட பேசினா அதை என்னன்னு சொல்றது? சோ இந்த விளக்கமும் தப்பு.


யாராச்சும் சந்தேகத்த தீத்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும். சரியா பதில சொல்லி சந்தேகத்த தீத்து வைக்கறவங்களுக்கு பத்து பாக்கெட் கடலை வழங்கப்படும் என்பதை அறிவிக்கிறோம்.

Sunday, July 8, 2007

பாவனாவுக்கு காதல் தோல்வியாமே? அதுக்குன்னு இப்படியா?



டிஸ்கி: இந்த பதிவுக்கும் துபாய் தம்பிக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. :-P

Sunday, July 1, 2007

பஸ்ஸா? ட்ரேயினா?

போன கும்மியில் கும்மு கும்முன்னு கும்மி பின்னி பெடலெடுத்துட்டாரு சச்சின் கோப்ஸ். அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இந்த வாரத்தின் விவாத கும்மி என்னன்னு பார்ப்போம்.. வாங்க வாங்க..


பஸ்..
இதுல நாம ஏறுவது வாழ்க்கையில ஒரு பங்கு..
இது நம்ம மேலே ஏறுனா ஊதிடுவாங்க சங்கு..

வாழ்க்கையில ஏதாவது ஒரு சமயத்துலயாவது நாம பஸ்ஸுல ஏறியிருப்போம்.. சின்ன வயசுல நம்மளை நம்ம அம்மா அப்பா தூக்கிட்டு ஏறியிருப்பாங்க.. ஸ்கூல் படிக்கும்போது புத்தக மூட்டையை தோளில் சுமந்துட்டு தட்டு தடுமாறீ ஏறியிருப்போம். அப்புறம் காலேஜு படிக்கிறப்ப, அப்பா பைக் அல்லது கார் வாங்கி கொடுத்திருந்தாலும், அது ஒரு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறியிருப்போம். வேலை செய்யுறப்போ கம்பேனி பஸ்ல ஏறின அனுபவமாவது இருந்திருக்கும். இல்லன்னா, டூர் போறதுக்காவது நண்பர்களோட பஸ் பிடிச்சுட்டு போயிருப்போம்.

பஸ்.. அல்லது பேருந்து.. இதில் ஏறுவதிலும் நன்மைஸ் கொடுமைஸ்ன்னு ரெண்டு இருக்கு, நன்மைன்னு பார்த்தா (எப்படி பார்க்கிறதுன்னு யாருப்பா அங்கே கேட்குறது?) இப்படி பஸ்ஸுலதான் பல காதல் கதைகள் ஆரம்பிச்சிருக்கு.. கண்டதும் காதல், இடிச்சதும் காதல், டிக்கெட் வாங்கி கொடுத்தவுடன் காதல், கீழே விழ இருந்தவளை தாங்கி பிடிச்சதும் காதல்ன்னு லிஸ்ட்டு பெருசாகிட்டே போகுது. ஆனால், கொஞ்சம் தப்பா ஹேண்டல் பண்ணியிருந்தீங்கன்னா இது கொடுமையா மாறி உங்களை "மாமியார்" வீட்டுல சேர்த்திருப்பாங்க. இல்லையா?

அடுத்து, பஸ் எல்லா சந்து புந்துலேயும் போகும். இங்கே ஆட்டோதான் எல்லா சந்து புந்துலேயும் போகும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனால், இங்கே நாம் காம்பேர் பண்றது ரயிலுடந்தான். ரயில் தண்டவாளத்து மேலேதான் போகும். ஆனால், பஸ் ரோட்டு மேலேயே போகும்! (என்ன தத்துவம் .::மை ஃபிரண்ட்::. ஆஹா! ஆஹா!) இதனால் என்ன சொல்ல வர்றேனா, நீங்க உங்க வீட்டு முன்னுக்கே நின்னு பஸ் ஏறலாம். இல்லைன்னா ஒரு பத்து அடி தள்ளி நடந்தீங்கன்னா ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். வீதிக்கு வீதி இப்போ பஸ் ஸ்டாப் இருக்கே! ஆனா, இதுல என்ன கொடுமைன்னா எந்த பஸ்ஸும் ப்ஸ்ஸும் பஸ் ஸ்டாப்ல நிக்குறதே இல்ல!

இப்போ நாம பஸ்ஸோடு ஒப்பிட போவது ட்ரேயினைத்தான்.
வண்டி வண்டி ரயிலு வண்டி!
இந்த வண்டியில ஏறியிருக்கீங்களா ஆண்டி..

ரயில் வண்டியும் இப்போ எல்லா ஊரிலும் ஃபேமஸ்தான். கட்ட வண்டி (ஸ்லோவா போற ரயில்) -யில இருந்து எக்ஸ்ப்ரஸ், புல்லட் ட்ரேயின் வரைக்கும் இதுல சேர்த்துக்கலாம். ரோட்டு ஓரத்துல உள்ள தண்டவாலத்திலிருந்து, மண்ணுக்கு அடியிலும் ஓடுது! தலைக்கு மேலேயும் ஓடுது இந்த ரயிலு! ரயிலும் நிறைய காதலை வளர்த்திருக்கு.. நம்ம ஷக்தி-கார்த்திக் காதலும் இங்கதானே வளர்ந்தது? :P ஆனால், கொடுமை என்னன்னா, வெங்கடேஷ்-கீதா காதல் மாதிரி தப்பான காதலும் இங்கேயேதான் நடந்திருக்கு!

தண்டவாளத்துல ட்ராபிக் ஜேம் இல்ல. ஓடுது ஓடுது ரயிலு! அந்த ரயிலுக்கு முன்ன இல்ல இன்னொரு முயலு! சாரி ரயிலு! சோ, (நாகேஷை எல்லாம் கூப்பிட முடியாது! ஆன்லி சோ) ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்னு ஆபிஸ்ல நீங்க சாக்கு சொல்றதுக்கு சான்சே இல்ல.. சொன்ன டைமுக்கு ரயிலு ஸ்டேஷன்ல நிக்கும்.. அதைவிட முக்கியமான பாய்ண்ட் என்னன்னா, ட்ரேயின், ட்ரேயின் ஸ்டேஷன்லதான் நிக்கும்.. ஆனா பஸ், ப்ஸ் ஸ்டேஷன்ல நிக்குமா? இதுல பஸ் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு எப்போ வரும் எப்படி வரும்ன்னு தெரியாது! ஆன வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வராதுன்னு சொல்வாங்க.. அதானே!


இப்படி நிறைய.. ரொம்ப நிறைய சொல்லிட்டே போகலாம். மத்த பாய்ண்ட்டுகளை நீங்களே கொஞ்சம் அள்ளி தெளிச்சு, விளக்கமா கும்மி.. உங்க வோட்டு ட்ரேயினுக்கே! பஸ்ஸுக்கே!ன்னு சொல்லி ஓட்டு குத்திட்டு போங்கப்பா!
பி.கு: இந்த வார காமெடி சிற்பி சந்தோஷுக்கு கைத்தட்டி உங்க ஆரவாரத்தை தெரிவிங்கப்பா! :-)

 

BLOGKUT.COM