Wednesday, March 18, 2009

நம்மூரு சென்னையிலே

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்க, பிரேமின் அண்ணன் வெங்கட் பிரபு பாட ஒரு பாடல் வெளிவந்தது.



பாடல்: நம்மூர சென்னையிலே நாள்தோறும் வீதியிலே

பல நூறு பொண்ணுங்கள பாத்தேனே
......
.....

பச்சோந்தி தேவலடா, அந்த பொண்ணுங்க மோசமடா
அந்த விஷயம்கூட தேவலடா, நம்ம ஆபத்து பொண்ணுங்கடா..

என்று வரும் அப்பாடல்.


இந்த பாடலை கேட்டு கொதித்து எழுந்த சில தோழிகளின் கோபங்களை அடக்க முடியவில்லை. online chat status, facebook status, orkut community- இப்படி எல்லா இடங்களிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிகளிடம் நான் சொன்னது,



"விடு விடு.... சில பொண்ணுங்க உண்மையிலே அப்படி தானே... சும்மா பாட்டு தானே விட்டு தள்ளு."



எனக்கும் சேர்த்தே கண்டனம் தெரிவித்து, வன்மையாக கண்டித்தனர். ஹாஹா... என்ன செய்ய? அவர்களிடம் அதிகாரப்பூர்வமான ஒரு மன்னிப்பை போட்டு, அவர்கள் அமைத்த திடீர் சங்கத்திற்கு என்னை உறுப்பினராக மாற்றிவிட்டனர். எனக்கு கொடுத்த முதல் வேலை, சங்கத்திற்கு ஒரு tagline அமைப்பது. மூளையை கசக்கி பிழிந்து யோசித்தால்... ஒன்னும் வேலைக்கு ஆகல.



ஆக, ஒரு முடிவுக்கு வந்தேன். ஏதேனும் ஒன்றை ரீமேக் பண்ணிவிடலாம்னு.

ஆட்டோ பின்னாடி பார்த்திருக்கும் வாசகம்,



"சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே!"



ரீமேக் செய்த வடிவம்,



"அச்சுறுத்தும் அனக்கோண்டாவை நம்பு, ஆசையாய் பேசும் ஆண்களை நம்பாதே!"



மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

Thursday, March 5, 2009

ஆண்களின் டைரியிலிருந்து....

ஆண்கள் பெண்களிடம் சொல்லும் சட்டங்கள்:

  1. ஞாயிற்றுகிழமை= கிரிக்கெட் பார்த்தல். எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று
  2. shopping கிரிக்கெட் மாதிரி அல்ல. அப்படி நாங்க நினைக்கபோவதும் இல்ல.
  3. அழுவது என்பது blackmail.
  4. உங்களுக்கு ஒன்னு வேணும்னு, தெளிவா சொல்லிடுங்க. மறைமுகமா கேட்பது, புதிர் போட்டு பேசுவது, தெளிவா குழப்புவது- இது எதுவுமே வேலைக்கு ஆகாது!
  5. பிறந்தநாட்களும், கல்யாண தேதியும் எங்களுக்கு நினைவில் இருக்காது. ஆக, அவற்றை நாள்காட்டியில் குறித்துவைங்க. எங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க, ப்ளீஸ்!
  6. 'ஆம்' மற்றும் 'இல்லை'- இவை இரண்டுமே சமமான பதில்கள், எல்லா கேள்விகளுக்குமே.
  7. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மட்டுமே எங்களிடம் வாங்க. அனுதாபம் வேண்டும் என்றால் உங்களோட படித்த எல்கேஜி தோழிகளை போய் பாருங்க.
  8. நாங்கள் 6 மாசத்துக்கு முன்னாடி சொன்னவற்றை இன்று போடும் சண்டையில் இழுக்க கூடாது. நாங்கள் என்ன சொன்னாலும், 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.
  9. நீங்கள் குண்டாக இருக்கீங்கன்னு நினைத்தால், நினைத்துகொள்ளுங்கள். உண்மையிலே நீங்க அப்படிதான். எங்ககிட்டு வந்து கேட்காதீங்க. பதில் சொல்ல விருப்பமில்லை.
  10. நாங்கள் சொல்வது சில, உங்களை காயப்படுத்தும் அல்லது கோபப்படுத்தும். எங்கள் நோக்கம் இரண்டுமே.
  11. எங்களிடம் ஒன்றை செய்ய சொல்லுங்கள் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் சொல்லாதீங்க. அந்த வேலையை பற்றி முழுமையா தெரிந்தால், நீங்களே செய்யலாம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல.
  12. எது சொல்ல வேண்டும் என்றாலும், டிவி விளம்பரங்கள் நேரத்தில் மட்டுமே சொல்லுங்க. live match நடந்து கொண்டிருக்கும்போது....மூச்!!
  13. கோலாம்பஸுக்கு திசைகள் தேவைப்பட்டது இல்லை. நாங்களும் அப்படிதான். காரில் செல்லும்போது கொஞ்ச நேரம்.....'shut up'
  14. எங்களிடம் உலக பொருளாதாரம், அமெரிக்கா வரலாறு, கிரிக்கெட், மொக்கை ஜோக்ஸ்-இதை பத்தி பேச விருப்பம் என்றால் மட்டுமே கேளுங்க இல்லை என்றால் நாங்கள் அமைதியாக இருக்கும்போது என்ன நினைக்குறீங்க என்று கேட்காதீங்க.
  15. I am in shape. ROUND is a shape too.
இதை உங்க மனைவியிடம் சொன்னால், நீங்க அநேகமா இன்று இரவு ஹாலில் அல்லது வீட்டு திணையில் தான் படுக்க நேரிடும். இருந்தாலும் பரவாயில்ல, camping போன உணர்வு கிடைக்கும்! அப்படி வெளியே படுக்க பயம் என்றால், உடனே ஒரு ரோஜா பூவை வாங்கி மனைவிடம் கொடுத்து இதை சொல்லுங்க,

"happy women's day!"

கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க. மார்ச் 8ஆம் தேதி அன்று மகளிர் தினத்தை கொண்டாடும் அனைத்து பெண்களுக்கு எங்க சங்கத்தின் வாழ்த்துகள்!:)

Monday, February 16, 2009

surya vs goundamani!

Saturday, February 14, 2009

கண்டதும் காதல்? கண்டதெல்லாம் காதல்!

அனைவருக்கும் ப.பா. சங்கத்தின் அன்பர் தின வாழ்த்துகள்.

அப்படின்னா என்னவா?

அதாங்க காதலர் தின வாழ்த்துகளை தான் அப்படி பொதுவா சொல்கிறோம்.

இன்று நிறைய டீவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள். நேற்று 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியில் காதலை பத்தி பேசுனாங்க.

காலையில் எனக்கு வந்த ஸ் எம் ஸ்,

"ஏப்ரல் 1 தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் என்ன வித்தியாசம்?
ஏப்ரல் 1- முட்டாள்கள் தினம்
பிப்ரவரி 14- முட்டாள்கள் ஆகும் தினம்"

இப்படி ஒரே காதல் விஷயமா இருந்துச்சா.. சரி அத பத்தி ஏதாச்சு எழுதலாமேன்னு வந்தேன்.

காதல் என்பது கழிட்டு போட்ட ஷூ மாதிரி.. சைஸ் சரியா இருந்தா.. யாரு வேணாலும் போட்டுகிட்டு போகலாம்.

ஐயோ அப்படின்னு நான் சொல்லல. என் காலேஜ் நண்பர் ஒருத்தன் அடிக்கடி சொல்வான். சொன்னது காமெடியாக இருந்தாலும், காதல் என்பது ரொம்ப சீரியஸான மேட்டர். அந்த seriousness இன்று மட்டும் ரொம்ப தூக்கலா இருப்பது ஆச்சிரியமா இருக்கு.

காதலர்கள் என்ன செய்யலாம் இன்று?
ரோஸ் மற்றும் வாழ்த்து அட்டை வாங்கி கொடுங்க.

காதல் பிடிக்காதவர்கள் என்ன செய்யலாம் இன்று?
ரோஸ் மற்றும் வாழ்த்து அட்டை விற்கும் கடை போடுங்க. செம்ம collection வரும்!

நேற்று இரவு தோழியிடம் உரையாடி கொண்டிருந்தேன் தொலைபேசியில்,

தோழி: ஏய் நாளைக்கு என்ன ஸ்பெஷல்?

நான்: அம்மா, மட்டன் குழம்பு வைக்க போறாங்க.

தோழி: அட ச்சி, அது இல்ல. ஏதாச்சு டேடிங்?

நான்: ஆமா!

தோழி: ஓ மை காட்! நீயா? யாரு அவரு?

நான்: உனக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும்.

தோழி: என்னடி சொல்லவே இல்ல.

நான்: நீ கேட்கவே இல்ல.

தோழி: எத்தன நாளா தெரியும்.

நான்: சின்ன பிள்ளையா இருக்கும்போதே தெரியும்.

தோழி: யூ மின் childhood love?

நான்: அட ச்சே, லவ் எல்லாம் கிடையாது? மரியாதை, ரொம்ப பிடிக்கும் அவர...

தோழி: ஓ ஓ...அப்படி போகுதா கதை. ஆமா எனக்கு தெரியும்னு சொன்னீயே, பார்த்து இருக்கேனா...

நான்: ம்ம்... பாத்து இருக்கே...

தோழி: எப்போ, எங்க?

நான்: போன வாரம் நம்ம வெளியே போனோமே...அப்போ.

தோழி: என்னடி குழப்புறே? நம்ம இரண்டு பேரும் மட்டும் தானே வெளியே போனோம்... யாரு நம்மகூட வந்தா... சரி அவரு பெயரு என்ன?

நான்: ஹாஹா.... நான் நாளைக்கு ஆஞ்ஜநயா கோயிலுக்கு போறேன் டி. ஜே ஆஞ்ஜநயா!

தோழி: what!!!!!??? valentine's day அன்னிக்கு ஆஞ்ஜநயா கோயிலுக்கு போறே! ஓ மை கடவுளே!!!

இன்னொரு முறை, அனைவருக்கும் இந்த ஆஞ்ஜநயா பக்தையின் காதலர் தின வாழ்த்துகள்

Wednesday, February 4, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (2)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

தொடர்கிறது ஷோ...

போன ஷோல கொடுத்த ஷாக்கால மீள முடியாமல், தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தேன்.

நான்: அவங்க குஷ்புவா??? ஏன்? எதுக்கு இந்த விபரீதம்?

தேவா: இந்த படத்துக்கு நிறைய ரிசுக்கு எடுத்து இருக்கோம். அதுல இதுவும் ஒன்னு.

(தலையில் அடித்து கொண்டு தொடர்ந்தேன்.)

நான்: வேற என்னென்ன ரிசுக்கு எடுத்து இருக்கீங்க, தேவா?

(விஜய் குறிக்கீட்டு பதில் அளித்தார்.)

விஜய்: நயன் தாராவ ஹீரோயினா போட்டது. வடிவேலு காமெடி.

நான்: வர வர நீங்களே நல்ல காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.... அப்பரம் தேவா, உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் எப்படி தெலுங்கு பாடல்கள் சாயலே பண்ணீங்க?


(தேவா பதில் அளிக்கும் முன் விஜய் பேசினார்)


விஜய்: இந்த படத்துல 6 பாட்டு இருக்கு. அதுல 4 பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு.


நான்: ஏன், மத்த இரண்டும் original tuneஆ?


(விஜய் முறைப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.)


தேவா: ரொம்ப peppy சாங்ஸ் வேணும்னு கேட்டேன்... அதான் இப்படி வந்து இருக்கு.


நான்: ஒகே விஜய், உங்ககிட்ட ஒரு கேள்வி. முன்பெல்லாம் ரஜினி மாதிரி காபி அடிப்பீங்க...இப்ப திடீரென்னு எம் ஜி ஆர காபி அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..எப்படி? இந்த படத்துல ஒரு வசனம் வருது 'தலைவர் வழில போனா எல்லாம் success தான்'. அப்பன்னா, நீங்க அரசியலுக்கு போக போறீங்களா?


தேவா: சாதாரணமா ஒரு கேள்வி கேட்டாலே, ரொம்ப நேரம் கழித்து தான் உதட்டை அசைக்காமல் பதில் சொல்வாரு சார். நீங்க ஒரே நேரத்துல இத்தன கேள்வி கேட்டா, என்ன ஆவரது? நான் போய் டீ குடிச்சுட்டு மெதுவா வரேன். அவரு யோசிச்சு முடிக்கட்டும்.


விஜய்: நோ சார், இதோ சொல்றேன்.... உங்க கேள்விக்கு என் பதில்- அப்பாவ கேட்டு தான் சொல்லனும்!


நான்: இப்படி ஒரு பதிலா?? என்ன கொடுமை விஜய் இது! சரி...விடுங்க... உங்களுக்கு physics பத்தி எதுவுமே தெரியாதா?


விஜய்: physics...? அது யாரு நடிச்ச தெலுங்கு படம்?


நான்: என்னது தெலுங்கு படமா? யோவ்...physicsயா! physics! newton's first law, 2nd law, 3rd law, force, friction, density...இப்படியலாம் வருமே...அத சொன்னேன்!


தேவா: கூல்... கூல்...டென்ஷன் ஆகாதீங்க... விஜய் எப்பவுமே இப்படி தான்!


(டென்ஷனை கட்டுப்படுத்தி கொண்டு தொடர்ந்தேன்...)


நான்: ஏன் physics பத்தி கேட்டேனா? உங்க படத்துல...ஏறி ஏறி சண்ட போடுறீங்க...பறந்து பறந்து சண்ட... ஆகாயத்துல, தண்ணிக்குள்ள சண்ட...இப்படி physics படிச்ச எங்கள முட்டாளாக்க பாக்குறீங்களே...அதுக்கு கேட்டேன். உங்க இம்சைக்கு அளவே இல்லையா!


தேவா: தப்புதான். நான் அப்பவே சொன்னேன். நேரா வெண்வெளிக்கு போய் அங்க ஒரு சண்ட காட்சி வைப்போம்னு. கேட்குல. அங்க வச்சு இருந்தா, இந்த physics பிரச்சனையல்லாம் வந்து இருக்காது பாருங்க...


விஜய்: அடுத்த படத்துல செட் போட்டு பண்ணிடலாம் சார்.


தேவா: செட்டா? நோ....நம்ம நேரா அங்க போய் ரியலா எடுக்கனும். இப்ப ஜனங்க realistic படங்கள எதிர்ப்பாக்குறாங்க.


நான்: நீங்க realistic படம் எடுக்க போறீங்களா! யப்பா சாமி, என்னைய நீ தான் காப்பாத்தனும்!


தேவா: அடுத்து அவரோட 51வது படத்துல 51 கெட்டப்ல வராரு பாருங்க... தமிழ்நாடே அதிரும்!


நான்: ஒரு வித்தியாசமும் இல்லாம வருவார்.. அதானே!


(விஜய் பாவமாக முகத்தை வைத்து கொண்டு சோகமாக இருந்தார்...)


நான்: சரி சரி... ஷோ முடியும் வேளையில் ஒரு சந்தோஷமான விஷயம்.


(விஜய் குஷியாகி விட்டார்...தேவா புன்னகையித்தார்)


நான்: என் பாட்டி ஒன்னு கொடுத்து அனுப்பிவிட்டாங்க.


இருவரும்: என்னது?


நான்: துணி காய போட என் வீட்டுல கொடி அறுந்துபோச்சு. விஜய் சார், நீங்க வில்லு படத்துல entry கொடுத்த மாதிரி ஒரு அரை மணி நேரம் நின்னீங்கன்னா, துணிய காய வச்சுட்டு போயிடுவேன், தெங்ஸ்.




மீண்டும் அடுத்த ஷோவுல சந்திப்போம்.

Wednesday, January 28, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

கொலை பண்றதுல பலவிதம் இருக்கு. சிலர் கத்திய வச்சு கொலை பண்ணுவாங்க,சிலர் கத்தி பேசி கொலை பண்ணுவாங்க, சிலர் பாட்டு பாடி கொலை பண்ணுவாங்க, சிலர் டான்ஸ் ஆடி கொலை பண்ணுவாங்க, எல்லாத்தையும் தாண்டி, சிலர் நடிப்பு என்ற பெயரில் கொலை பண்ணுவாங்க. அந்த வரிசையில் உலகம் அறிந்த இருவரைதான் இன்னிங்க நம்ம ஷோல சந்திக்க போறோம், அவங்க வேறு யாருமில்ல

the one and only பல்லு...ச்சி...வில்லு பட நாயகன், இளைய தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார், இன்றைய இளையர்களின் நாடி துடிப்பு, என்றைக்குமே பெண்களின் சமையல் அடுப்பு, சமுதாயத்திலுள்ள தீமைகளை ஒழிக்க வந்த துடுப்பு....

(சத்தம் போடாமல் விஜய்: ஏங்க கொஞ்ச சீக்கிரம் கூப்பிடுங்க...இப்படியே சொல்லி, எப்ப முடிப்பீங்க?)

நம்ம தமிழ்நாட்டின் சிங்கம் விஜய் அவர்களையும், அவரை வச்சு படம் பண்ண இயக்குனர் சிகரம் பிரபுதேவா அவர்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

(இருவரும் வந்து அமர்கிறார்கள்)

நான்: வாங்க, வாங்க, இன்னிக்கு உங்கள வச்சு தான் காமெடி பண்ண போறேன்.

தேவா: என்னது? (முழித்தார்)

நான்: சாரி, ஐ மின் ஷோ பண்ண போறேன்னு சொல்ல வந்தேன்.

(தாடியை தடவி கொண்டார் தேவா)

நான்: தேவா, சொல்லுங்க, எப்படி இப்படி ஒரு படம் பண்ணனும்னு தோனிச்சு?

தேவா: விஜய வச்சு வேற என்ன பண்ண முடியும்? அதான் இப்படி ஒரு படம் பண்ணலாம்னு...

நான்: அட... இது நல்லா இருக்கு.

( தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று தெரியாமல் முழித்தார் விஜய்)

நான்: விஜய், சொல்லுங்க, உங்க படங்கள டான்ஸுக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கே... அது எப்படி. நீங்களே விரும்பி கேட்குறதா, இல்ல அதுவா அமையுதா...

விஜய்: நீங்க வேற, வயத்தெறிச்சல கிளப்பாதீங்க... என்கிட்ட வரவங்க எல்லாம் 5 டான்ஸ்/ பாட்டுடோட தான் வராங்க. அதுக்கு அப்பரம் தான், அத சுத்தி ஒரு கதைய பண்ணி, படமா எடுக்குறோம்.

தேவா: இந்த படத்துல 6 பாட்டுமே சூப்பர் ஹிட். படம் பாக்கும்போதே ஒரு james bond படம் பார்க்குற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.

நான்: ஓ.. எந்த james bond படத்துல 6 பாட்டு இருக்குன்னு கொஞ்ச சொல்லுறீங்களா?

(நான் சொன்னதை கேட்டு ஃபிரண்ஸ் படத்தில் வடிவேலு தலையில் தார் கொட்டியபிறகு விஜய் சிரிப்பாரே, அதே போல சிரிக்க ஆரம்பித்துவிட்டார் இங்க, விஜய்)

தேவா: என்ன விஜய், நக்கலா இருக்கா?
அப்படி சொல்ல வரல....வில்லுன்னு ஒரு positive energy கிடைச்ச மாதிரி இருந்துச்சு.. அந்த காலத்து...(என்று ஆரம்பித்தார்)

நான்: அந்த காலத்து எம் ஜி ஆர் படம் மாதிரி இருக்கும். படம் பார்த்தா ஒரு exhibitionக்குள்ள போன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். இத தானே சொல்ல வந்தீங்க?

தேவா: எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?

நான்: ஆமா, பொங்கல் அன்னிக்கு எந்த சேனல திருப்பினாலும் இதே டயலாக், இதே பேச்சு.

விஜய்: அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சுன்னு பேச மாட்டோம். எப்பவுமே ஒரே பேச்சு தான்!

தேவா: சார், சூப்பர் சார்! நம்ம அடுத்த படத்துக்கு இதையே பஞ் டயலாக்கா வச்சுடுவோம்.

(இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.)

நான்: அட ராமா...

தேவா: ஏய் ராமா ராமா பாட்டு உங்களுக்கு பிடிக்குமா?

நான்: என்னனமோ பிடிச்சுருக்கு, இத பிடிக்காதா. ஆமா, உங்ககிட்ட ஒரு கேள்வி. இந்த பாட்டுல எப்படி graphics சேர்க்கலாம்னு ஐடியா வந்துச்சு?

(இருவரும் குழப்பம் அடைந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்)

விஜய்: நீங்க என்ன சொல்லவறீங்க?

நான்: ஆமாங்க, எத்தனையோ டான்சர்ஸ் இருந்தாலும், 5 அடி இட்லி குண்டா மாதிரி graphicsல போட்டு விஜயோட ஆடவிட்டீங்க பாத்தீங்களா...அங்க தான் நீங்க நிக்குறீங்க.

தேவா(சிரித்து கொண்டே): ஐயோ அது இட்லி குண்டாவும் இல்ல, graphicsம் இல்ல. அது குஷ்பு மேடம்!

நான்: குஷ்புவா?????????????

(இவங்கள கிண்டல் பண்ணி முடிக்க ஒரு ஷோ போதாது என்பதால் அடுத்த வாரமும் தொடரும்)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா
(-2)

Tuesday, January 13, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

சிலம்பாட்டத்தில் சிலம்பரசன் ஆடிய ஆட்டத்தை இனி வரும் 7 ஜென்மங்களிலும் மறக்க முடியாது. நான் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது "சிம்புக்கு மட்டும் தான் இப்படி ஆட தெரியுமா?" ஏன் நம்மளும் ஆடலாமேன்னு என் மனதில் தோன்றியது. சிலம்பரசன் ஆடும் சிலம்பாட்டத்தை ரசிக்க முடிந்ததோ இல்லையோ, இனி வர போகும்
வலைப்பூவரசன்/வலைப்பூவரசி ஆடும் வலைப்பூஆட்டத்தை பாருங்கோ....

நம்மில் எத்தனையோ பேருக்கு எழுத்து திறமை இருக்கும் ஆனால் ஆடல் திறமை இருக்கிறதோ இல்லையோ என்று நிறைய வலைப்பூ எழுத்தாளர்கள் யோசித்து இருப்பாங்க....

ஆக, இன்று நாம் ஆடும் திறனை வளர்த்து கொண்டு சிலம்பரசனையும் தாண்டி வேற ஒரு லெவலுக்கு கொண்டு போக போறேன் உங்களை. சிறப்பா செய்ய போறோம் ஜி!

முதலில் குரு நமஸ்காரம். ஒரு கண்ணில் சிம்புவையும் மறுகண்ணில் விஜயையும் நினைத்து கொண்டு மூன்று முறை எச்சி துப்புங்கோ. அது தான் குரு நமஸ்காரம்.

இனி நம்ம ஆட போகும் ஸ்டெப் ரொம்ப கஷ்டம். அதனால, உங்க கணினவிட்டு கொஞ்ச தள்ளி நில்லுங்க. ஆபிஸுல இருந்தா, பக்கத்தில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்து கொண்டு ஆடலாம். வீட்டில் இருந்தா, பாட்டி, தாத்தா இப்படி யாரேனும் கம்பெனிக்கு கூப்பிடலாம்.

ஒகே....ரெடி....

என்னது? இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களா? அட...உட்கார்ந்துகிட்டே எப்படிங்க ஆடுறது... நான் உங்கள சிம்பு, விஜய் அளவுக்கு கொண்டு போக பாக்குறேன்..நீங்க இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களே...

சரி எழுந்து நில்லுங்க.

1,2,3,4
தொடையில் இரண்டு தடவ அடிக்கனும்.

5,6,7,8
தலையில் இரண்டு தடவ அடிக்கனும்.

1,2,3,4
கீழே உட்காரனும். பந்தியில் இலை சாப்பாடு போட்டு இருக்கும்போது நாம் உட்கார்ந்து கொள்வோமே, அந்த மாதிரி உட்காரனும். சாப்பிடுவதுபோல பாவனை செய்யனும்.

5,6,7,8
டக்குனு மேல எழுந்திருச்சு வலது பக்கத்துக்கு குதிக்கனும்.

இது தான் ஸ்டெப். இதையே 4 முறை செய்தால்...கிட்டதட்ட... இப்படி ஆடிவிடலாம்.

 

BLOGKUT.COM