சிலம்பாட்டத்தில் சிலம்பரசன் ஆடிய ஆட்டத்தை இனி வரும் 7 ஜென்மங்களிலும் மறக்க முடியாது. நான் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது "சிம்புக்கு மட்டும் தான் இப்படி ஆட தெரியுமா?" ஏன் நம்மளும் ஆடலாமேன்னு என் மனதில் தோன்றியது. சிலம்பரசன் ஆடும் சிலம்பாட்டத்தை ரசிக்க முடிந்ததோ இல்லையோ, இனி வர போகும்
வலைப்பூவரசன்/வலைப்பூவரசி ஆடும் வலைப்பூஆட்டத்தை பாருங்கோ....
நம்மில் எத்தனையோ பேருக்கு எழுத்து திறமை இருக்கும் ஆனால் ஆடல் திறமை இருக்கிறதோ இல்லையோ என்று நிறைய வலைப்பூ எழுத்தாளர்கள் யோசித்து இருப்பாங்க....
ஆக, இன்று நாம் ஆடும் திறனை வளர்த்து கொண்டு சிலம்பரசனையும் தாண்டி வேற ஒரு லெவலுக்கு கொண்டு போக போறேன் உங்களை. சிறப்பா செய்ய போறோம் ஜி!
முதலில் குரு நமஸ்காரம். ஒரு கண்ணில் சிம்புவையும் மறுகண்ணில் விஜயையும் நினைத்து கொண்டு மூன்று முறை எச்சி துப்புங்கோ. அது தான் குரு நமஸ்காரம்.
இனி நம்ம ஆட போகும் ஸ்டெப் ரொம்ப கஷ்டம். அதனால, உங்க கணினவிட்டு கொஞ்ச தள்ளி நில்லுங்க. ஆபிஸுல இருந்தா, பக்கத்தில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்து கொண்டு ஆடலாம். வீட்டில் இருந்தா, பாட்டி, தாத்தா இப்படி யாரேனும் கம்பெனிக்கு கூப்பிடலாம்.
ஒகே....ரெடி....
என்னது? இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களா? அட...உட்கார்ந்துகிட்டே எப்படிங்க ஆடுறது... நான் உங்கள சிம்பு, விஜய் அளவுக்கு கொண்டு போக பாக்குறேன்..நீங்க இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களே...
சரி எழுந்து நில்லுங்க.
1,2,3,4
தொடையில் இரண்டு தடவ அடிக்கனும்.
5,6,7,8
தலையில் இரண்டு தடவ அடிக்கனும்.
1,2,3,4
கீழே உட்காரனும். பந்தியில் இலை சாப்பாடு போட்டு இருக்கும்போது நாம் உட்கார்ந்து கொள்வோமே, அந்த மாதிரி உட்காரனும். சாப்பிடுவதுபோல பாவனை செய்யனும்.
5,6,7,8
டக்குனு மேல எழுந்திருச்சு வலது பக்கத்துக்கு குதிக்கனும்.
இது தான் ஸ்டெப். இதையே 4 முறை செய்தால்...கிட்டதட்ட... இப்படி ஆடிவிடலாம்.
Tuesday, January 13, 2009
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 9:22 PM 0 சிரிப்பொலிகள்
Friday, January 2, 2009
நீங்க பார்த்தா ‘சைட் அடிக்குறீங்க’, நாங்க பார்த்தா ‘just looking'
இரண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் என் பள்ளி நண்பர்கள் ,10 பேரும் கடற்கரைக்கு போனோம். ஒரு மெகா pinic! சாப்பாடு,plastic தட்டுகள், mats, கூல் டிரிங்ஸ்- இப்படி ஆளுக்கு ஒன்னு கொண்டு வந்தோம். ஆனா முக்கியமா எல்லாருமே கொண்டு போனது cooling glasses. வெயில் அடிக்குதோ இல்லையோ எல்லாரும் அத மாட்டிகிட்டோம்.
தோழன்: இத போட்டா, எவ்வளவு வசதி தெரியுமா?
தோழி: ஆமா ஆமா...அப்ப தானே வர போற பொண்ணுங்கள சைட் அடிக்க முடியும்.
தோழன்: நீங்க மட்டும் எதுக்கு போடுறீங்களாம்...நல்ல வெள்ளையா ஒரு வெள்ளக்காரன் வந்தா போதுமே...எல்லாம் ஜொல்லு விட்டுகிட்டு இருப்பீங்களே....
அப்போது ஒரு வெள்ளைக்காரன் நாய்க்குட்டியோடு ஜாக்கிங் சென்றார். 6-பெக் வேற.
தோழன்: ஏய் ஏய்....பொண்ணுங்களா...இந்தாங்க டிஷு பேப்பர். வாய துடைச்சுக்குங்கோ....ஜொல்லு வழியுது.
தோழி: ஹேய் தோஸ்த், shut up ya. நாங்க just looking.
தோழன்: ஏய் இங்க பாருங்கடா, நாங்க செஞ்ச அத சைட் அடிக்குறது...நீங்க பண்ண அதுக்கு வேற பெயரு...என்னங்கடி நியாயம் இது.
ஒருத்தி மட்டும் அந்த வெள்ளைக்காரனையே பார்த்து கொண்டிருந்தாள்.
நான்: ஏய், விடு விடு... அவரு போய் அரை மணி நேரம் ஆச்சு.
அவள்: நான் ஒன்னும் அவர பாக்கல்ல.... நாய்க்குட்டிய...
(என்று முடிப்பதற்கு)
நான்: அட பாவி.... என்னது? மனதிர்களை தாண்டி, நாய்க்குட்டியையும் சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டீயா!
தோழர்கள்: மனிதர்கள் புரிந்த கொள்ள இது சாதாரண ‘just looking' அல்ல...அதையும் தாண்டி புனிதமானது! புனிதமானது!
அவள்: கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா....look at that puppy. so cute... guys are total waste. i have lost hope on them.
நான்: ஏய் என்ன ஆச்சு உனக்கு?
இன்னொரு தோழி: ஓ...அவ லவ் failureனால இப்படி பேசுறா...
மறுபடியும் அவள்: அப்படி ஒன்னுமில்ல....basically guys are...Eeeeeeeeee....
நான்: இல்ல மேன். நீ தப்பா புரிஞ்சுகிட்ட.... எல்லாம் ஆண்கள்கிட்டயும் ஒரு speciality இருக்கு. அத நம்ம தான் புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும்.
அனைத்து தோழிகளும்: ஏய் என்ன சொல்ல வர?
தோழர்களும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர்.
நான் தொடங்கினேன்.
இங்க பாருங்க. பசங்கள 5 வகையா பிரிக்கலாம்- cute, hot,good looking, handsome, attractive.
cute- இவங்க பேரழகர் என்று சொல்ல முடியாது. ஆனால் சுமார் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்கள். எப்படி ஒரு குழந்தை படத்தை நாம் ரசித்து பார்ப்போமோ அப்படி தான் இவர்களும். for example, கண்ணாடி போட்டு இருப்பாங்க. அந்த கண்ணாடி போடும் விதமும் ஒரு ஸ்டையலா இருக்கும். எப்போதுமே வேலை வேலையின்னு இருப்பாங்க. சில விசித்திரமான குணங்கள் இருக்கும்-for example, crossword puzzle போட பிடிக்கும்.
hot- சல்மான் கான், ஷாருக் கான், விவேக் ஓப்ராய், அமீர் கான், சூர்யா, விஷால், மாதவன், வினேய்....இவர்கள் போன்றவர்கள் hot. பார்த்தவுடனே பெண்கள் வாவ் என்று சொல்லும் ரகம். படங்களில், உடற்பயிற்சி நிலையங்களில் மட்டுமே காண முடியும். அந்த நிமிடத்திற்கு பார்க்க தோன்றும். ஆனால், நாளடைவில் அவர்கள் மேல் இருக்கும் மோகம் குறைந்துவிடும். இப்போ, இன்னிக்கு எனக்கு அமீர் கான பிடிக்கும். நாளைக்கு இன்னொரு ஆள பிடிக்கும். சோ....இப்படிப்பட்டவர்கள் ரொம்ப ரொம்ப temporary.
handsome-இவர்கள் தான் நம்ம பக்கத்துவீட்டுல, பக்கத்து தெருவுல, காலேஜ்ல, பஸ் ஸ்டாப்ல, அத்தை பையன், மாமா பையன்...இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். இயல்பான நமது வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேரிடும் நபர்கள். மனசுக்கும் சரி கண்ணுக்கும் சரி ரொம்ப பிடிச்சிருக்கும்.
(இடையில் தோழி கேட்டாள்...handsome, good-looking ஒன்னு தானே...அதுக்கு ஏன் இரண்டு category..)
நான்,
இது ஒரு நல்ல கேள்வி. அதாவது கண்ணுகளா.... handsome, good-looking இடையே ஒரு சின்ன வித்தியாசம். பார்த்தவுடனே handsome என்று வாயில் வந்துவிடும். ஆனால், ஒருத்தர் good-looking என்று உடனே சொல்ல வராது. பழகி, பேசி அவங்கள புரிஞ்சிகிட்டு, அவங்க குறைகளையும் ஏத்துக்கும்போது தான் good-looking என்று மனசு சொல்லும். ஆக, மூளை மட்டும் சொன்னால் அது 'handsome' மனசும் சேர்த்து சொன்னா அவர் 'good-looking' வகையை சேர்ந்தவர்.
கடைசியா attractive- இந்த வகையை சேர்ந்தவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஆண்களின் ஸ்பெஷல் என்னவென்றால் அவர்களின் mannerisms. இப்போ உதாரணத்திற்கு கௌதம் மேனன் தெரியுமா....
தோழி: ஓ...that வாரணம் ஆயிரம் இயக்குனர்...
நான்: அவரே தான். அவர் இந்த attractive வகையை சேர்ந்தவர். அவர் காதோரம் நரைத்திருக்கும். அவர் கைஅசைத்து பேசும்விதம். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும்விதம். அடிக்கடி சட்டையை முன்னாடி இழுத்து கொள்ளும் mannerism. இப்படி physical features தாண்டி ஒரு அழகு தெரியும். அது தான் attractiveness... ஸ்டிபன் தேவசி தெரியுமா... அந்த keyboard player... அவர் வாசிக்கும்போது அவர் விரல் இசை பேசும். அவரும் இந்த வகையை சேர்ந்தவர் தான்!
தோழி: எப்படி இப்படி!!!
நான்: ஆராய்ச்சி செஞ்சிருக்கோம்ல.
தோழர்கள்: அப்போ நான் எந்த வகையை சேர்ந்தவன்?
நான்: சாரி...இன்னிக்கு கிளாஸ் அவ்வளவு தான். ஹாஹா...
சோகமாக பேசிய தோழியிடம் சென்று
“ஏய் cheer up. உலகத்துல உள்ள எல்லா ஆண்களும் ஏதோ ஒரு வகையில அழகு தான். don't worry babe!"
தொடங்கினோம்....சைட் அடிக்க இல்லேங்க...சாப்பிட!:)
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 12:59 PM 8 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: ஆண்கள், இது உண்மை, சும்மா ஜாலிக்கு
Friday, November 21, 2008
மீட்பு நடவடிக்கை
அந்த அலுவலகம் ஒரே களேபரமாய் இருந்தது.
ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தனர்.
ஊழியர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.
சத்தமாக கூச்சலிட்டு விவாதித்தனர்.
யாரும் வேலை செய்யவில்லை.இருக்கையை விட்டு வந்து ஆலோசனை செய்தனர்.
அவசரக் கூட்டம் போட்டு அதிரடி முடிவெடுக்க ஏற்பாடானது
புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் பயத்துடன் இருக்கையிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பி மெதுவாக ஒரு உயர் அதிகாரியிடம் கேட்டனர்.
'என்ன ப்ராப்ளம் சார்?'
'நம்ம எம்.டி யை ஒரு கடத்தல் கும்பல் கடத்திப் போய் விட்டது.எப்படி மீட்பது என ஆலோசிக்கிறோம்'
'ஏன் கடத்தினார்கள்.என்ன வேண்டுமாம்?'
'ஒரு கோடி ரூபாய் கேக்கிறாங்க தாவிட்டால் எம்.டியை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க '
'ஓ..அப்படியா? எதுவாக இருந்தாலும் நாங்களும் ஒத்துழைக்கிறோம்.எங்க பங்களிப்பு எவ்வளவு ன்னு சொல்லுங்க'
'அதிகமில்லை ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பது என முடிவு செய்தாச்சு'
'எவ்வளவு?'
' ஒரு லிட்டர் பெட்ரோல்'
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 12:34 PM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: மொக்கை
Tuesday, November 18, 2008
யோசிக்கவச்சுட்டாங்கய்யா....
உலக அளவில் ஒரு கருத்துகணிப்பு நடத்தியது ஐநா. ஆனால் மிக பெரிய தோல்வியானது இக்கருத்து கணிப்பு. ஏன் என்றால்...
கேட்ட கேள்வி "Would you please give your honest opinion about solutions to the food
shortage in the rest of the world?"
ஆப்பிரிக்கா நாட்டில் "food" என்றால் என்னவென்று தெரியவில்லை.
இந்தியாவில் "honest" என்றால் என்னவென்று தெரியவில்லை
ஐரோப்பாவில் 'shortage' என்றால் என்னவென்று தெரியவில்லை.
சீனாவில் 'opinion' என்றால் என்னவென்று தெரியவில்லை.
middle east நாடுகளில் 'solution' என்றால் என்னவென்று தெரியவில்லை.
south ஆமெரிக்காவில் 'please' என்றால் என்னவென்று தெரியவில்லை.
ஆமெரிக்காவில் 'rest of the world' என்றால் என்னவென்று தெரியவில்லை....
ம்ம்ம்...யோசிக்கவச்சுட்டாங்கய்யா...அவ்வ்வ்வ்வ்
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 10:21 AM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: உலகம்
Friday, November 7, 2008
நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்?
(ஆங்கிலத்தில் நண்பர் அனுப்பிய ஈமெயில்.. இங்கே தமிழில்...)
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."
கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது,
"சார், 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"
கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"
கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்துவிடு"
கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதைபோல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்.....
இப்ப தெரியாதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? ஹாஹாஹா....
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 9:22 AM 6 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: இது உண்மை
Thursday, September 11, 2008
தமிழ் சினிமான்னா இப்படித்தான் இருக்கும்!
1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..
* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..
* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..
* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
_____________
2) ரெண்டு கதாநாயகி இருந்தா...
* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
* வெளிநாட்டுக்கு போயிடணும்..
* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
____________
3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...
* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..
____________
4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...
* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
* வில்லனை தான் லவ் பண்ணனும்..
* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
_____________
5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...
* அடி வாங்கணும்..
* அடி கொடுக்கணும்..
* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
_____________
6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..
* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி காட்டணும்..
* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
_______________
7) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...
* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..
* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
_____________
8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..
* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
______________
9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..
* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.
நன்றி: அரசர் நகைச்சுவை
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 8:53 AM 5 சிரிப்பொலிகள்
Friday, September 5, 2008
காக்க காக்க ரீமேக்
படங்களை ரீமேக் செய்யும் காலம் இது!! ஆக, ப.பா சங்கம் ஒரு படத்த ரீமேக் செய்ய போகுது... அதுக்கு நல்ல ஜோடிய தேடுறோம்!
இந்த சீன்னை இவர்கள் சொல்லியிருந்தால்....
சூர்யாவாக சாலமன் பாப்பையா (acp பாப்ஸ்)
ஜோவாக 'பருத்திவீரன்' பிரியாமணி
பிரியாமணி அழுது கொண்டே: ஏன்ய்யா,நீயா? ஏண்டா இந்த பக்கம் வந்தே?
பாப்ஸ்: எனக்கு இங்க வேற யாரும் தெரியாதுலே. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்லே! வா...பழகுவோம்ய்யா!
***
பாப்ஸ்: ஏன் புள்ள, உனக்கு என்ன தான் வேணும்?
பிரியாமணி: புரியல்ல...(அழுது கொண்டே...)
பாப்ஸ்: நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ய்யா...(குரல் கொஞ்சம் கம்மி செய்துகொண்டு)
பிரியாமணி: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்டா! உன்கூட என் வாழ்க்கைய வாழனும்டா. உன்கூட நான் இருக்கனும்டா. உன்கூட சிரிச்சு பேசனும்டா. சண்ட போடனும்டா... உன் தோள்ல சாஞ்சி அழனும்டா.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்கனும்டா (தலை முடியை பிடித்து கொண்டு அழுகிறார்)
மூன்னு குழந்தைய பெத்துக்கனும்டா. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்கனும்டா. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்கனும்டா.
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும்டா! (சத்தம் போட்டு அழுகிறார்)
அவ்வளவுதான் டா எனக்கு வேணும்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. (பாப்ஸ் காலை பிடித்து அழுகிறார்)
பாப்ஸ்: ஏன்ய்யா? நான் யூத் கிடையாதுய்யா! நான் ஒரு பட்டிமன்ற நடுவர்ய்யா... என்னைய சுத்தி எப்போதே 4 பேரு பேசிகிட்டே இருப்பாங்கலே. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்யா! உனக்கும் எனக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம் இருக்கு! ஏன் நான்?
பிரியாமணி: அது ஒரு பொண்ணுக்கு தான்டா விளங்கும்! உனக்கெல்லாம் எங்கடா புரிய போகுது....
பாப்ஸ்: சரிய்யா, கல்யாணம் பண்ணிக்கலாம்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்லே. கல்யாணம் பண்ண... நாளை சந்திப்போமா?
இயக்குனர்: cuT!!!!!!!!! ஏங்க பிரியாமணி, இந்த சீன்ல ஜோதிகா எப்படி அழகா நடிச்சிருக்கும். உனக்கு நடிப்புன்னாவே அழதான் தெரியுமா? போ போ.... யோவ் assistant அடுத்த ஜோடிய வர சொல்ல. இந்தா பிரியாமணி, பாப்ஸ் கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. அப்பரம் கூப்பிடுறோம்.
அடுத்து சூர்யாவாக வைரமுத்து
ஜோவாக நமீதா
நமீதா: ஏ மச்சான்ஸ்? ஏண்டா இந்த பக்கம் வந்து?
வைரமுத்து: எனக்கு இங்கு வேற யாரையும் தெரியாது. உன்கூட தான் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
***
வைர: ஏன் நமீதா(high pitch voiceலில்), உனக்கு என்ன வேண்டும்?
நமீதா: எனக்கு ஒன்னும் புரியுது? (புரியல்ல)
வைர: நம்மை பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேண்டும்? மனைவியா?சிநேகிதியே?(எச்சில் தெறித்தது)
நமீதா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் மச்சான்ஸ்! உன்கூட என் life வாழது. உன்கூட நான் இருக்குது. உன்கூட சிரிச்சு பேசுது. சண்ட போடுது... உன் தோள்ல சாஞ்சி அழது.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்குது three kids பெத்துகுது. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அது உன்னைய மாதிரியே இருக்குது. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்குது.
அப்பரம் ஒரு நாள் செத்துபோது! அவ்வளவுதான் மச்சான்ஸ்!(சிரிக்கிறார் நமீதா)
வைர: ஏன்? நான் இளரத்தம் கிடையாது! நான் ஒரு பாடலாசிரியர்.. என்னை சுற்றி எப்போதுமே 4 பேரு பாட்டு எழுத சொல்லி கொண்டே இருப்பார்கள். அது என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். உனக்கும் எனக்கும் வயது வித்தியாசத்தை பார்த்தாயா? அப்படி இருந்தும் ஏன் என்னை...? (வெள்ளை ஜிப்பா பாக்கேட்டில் கையைவிட்டு வானத்தை பார்க்கிறார்)
நமீதா: நான் இட்லி சாப்பிடுது. இடியாப்பம் சாப்பிடுது. நான் ஒரு தமில்நாட்டு புண்ணு!அது ஒரு புண்ணுக்கு தான் விளங்குது!
வைர: சரி. கல்யாணம் செய்து கொள்ளலாம்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உன்னை பார்த்த முதல் நாளே
கண்கள் கடிதமானது
இதயம் இன்பாக்ஸானது!
(இந்த இடத்துல, தருவீயா தரமாட்டீயா ரீமிக்ஸ் சாங்)
இயக்குனர்: cutttttttttttttt!! நமீதா சூப்பரா நடிச்சீங்க! யோவ் assistant, மேடத்துக்கு ஆப்பிள் ஜூஸ் கொடு! வைரமுத்து சார், நீங்க கொஞ்சம் தமிழ்ல பேசி நடிக்க முடியுமா? நீங்க பேசின தமிழ் வெள்ளக்காரங்களுக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளுங்களுக்கு விளங்காது. சோ கொஞ்சம் ப்ளீஸ்....
assistant: director சார், இன்னொரு ஜோடி ரொம்ப நேரமா வேட் பண்ணிகிட்டு இருக்காங்க.
இயக்குனர்: வர சொல்லுய்யா!
(கவுண்டமணியும், ஜெனிலீயாவும் உள்ளே வர)
சூர்யாவாக கவுண்டர்
ஜோவாக ஜெனிலீயா
ஜெனிலீயா குதித்து கொண்டே(தோள்பட்டையில் நீல கலர் பை): ஏ என்ன மேன்,நீயா? ஏண்டா இந்த பக்கம்?(லூசுத்தனமாக சிரிக்கிறார்)
கவுண்டர்: ஹாலோ லேடிஸ்,எனக்கு இங்க வேற யாரும் தெரியாது. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்! let's go talk ya.
***
கவுண்டர்: உனக்கு என்ன வேணும்?
ஜெனிலீயா: என்ன சந்தோஷ், நீ சொல்றது புரியல்ல...
கவுண்டர்: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே! நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்?
ஜெனிலீயா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்! அப்பரம்...உன்கூட பைக்கல ஊர் சுத்தனும். நாயர் கடையில டீ குடிக்கனும். பக்கத்துவீட்டு பையன்கூட கோலி விளையாடனும்.மொட்ட மாடில ஜஸ்கீரிம் சாப்டனும். உன்கூட சிரிச்சு பேசனும். சண்ட போடனும்... .. நிறைய குழந்த பெத்துக்கனும். அப்ப தான் சந்தோஷ், எதித்தவீட்டு ஆண்டி பிள்ளைங்ககூட கிரிக்கெட் ஆட முடியும். பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்க கூடாது. என்னைய மாதிரி இருக்கனும் சந்தோஷ்.
(முகத்தை பாவமாக வைத்து கொண்டு)
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும் சந்தோஷ்! அவ்வளவுதான் எனக்கு வேணும்!
கவுண்டர்: ஏன்? நான் யூத் தான்! எவ்வளவு ஆம்பளைங்க இருக்கும்போது இந்த ஆல் இன் ஆல் அழகுராஜ்வ why selected? நான் ஒரு அரசியல்வாதி. என்னைய சுத்தி 4 அல்லகைங்க, 5 நாத்தாரிங்க, 6 பிக்பாக்கெட் பசங்க இருப்பாங்க. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்! நீ என்னையவிட 3 வயசு மூப்பு.அரசியல இதெல்லாம் சகஜமா இருந்தாலும், இந்த விஞ்ஞான உலகத்துல....
ஜெனிலீயா: அது ஒரு பொண்ணுக்கு தான் விளங்கும் சந்தோஷ்! உனக்கெல்லாம் அது புரியாது சந்தோஷ். (கண்ணை கசக்குகிறார்)
கவுண்டர்: சரி சரி...லேடீஸ் அழுதா என் heart தாங்காதும்மா! கல்யாணம் பண்ணிக்குவோம்!வாலிப வயசுல இதெல்லாம் சகஜமப்பா!(ஜெனிலீயாவோடு கை குலுக்குகிறார் ஒரு romantic look கொடுத்து...)
இயக்குனர்: cutttttt!! இந்த 3 ஜோடில யார select பண்றது?????
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 12:29 PM 3 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், காமெடி, ரீமேக்


