பெண்கள் என்றால் இந்த ஆண்கள் எப்படிக் கணக்கு பண்ணுகிறார்கள் பாருங்கள்!
பெண்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?
அத்தனை சுலபமாக கணக்குப் பண்ண முடியுமா?
அத்தனை சுலபமாக விடை காணவும் முடியுமா?
கடலின் ஆழம் கூட அறியலாம்..பெண்கள் மனமறிய முடியுமா?
எத்தனை சுலபமாய் பெண்களை கண்டு பிடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!......சங்கத்து பெண்சிங்கங்களே...
ஏன் இத்தனை கோபம் ?என்ன மேட்டர்னு கேக்கறீங்களா?
இதைப் பாருங்க புரியும்
Thursday, June 26, 2008
பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 8:16 PM 12 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: பெண்பாவம்
Tuesday, June 24, 2008
நான் அனைவரும் பொய் positive!
பொதுவா, நம்மளோட இரத்தம் குரூப் என்னவோ இருக்கும்- O+, A+, AB-..அப்படி இப்படின்னு ஏதாவது ஒன்னு இருக்கும். ஆனால், நாம் அனைவருக்குமே ஓரே இரத்த குரூப் தான். அதான், பொய் positive!
ஏன் சொல்றோம்னா,
சின்ன வயசுல- அம்மா, நிலாவ பாத்து "நிலா நிலா ஓடி வா'ன்னு பாட்டு சொல்லி கொடுத்தாங்க.
பாட்டி வந்து சோறு ஊட்டும்போது, "நிலாவுல ஒரு பாட்டி வடை சுடுறாங்கன்னு" சொன்னாங்க.
நம்ம தப்பு செஞ்ச தாத்தா சொன்னாங்க, "பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்."
இளம் பருவத்தில்- காதலர்கள், " என் உயிர் உன் கையில" என்பார்கள்.
"நீ இல்லாம நான் செத்துடுவேன்." என்பார்கள்.
"நீ ரொம்ப அழகா இருக்க" என்பார்கள்.
பலாப்பழத்தகூட கையில பிடிக்க பலம் இல்லாதவன், "அந்த நிலாவ தான் நான் கையில பிடிச்சேன்." என்பான்.
ஆரஞ்சுப்பழ மாதிரி ஒரு முகத்த வச்சிருக்கும் பொண்ணுகிட்ட போய், "ஆப்பிள் பெண்ணே நீயாரோ?" என்பான்.
கல்லூரி போகும் பருவத்தில்- இருக்கும் இரண்டு தாத்தா, இரண்டு பாட்டிகளை 1008 முறை கொன்று இருப்பான்/ள், லீவு லெட்டர் மேட்டரில்.
ஸ்பெஷ்ல் க்ளாஸ் என்று சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவோம்.
கல்யாணம் ஆனபிறகு- தேவையில்லாமல் ஒன்னு கேட்போம், "என்னைய உனக்கு பிடிச்சிருக்கா?"
அவனும்/அவளும் வேறு வழியின்றி, "ம்ம்" என்று தலையாட்டுவான்/ள்
தாத்தா, பாட்டி ஆன பிறகு- ஆறு அறிவு கொண்ட ஒரு சிறு பிள்ளையை போய், "வைரமே, தங்கமே, முத்துவே" என்று கொஞ்சுவோம்.
இப்படி சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை, நம்மை சுற்றி பொய்கள், நாம் கேட்பது பொய்கள். நாம் சொல்வது பொய்கள். ஆனால், இது எல்லாமே positive விஷயங்களுக்காக சொல்லும் பொய் என்பதால், நாம் அனைவரின் இரத்தமும் "பொய் positive".
ஒரு தாய் மக்கள் என்பதை ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ, நாம் அனைவரும் 'ஒரு பொய் மக்கள்' என்பதை ஒத்துகொண்டே ஆக வேண்டும்! ஹிஹிஹி...:))
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 3:05 PM 8 சிரிப்பொலிகள்
Tuesday, June 17, 2008
பிரியாணி with பிரியாமணி
இன்றைக்கு நாம் பாக்க போக போற நட்சத்திரம், சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி. ஒரு படத்தில்தான் அவர் உருப்படியாக நடித்தார். முத்தழகு என்று தமிழ்நாட்டு ரசிகர் நெஞ்சில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் நமது பிரியாமணியை இந்த 'பிரியாணி with பிரியாமணி' நிகழ்ச்சி மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நிருபர்: வணக்கம் பிரியாமணி. நாங்க ப.பா. சங்கத்திலிருந்து வந்து இருக்கிறோம்.
பிரியாமணி: yea hi.
நிருபர்: உங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. அத பத்தி நினைக்கும்போது எப்படி இருக்கு?
பிரியாமணி: i am really thrilled and excited. i couldn't believe when my father broke the news to me. (சிரித்து கொண்டு) i was actually sleeping at that time..
நிருபர்: கொஞ்ச நிறுத்துங்க. ஏங்க தமிழ் தெரியாதா உங்களுக்கு? தமிழ்ல பேசி தான படத்துல நடிக்கிறீங்க. விருதுலாம் வாங்கியிருக்கீங்க. தமிழ்ல பேசுங்கப்பா.. ஏன்னா, இந்த நிகழ்ச்சிய வெள்ளைக்காரனும் பாக்குறான். அவனுக்கு தமிழ் நல்லா தெரியும்!
பிரியாமணி:( சிரித்து கொண்டே) எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எப்படி என்னைய தேர்வு செஞ்சாங்கன்னு தெரியல்ல. ஆனா இந்த நேரத்துல அமீர் சாருக்கு என்னுடைய நன்றிய சொல்லிக்கிறேன்.
நிருபர்: அப்ப அமீர் சார் தான் உங்க வெற்றிக்கு காரணமா?
பிரியாமணி: ஆமா சொல்ல போனால் அவர் எனக்கு குரு மாதிரி.
நிருபர்: ஆனா நாங்க கேள்விப்பட்டோம் அவர் நடிக்கபோகும் அடுத்த படத்துக்கு உங்கள select பண்ணாரு.. ஆனா நீங்க தான்...(என்று இழுத்தோம்)
பிரியாமணி: அப்படிலாம் ஒன்னுமில்லையே. எனக்கு dates சரிவரல்ல. அதுனால தான் (என்று மழுப்பி கொண்டு சும்மா இருந்த கைப்பேசியில் ஸ்.எம்.ஸ் வந்த மாதிரி சீன் போட..)
நிருபர்: dates? தமிழ்ல பேரிச்சம்பழம் என்போமே அதுவா? சரிவரல்லைன்னா வேற கடையில வாங்கவேண்டியது தானே.
பிரியாமணி: ஹாஹா.. குட் ஜோக்! ஒகே அடுத்த கேள்விக்கு போகலாமா?
நிருபர்: பருத்திவீரன் படத்துல உங்க மொத்த நடிப்பையும் நடிச்சதுனால, அதுக்கு அப்பரம் வந்த தோட்டா, மலைக்கோட்டை படத்துல் சுத்தமா நடிக்க மறந்துட்டீங்களே, ஏங்க?
பிரியாமணி: பருத்திவீரன் படத்துல நடிக்கிறதுக்கு space இருந்துச்சு.. மத்த படம் hero-oriented movies.
நிருபர்: ஆமா ஆமா.. கண்டிப்பா உங்களுக்கு space இருந்திருக்காது.. தோட்டா படத்துல ஜீவன் வச்சிருக்கும் முடிக்கே இடம் இருந்திருக்காது.. அப்பரம் இப்படி உங்களுக்கு.. ச்சே ச்சே.. அப்பரம் இன்னொரு கேள்வி. உங்களுக்கு ஞாபகம் மறதி இருக்கா?
பிரியாமணி: இல்ல. ஏன் இப்படி திடீர்ன்னு ஒரு கேள்வி?
நிருபர்: 'ஏ ஆத்தா ஆத்தோரமா' பாட்டுல நீங்க மறந்துபோய் உங்க அண்ண பொண்ணு dress போட்டுகிட்டு ஆடுனீங்களே. அத வச்சு சொன்னேன்.
பிரியாமணி: மம்மீ(என்று கூச்சலிட்டார். கோபமாக தான் கூப்பிடுகிறார் என்று பயந்துபோய்..)
நிருபர்: ஐயோ ஏங்க?
பிரியாமணி:(சிரித்து கொண்டு) இல்ல, இப்ப ஆப்பிள் ஜூஸ் குடிக்குற நேரம். அதான் அம்மாவ கொண்டுவர சொன்னேன்.
நிருபர்: ஓ.. நாங்க பயந்துபோயிட்டோம்.
பிரியாமணி:(ஆப்பிள் ஜூஸை குடித்து கொண்டு) ம்.. அடுத்த கேள்வி.
நிருபர்: அங்க செவுத்துல மாட்டி இருக்கே படம். அது எப்ப எடுத்தது?
பிரியாமணி: அச்சு birthday partyல.
நிருபர்: அச்சுவா?
பிரியாமணி: அஸ்வீன். ஸ்வீ சேகர் son.
நிருபர்: ஓ.. அவரா!! ஹாஹாஹா..
பிரியாமணி; ஏன் சிரிக்கிறீங்க?
நிருபர்:இல்ல, உங்க ஃபிரண்ட்ஸை பாத்தா சிரிப்பு வருது. வேகம் படத்துல என்னமா நடிச்சாரு? ச்சே.. சான்ஸே இல்ல. தொப்பை அழகனாச்சே!! பக்கத்துல அது பாக்யராஜ் மகன் தானே. அவர் படம் எப்ப வெளிவருதுன்னு அவருக்கே தெரியாது! அதுக்கு பக்கத்துல சந்தியா. காதல் படத்துக்கு அப்பரம், உங்கள மாதிரியே அவங்களும் நடிக்க மறந்துட்டாங்க. ஹாஹஹ..அதான சிரிச்சேன்.
பிரியாமணி: என்ன கிண்டலா?
நிருபர்: இல்ல சுண்டலு!
பிரியாமணி: what?!
நிருபர்: இல்ல.. பசிக்குது. அதான் கேட்டேன்.
பிரியாமணி: பேட்டி முடியட்டும். விருதே கொடுக்குறோம்.
நிருபர்: என்னது விருதா?
பிரியாமணி: சாரி ஐ மின் விருந்து. விருது கிடைச்ச பிறகு வாயிலேந்து விருது விருதுன்னே வருது.
நிருபர்: ம்ஹும் வரும் வரும்!
நி்ருபர்: அப்பரம் அடுத்த கேள்வி. உங்கள நிறைய பேர் mimicry செய்யுறாங்களே, அத பத்தி என்ன நினைக்குறீங்க.
பிரியாமணி: நம்மள ரொம்ப நேசிக்கிறவங்க தான் நம்மள மாதிரியே பண்ண ஆசைப்படுவாங்க. அப்படி நினைக்கும்போது, என் ரசிகர்களை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நிருபர்: அப்படியா! நான்கூட உங்கள மாதிரியே பேசுவேன். பாக்குறீங்களா?
(பிரியாமணி முகத்தில் ஆனந்தம் ஆட...)
நிருபர்:(அழுதுகொண்டே) உன்னைய எனக்கு ரொம்ப புடிக்கும்டா. நீ என் உசுருடா!!
பிரியாமணி: ஹாஹாஹா... நான் சாதாரணமா பேசுற மாதிரி பேசுங்க.
நிருபர்: சாரி அது என்னால முடியாது. அப்படி ஒருத்தருக்கு மட்டும்தான் வரும்.
பிரியாமணி; அப்படியா? who is that?
நிருபர்: நம்ம மன்சூர் அலிகானுக்கு தொண்டை கட்டிக்கிச்சுன்னா.. உங்க குரலே தான்!!!
(நாங்கள் எங்கள் பைகளை எடுத்து கொண்டு ஒரே ஓட்டம்...விடு ஜூட்!!)
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 11:00 AM 22 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், காமெடி, சினிமா
Saturday, June 7, 2008
லிப்ஸ்டிக் கறையை எப்படித் துடைப்பது?
ஒரு பள்ளியில் மாணவிகள் லிப்ஸ்டிக் போடக் கூடாதுன்னு தடை விதிச்சாங்க
ஆனாலும் மாணவிகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்க ஆசை.
வகுப்பறையில் மட்டும் தானே அனுமதி இல்லை என்பதால் தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பார்கள்.
அதோடு நிற்காமல் அந்த பெரிய கண்ணாடியில் அங்கங்கே தங்கள் லிப்ஸ்டிக் பூசிய உதடு்ளைப் பதித்தும் வருவார்கள்.
தினமும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளருக்கு கண்ணாடியில் பதிந்தி்ருக்கும் உதட்டுச் சாயக் கறைகளைத் துடைப்பதே பெரிய பாடாகிப் போனது.
மறுநாள் நன்கு சுத்தம் செய்ய்யப் பட்ட கண்ணாடியைப் பார்த்ததும் மாணவிகள் மேலும் குஷியாகி உதட்டுச் சாயத்தை பதித்து வைப்பார்கள்.
இது தினமும் தொடர் கதையாகிப் போக பணியாளார் பிரின்ஸ்பாலிடம் முறையிட்டார்.
மாணவிகளை அழைத்துப் பேசிய பிரின்ஸ்பால் தினமும் பணியாளர் எவ்வளவு சிரமப்பட்டு அந்தக் கறைகளைத் துடைக்கிறார் என்பதை சொன்னார்.மேலும் அவரை அதைச் செய்து காட்டச் சொல்ல பணியாளர் ஒரு ஸ்பாஞ்சை எடுத்து கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்..
மறுநாள் முதல் கழிப்பறை கண்ணாடியில் எந்த உதட்டுச் சாயக்கறையும் காணப்பட வில்லை;))
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 1:48 PM 10 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: டெக்னிக்
Wednesday, June 4, 2008
நீங்க இப்ப எந்த stage?
நான் ரொம்ப நாளா யோசிச்ச, ஆராய்ச்சி பண்ண ஒரு விஷயத்த பத்தி தான் இன்னிக்கு சொல்ல போறேன். நம்ம போதுவா கார் பார்க் பண்ணற விஷயம் தான். ஒரு சாதாரண விஷயம் தான். ஆனா, அதுக்குள்ளே ஒரு பெரிய ரகசியமே இருக்கு.
காதலர்களாக இருந்தார்கள் என்றால், கார் பார்க் பண்ணிட்டு ரொம்ப நேரமா உள்ளேயே உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாங்க.
கல்யாணம் ஆனா புதுசு என்றால், பையன் கார் பார்க் பண்ணிட்டு பொண்ண பக்கம் உள்ள கதவை திறந்துவிடுவான்.
கல்யாணம் முடிஞ்சு ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு பார்த்தா, கார் பார்க் பண்ணும்வரை பொண்ணு வெளியே நின்னு வேட் பண்ணி, கார்க் டிக்கியில் வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து கொண்டு செல்லும்.
கல்யாணம் முடிஞ்சு பத்து இல்ல 12 வருஷம் கழிச்சு பார்த்தா, கார் பார்க் பண்ணும்போதே, பொண்ணு, "ஏங்க, இத்தன வருஷம் கார் ஓட்டுறீங்க, பார்க் கூட சீக்கிரம் பண்ண தெரியாதா?"
கல்யாணம் முடிஞ்சு, 20 வருஷம் கழிச்சு பார்த்தா...
கார் பார்க் முடிஞ்ச அடுத்த வினாடியே, கார் கதவை 'படார்'னு முடிவிட்டு சென்றுவிடுவார் கணவன்.
மனைவி் பாவமா பொருட்களை எடுத்து கொண்டு வீட்டுக்குள் செல்வார்.
நீங்க இப்ப என்ன stage?
கார் விஷயம் மட்டும் இல்ல. நீங்களும் உங்க மனைவி/கணவன் சேர்ந்து செய்த ஏதேனும் ஒரு விஷயம் 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குனு உங்க மனம் DVDய சற்று rewind பண்ணி பாருங்க... கண்ணு கலங்கிடும்! :))
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 12:55 PM 3 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சும்மா ஜாலிக்கு