நான்: சுவாமி பெண்கள் எப்பொழுது மிகவும் அழகாக இருப்பார்கள்? அவர்களுக்கு இருப்பது நிஜமான அழகா?
சுவாமி: குழந்தாய் என்ன இது சின்ன பிள்ளை தனமாக கேள்வி உனக்கு எப்பொழுது அழகா தெரிகிறார்கள் சொல் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன்.
நான்: சுவாமி சில சமயம் தொட்டில் குழந்தையாக ஈஈஈ என்று பொக்கை வாய் காட்டி சிரிக்கும் பொழுது அழகாக தெரிகிறது.
சுவாமி: இல்லை, அப்பொழுது நீ கூட அழகாய்தான் இருந்து இருப்பாய்!!!
நான்: (இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்) நடக்க தெரியாமல் தத்தகா பித்தகா என்று நடக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மண் தரையில் சொப்பு சட்டிவைத்து மண் சோறு சமைத்து விளாயாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மாமா பச்சை ஓலை கட்டிய பிறகு புதிதாய் போட்ட தாவணியில் வெளியே வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: 12 வது படிக்கும் பட்டணத்து பெண் குட்டியோண்டு பாவாடை சட்டையில் புத்தக மூட்டை தூக்கி செல்லும் பொழுது?
சுவாமி: இல்லை
சுவாமி: இல்லை
நான்: தலை குளித்து நுனியில் ஒரு முடிச்சு போட்டு லேசான ஈரம் படர்ந்து கோவிலுக்கு வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: வெவ்வெவ்வே என்று பழிப்பு காட்டும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: விழி ஓரத்தில் கண்ணீரும் அதை மறைக்க உதட்டு ஓரத்தில் பொய் சிரிப்பும் சிரிக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் பட்டு சேலை சர சரக்க மாலை போட்டு மண கோலத்தில்?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் வயிறு பெருத்து முகம் பூரித்து நிறை மாத கர்பிணியாய் இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: குழந்தை பெற்று குழந்தையோடு குழந்தையாகி மூக்கோடு மூக்கு உரசி விளையாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: பொக்கை வாய் தெரிய சிரித்து தோல் சுருங்கி பாட்டியாக இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: சுவாமி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் குழந்தை முதல் பாட்டிவரை எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் இதுக்கு மேல் ஒன்னும் சொல்ல முடியாது நீங்களே சொல்லிவிடுங்கள் குருவே!
சுவாமி: பெண் என்று வந்த பிறகு அவள் எப்பொழுதுமே அழகுதானாட! இப்பொழுது அப்பொழுது என்று எல்லாம் பிரித்து சொல்ல முடியாது! எப்பொழுதுமே அழகாய் தான் இருக்கிறாள் பெண் உன் பார்வை தானடா வித்தியாசபடுகிறது.
குறிப்பு: 1) இந்த பதிவை சுயநினைவோடும், யாருரைய மிரட்டலும் இல்லாமல் நானே எழுதியது.
2) அருகில் பா.பா சங்கத்து ஆட்கள் யாரும் இல்லை அவர்கள் கையில் கத்தி, தூக்கு கயிறு, விசம், கவிதாயினி கவிதை, அய்யனார் கவிதை தொகுப்பு புத்தகம் எல்லாம் வைத்து என்னை மிரட்டவில்லை நானே சொந்தமாக எழுதியது அவ்வ்வ்வ்வ்:(