அடடா எதுக்கு ரெடினு மண்டைய பிச்சுக்காதீங்க. இதோ தீபாவளி வந்துடுச்சு. கைல வச்சுக்கற கர்ச்சீப்புல இருந்து மாவாட்டுற கல்லு வரைக்கும் எல்லாத்துக்கும் ஆஃபர் போடறாங்க. பட்டாம்பூச்சி புடவை தட்டாம்பூச்சி புடவைனு புதுசா புதுசா அறிமுகப்படுத்தறாங்க. அப்பப்பா.... எங்க பார்த்தாலும் ஒரே ஜவுளிக்
கடை விளம்பரம்.... கடை விளம்பரம்...
விளம்பரம்... (நல்லா எக்கோ அடிக்குதா???;))) )
சரி நாமளும் தீபாவளி ஸ்பெஷலா சங்கத்துல புதுசா எதுனாச்சும் பண்ணோனுமின்னு சங்கத்து மக்கா எல்லாரும் சேர்ந்து நம்ம சங்கத்து ஆபிஸ் ரிசப்ஷன்ல, மீட்டிங் ரூம்ல, ஸ்விம்மிங் பூல்கிட்ட, தோட்டத்துலனு ரவுண்டு கட்டி யோசிச்சோம். Cappucino, Hot chocalateனு குடிச்சு, choc-a-vloc, chicken burger, veg croizantனு சாப்பிட்டு சாப்பிட்டு ஏதோ எங்களுக்கு இருக்கற குருவி மூளைய கசக்கி கசக்கி தீபாவளிக்கு மட்டும் ஏன்? நியூ இயருக்கும் சேர்த்தே பண்ணிடலாம்னு இந்த முடிவ எடுத்திருக்கோம். ஏதோ விபரீதமான முடிவு எதுனாச்சும் எடுத்துட்டோமானு பயந்துக்காதீங்க... ஹி... ஹி... ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இனி மேட்டருக்கு போவோம்.
இதனால எல்லாருக்கும் அறிவிக்கறது என்னன்னா..............
நமது ப.பா.சங்கம் சிறந்த நகைச்சுவை திலகத்தை போட்டி வைத்து தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். கீழே உள்ள தலைப்பிற்கோ அல்லது படத்திற்கோ அல்லது இரண்டிற்குமோ பொருத்தமான நகைச்சுவை பதிவை எழுதி
papaasangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடுவர் குழு தீர்மானிக்கும் சிறந்த நகைச்சுவைப் பதிவருக்கு
"நகைச்சுவை திலகம்" என்ற பட்டத்துடன்
ஜனவரி மாதம் சங்கத்தில் எழுத வாய்ப்பும் வழங்கப்படும்.
போட்டிக்கான தலைப்பு :
என்ன கொடுமை சார் இது!!!
போட்டிக்கான படம் :
விதிமுறைகள் :
1. எவ்வளவு பெரிய பதிவு வேண்டுமானாலும் எழுதலாம்
2. எந்த ஒரு Celebrity, சக ப்ளாக்கர், உறவினர், நண்பர் என்று யாரையும் தாக்கி எழுதக் கூடாது
3. எந்த ஒரு பொதுவான வலைதளத்தையோ, வலைப்பூவையோ தாக்கி எழுதக் கூடாது
4. உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான கடைசி தேதி 30/11/2007
5. ஒருவர் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
அவ்ளோதானுங்க....... come on guys........ cheer up.......... Rush ur entries soon...........