"கச்சேரிக்கு பாட்டு ரெடியா?"
"ரெடி மேடம்!"
"சேம்பலுக்கு ரெண்டு பாட்டு எடுத்து விடு.. கேட்போம்.."
"கல்யாணம் கச்சேரி கால்கட்டு என்னாச்சு.. ரயிலேறி போயாச்சுடா"
"போச்சு போச்சு!!! எல்லாமே இன்னைக்கு ரயிலேறிதான் போகப்போகுது! நான் பிறந்தநாள் கச்சேரிக்கு பாட்டு கேட்டா, நீ கல்யாணத்துக்கு பாட்டு ரெடி பண்ணிட்டிருக்கே?"
"ஏம்மா, இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்ன்னா நாளைக்கு கல்யாண கச்சேரிதானே! அதான் எல்லாம் கலந்த கலவையா ரெடி பண்ணியிருக்கோம்ல.."
"உனக்கு குசும்பு ஜாஸ்தியாயிருச்சுலே.. என்னிக்காவது சொன்னதை சொன்னபடி செஞ்சிருக்கியா நீ?"
"கோச்சிக்காதம்மே.."
"சரி, அழகா ஒரு பிறந்த நாள் வாழ்த்து பாடு"
"ஹேப்பி பர்த்டே டூ யூ..
யூ ஆர் போர்ன் இன் ட ஜூ
லைக் அ மங்கீ எண்ட் கங்கரூ..
ஹேப்பி பர்த்டே டூ யு.."
"அடே அடே.. இது என்ன பிறந்த நாள் வாழ்த்து பாட்டா? ஒருத்தியை வாழ்த்தி பாட சொன்னா, நீ என்ன மங்கீ, கங்காருன்னு எல்லாம் பாடுற?"
"சாரி சாரி... இன்னொரு சான்ஸ் கொடுங்க.... வேற பாட்டு பாடுறேன்.."
"ம்ம்.. சரி.. பாடு"
"எல்லோரும் கொண்டாஆஆஆஆடுவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..."
"ஏன் இந்த இழுவை.. இது ஒரே ஒரு பொண்ணுக்கு பர்த்டே.. எல்லாரும் கொண்டாடுறதுக்கு இது என்ன ஊர் திருவிழாவா?"
"நீங்க ரொம்ப மோசம்.. நான் பாடுற எல்லாத்துக்கும் நீங்க எதிராவே பதில் சொல்றீங்க.. எவ்வளவுதான் நான் தாங்குறது? அவ்வ்வ்..."
"ஒழுங்கா பாடினா யார் தப்பா சொல்ல போறா.. சரி, கடைசியா ஒரு சான்ஸ்.. பாடுறீயா?"
"பாடுறேன் பாருங்க.. நீங்களே அசந்து போக போறீங்க.. அஹெம்"
குரலை சரி செய்கிறார்..
"தல போல வருமா.. ஹேய்.. தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தலை போல வருமா..."
"ம்ம்.. சூப்பர் சாங்... இதுவே வாழ்த்து பாடலா பாடிடுவோம்.. ஆரம்பிக்கலாமா?"
"தல போல வருமா... தல போல வருமா?
நெஞ்சில் பட்டதை சொல்வாளே...
இவளுக்கு இரவிலும் வெயில்தானே..
அட்டகாசத்தில் புயல்தானே.
நீல வானத்தை மடியில் கட்டுவாள்..
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவாள்..."
"ஹேய்.. நிறுத்து.. நிறுத்து... நைட் எல்லாம் வெயில் படம் பார்த்தா வெயிலாகிடுமா? சரி, நீல வானத்தை மடியில் ஏன் கட்டணும்.. எனக்கு இப்பவே காரணம் தெரிஞ்சாகணும்.. சொல்லு சொல்லு"
"பாட்டு பாடுனா, கேட்கணும்.. ஆராய கூடாது... கச்சேரிக்கு லேட்டாச்சு.. ஹ்ம்ம்.. கிளம்புங்க.. (நானும் அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்.. தாங்கலைடா இவங்க பாடு)"
அடுத்து என்ன... தாரை தப்பட்டை முழங்க பேக்கிரவுண்டுல தல போல வருமா பாட்டோடு ஒரு வாழ்த்து செய்தியும் சொல்லியாகணும்ல.. கோவை நகரத்து கொள்கை புயல், பயமறியா பாவையரின் தலைவலி.. ச்சீ.. ச்சீ.. தலைவி.. எங்கத் தங்கத் தல (எத்தனை கேரட்ன்னு எல்லாம் கேக்கப்படாது) அனுசுயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போமாக..
Thursday, December 27, 2007
இங்கேயும் ஒரு வாழ்த்து (தலைவிக்கு)
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 1:16 PM 8 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
Thursday, December 6, 2007
விருது வழங்கும் விழா
வந்தவங்களுக்கு எல்லாம் வாங்க வாங்கன்னு சொல்லியே சொல்லியே வாய் வலிச்சிருச்சு. அம்புட்டு கூட்டம் அள்ளி தள்ளிருச்சுல்ல நம்ம சங்கத்து போட்டிக்கான பரிசு வழங்கும் விழாவுல. எல்லாரும் காத்திருக்க சரியா மாலை 6 மணிக்கு விழா துவக்கம். குத்துவிளக்கேத்தி நம்ம விழாவ துவக்கி வெச்சது யாருன்னு உங்களுகு தெரியாதில்ல. கீழ படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.
த்ரிஷா மேடமே தான். அவங்க குத்துவிளக்கு ஏத்தி முடிச்சதும் நம்ம சங்கத்து தலைவி அனு சங்கத்த பத்தியும் சங்கத்து தங்கங்களான எங்கள பத்தியும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு சும்மா மேடையே அதிருச்சுல்ல.. உங்களுக்காக சில படங்கள் இங்கே
எல்லாம் முடிஞ்சு பரிச அறிவிக்கற தருணமும் வந்துது. எல்லாரும் ஆர்வமாய் எதிர்பார்த்த நகைச்சுவை திலக பரிசை வாங்கப்போறது யாருன்னு எதிர்பார்க்க இதுக்கு மேல காக்க வெச்சா நல்லா இருக்காதுன்னு வெற்றியாளர அறிவிக்க நம்ம ஷ்ரேயா கோஷல் மேடைக்கு வந்தாங்க.
அவங்க கொஞ்சும் குரல்ல "பரிசை பெறுபவர் திரு.குசும்பன்" னு சொல்ல நம்ம கேமராவ அப்படியே திருப்பி குசும்பன பாத்தா ஷ்ரேயா கோஷலின் திருவுருவம் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமேன்ற ரேஞ்ச்ல ஜொள்ளூ விட்டுட்டிருக்காரு.. அப்புறம் அவர உலுக்கி எழுப்பி மேடைக்கு கூட்டிட்டு போனா இவர பாருங்க பரிச வாங்காம ஷ்ரேயா கோஷலையே லுக்கு விட்டுட்டு இருக்காரு. :((
இப்படியாக அவர் விட்ட ஜொள்ளுல மயங்கிய ஷ்ரேயா கோஷல் அவருக்குன்னு ஸ்பெஷலா ஒரு பாட்டு பாடினாங்க.
அவருக்கு குடுக்க செஞ்ச அவார்டு இன்னும் ஷ்ரேயா கோஷல் கிட்டயே இருக்கறதா கேள்வி. அவரும் என் நினைவா அது அவங்க கிட்டயே இருக்கட்டும்னு பெருந்தன்மையா சொல்லிட்டாரு.
பரிசு பெற்ற குசும்பருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு இன்னொரு பரிசா எங்கள் சங்கத்தில் ஜனவரி மாதம் சிறப்பு பதிவுகள் போட பெருமையுடன் அழைக்கின்றோம்.
சிரிக்க வைக்க முயற்சித்தது G3 at 2:11 PM 13 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சங்கம் போட்டி
Saturday, December 1, 2007
போட்டியில கலந்து கொண்டவங்களுக்கு நன்றி
நாங்க ரெடி நீங்க ரெடியா? போட்டிக்கான தேதி முடிஞ்சாச்சுங்க. இந்த (நவம்பர்) மாத ஆரம்பத்துல ஆரம்பிச்சு என்ன கொடுமை சார்னு தலைப்பு வெச்சு எழுத சொல்லி இருந்தோம் அதுக்கு நம்ம சக நண்பர்களின் படைப்புகள் பல வந்துச்சு.
ஆனா பாருங்க படம் போட்டு இன்னொரு தலைப்பு வெச்சோம் அதுக்கு மட்டும் ஒரு படைப்பு கூட வரல என்ன கொடுமை சார் இது? :)
கற்பனை பத்தலையா இல்ல படம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சானு தெரியல. எப்டியோ போட்டி நல்லபடியா நடந்து முடிஞ்சுது.
போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம். அதுக்கு முன்னாடி இந்த போட்டில கலந்துகிட்ட எல்லாருக்கும் எங்க பயமறியா பாவையர் சங்கத்து சார்புல நன்றி நன்றி நன்றி :)
சிரிக்க வைக்க முயற்சித்தது அனுசுயா at 9:28 AM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சங்கம் போட்டி