Wednesday, May 9, 2007

ப்ளாக் எழுதுவது எப்படி?

ப.பா.சங்கத்த ஆரம்பிச்சு ரெண்டு வாரம் ஆச்சு நம்ம மக்களுக்கு விருந்து போட்டு ஒரே கலைப்பா இருக்கறோம் இந்த நேரம் பார்த்து ஒரு சீரியஸ் பதிவு போடறேன் (ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே .... )

திடீர்னு ஒரு நாள் மைபிரெண்ட் வந்து நம்ம கிட்ட இந்த ப்ளாக்ல போஸ்ட்டிங் போட்டு கலக்கறது எப்டிணு கேட்டாங்க. (என்னமோ நான் எழுதி கலக்கிட்டு இருக்கற மாதிரி :) )

ஒரு வளர்ர புள்ளயோட ஆசைய நிறைவேத்தனும்னு நானும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தேன் பாருங்க.

தகுதிகள்
1. முதல்ல ப்ளாக் எழுத ஆரம்பிக்கனும்னா உங்ககிட்ட எந்த ப்ராஜக்ட்டும் இல்லாம தண்டமா பெஞ்ச்ல இருக்கணும். அப்டியே ஆணியிருந்தாலும் வேற யாராவது தலைல கட்ட தெரிஞ்சிருக்கனும்.

2. அப்புறம் இந்த தமிழ் அவ்வளவா தெரியாது எனக்கு ஒன்னமே தெரியாதுங்க அப்டீனு அப்பாவியா நடிக்க தெரியனும் (அப்பதான் எடுத்தவுடனே வர்ர ஆப்புகள் கொஞ்சம் கம்மியா இருக்கும்)

3. எழுத ஆரம்பிச்சவுடனே பின்னூட்டம் வர்லியேனு கவலை பட கூடாது. நீங்க
மத்த ப்ளாக்குகளுக்கு போயி பின்னூட்டம் போட்டு இருக்கறேன்னு அட்டெண்டண்ஸ் போட்டுட்டு வந்தாதான் நம்ம ப்ளாக்குக்கு எட்டி பார்ப்பாங்க.

4. எத்தனை ஆப்பு வந்தாலும் வகுப்புல டீச்சர் முன்னாடி அமைதியா நடிக்கற மாதிரி இங்கயும் அடி பாடாத மாதிரி நடிக்க தெரியனும்.

5. ரெண்டு மூணு போஸ்ட் போட்டு ஒரு அளவுக்கு பேர் தெரிஞ்சவுடனே ஏதாவது ஒரு சங்கத்த ஆரம்பிக்கனும் இல்லீனா இருக்கற சங்கம் ஏதாவதுல நாம சேர்ந்துக்கணும். (அப்பதான் ஏதாவது விருந்து விழானா நாம இருக்கறது நாலு பேருக்கு தெரியும் :) )

6. அடுத்தது முக்கியமான விசயம் ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்ச நாள் ஆனவுடனே போஸ்ட்டிங் போட மேட்டர் கிடைக்காம இருக்கும்போது அழாம தைரியமா நாமும் ஒரு காலத்துல எழுதி பெரிய ஆளா வருவோம்னு மனச தேத்திக்க தெரிஞ்சிருக்கனும்.

எழுதறதுக்கு மேட்டர்

இந்த ப்ளாக்ல போஸ்ட்டிங் போட மேட்டர் கிடைக்காம முழிக்கறது இருக்கே அது பெருங் கொடுமை. அதுக்கு என்னோட ஐடியா.

1. கண்டிப்பா நிறைய fwd மெயில் படிக்கனும் அப்பதான் ஏதாவது ஒன்னு க்ளிக் ஆகும் அதைய உல்டா பண்ணி கொஞ்சம் தேத்தலாம்.

2. ஆபீஸ், அக்கம் பக்கத்துல நடக்கற எல்லா விசயத்தையும் ப்ளாக் பார்வையில் பார்க்கனும். புரியலியா சரி விளங்க சொல்றேன். மழை லேசா தூறுனாலும் சரி, வெயில் கொளுத்துனாலும் சரி உடனே அதுக்கு ஏத்தாப்புல ஒரு போட்டோவ போட்டு நாலு லைன் அது சம்பந்தமா எழுத தெரிஞ்சிருக்கனும்.

3. இன்னும் கொஞ்சம் பேமஸ் ஆகனும்னா இருக்கவேயிருக்கு ரெண்டு மூணு தலைப்புகள் ( அவங்க எதிர்ப்பு இவங்க எதிர்ப்பு, அந்த சுதந்திரம் இந்த சதந்திரம்) அதுல எந்த பக்கம் எழுதுனாலும் நீங்க உடனடியா பேமஸ் ஆகலாம். ஏன்னா அதுக்கு வர்ர பின்னூட்டம் கணக்கே கிடையாது. அதே அளவு ஆப்பும் வரும் ரெண்டு பக்கமிருந்தும். ஆனா உங்க ப்ளாக் பேமஸ் ஆகும் கட்டாயமா.

4. கடைசியா காமெடி பதிவுனு பேர் வெச்சு நம்ம கைப்புவையும் நாட்டாமையையும் கலாய்ச்சுனா கொஞ்சம் பேர் கை தட்டிட்டு போவாங்க. (ஆனாலும் கைப்பு, நாட்டாமை அநியாயத்துக்கு நல்லவங்கப்பா ஆவ்......)


பயன்கள்

முக்கியமான விசயம் இந்த ப்ளாக் எழுதறதால வரும் பயன்கள்.

1. முக்கியமா நேரம் போரடிக்காம ஓடும், வேலை இல்லாதப்ப. வேலையிருக்கறப்ப எழுதலைனா நாலு பேரு கேட்பாங்க ஏன் போஸ்ட்டிங் போடலைனு அப்ப பெருமையா நாலு பேருக்கு சொல்லிகலாம் வேலை இருக்குனு. :)

2. நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. ஒரு சிலருக்கு தங்கமணிகூட கிடைக்கலாம். எல்லாம் நம்ம நேரத்தை பொருத்தது.

3. வார இறுதியில பொழுது போகலைனா அக்கம் பக்கம் இருக்கற ப்ளாக்கரையெல்லாம்
சேர்த்து ப்ளாக்கர் மீட்னு பேர் வெச்சு டைம் பாஸ் பண்ணலாம்.

4. அப்புறம் நம்ம நண்பர்களுக்கு மெயில் அனுப்ப யோசிக்க வேண்டியதில்ல.
ஏதாவது ஒரு காமெடி போஸ்ட்டிங்க காபி பேஸ்ட் பண்ணி அனுப்பிறலாம்.


மை பிரெண்ட் : எப்டி இப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சு வெச்சிரக்கீங்க.

மீ : எல்லாம் அனுபவம்தான் ( உள்ளுக்குள்ள ரொம்ப பெருமையா சிரிச்சுகிட்டே)

மை பிரெண்ட் : கடைசியா ஒரு கேள்வி கேட்கலாமா அனு?

மீ : ஓ யெஸ் எந்த சந்தேகமா இருந்தாலும் கேளும்மா நான் விளக்கறேன்.

மை பிரெண்ட் : இவ்வளவு சொல்லறீங்க அப்புறம் ஏன் நீங்க ஒன்னுமே எழுதறது இல்ல?

மீ : ஓ அதுவா கொஞ்சம் வேலை அதிகம் அதான்

மை பிரெண்ட் மனசுக்குள்ள ( இந்த பதிலுக்கு ஒன்னும் குறைச்சலில்ல 8 மணி நேரம் அரட்டை அடிக்க மட்டும் முடியுது போஸ்ட்டிங் போட மட்டும் நேரம் இல்லியா? ) அப்டீங்களா சரி உங்க அட்வைஸ்கு நன்றி இப்போதைக்கு வர்ட்டானு எஸ்கேப் ஆயிட்டாங்க.

33 Comments:

said...

நாந்தான் ஃப்ர்ஸ்ட்டா???

said...

நான் செக்கண்டு.

said...

//ஒரு சிலருக்கு தங்கமணிகூட கிடைக்கலாம். //

மெய்யாலுமா... ம்ம் என்ன என்னமோ நடக்குதுப்பா... ஆனா எல்லாம் மர்மமாவே இருக்குதுப்பா

சரி பாவையர் பேச்சில் பொய் இருக்காது என நம்புவோமாக

said...

மிக அருமையாக உள்ளது

Anonymous said...

பயமறியா பாவையர் சங்கமா

அனு கலக்குங்க

said...

பிளாக்கர்கள் ஆரம்பித்து எழுதுபவர்களை
நக்கலடித்து எழுதிய உங்கள் எழுத்து
மிகவும் ரசிக்கதக்கதாக இருந்தாலும்

மிக நல்ல கருத்துக்களை எழுதும்
வலைபதிவர்கள் இருக்கிறார்களே

நீங்க சொல்லும் மக்கள் சதவீதம் அதிகமோ ?

said...

உதய குமார் : மை பிரெண்ட் நோட் திஸ் பாய்ண்ட்

செந்தழல் ரவி : நன்றி

தேவ் : //மெய்யாலுமா//
என்ன கேள்வி இது? ஆஞ்சநேயருக்குதான் வெளிச்சம்

தமிழ் பூக்கள் : நன்றிங்க

said...

அனானி : நன்றிங்க வாழ்த்துக்கு

தியாகு : இது முழுக்க முழுக்க காமெடி பதிவுங்க. நோ சீரியஸ். யாரயும் குறிப்பிட்டு எழுதவில்லைங்க.

said...

நானும் பின்னூட்டம் போட்டுட்டேன் !

வளர்க உங்கள் பணி !

said...

அப்படியே மத்தவங்க ப்ளாக்குல மேட்டர் இல்லாட்டியும் எப்படி எத படிக்குறதுன்னு கொஞ்சம் சொல்லிக்குடுங்க..

said...

ஏங்க 253 users online ன்னு கீழே போட்டுருக்கே...உண்மையாவா?/!!!!

said...

//என்ன கேள்வி இது? ஆஞ்சநேயருக்குதான் வெளிச்சம்//

இதுக்கெல்லாம் எதுக்குங்க எங்க ஊர்க்காரரை இழுக்கறீங்க?

:(

said...

ரசித்தேன்

said...

ஆகா!!
அக்கா!! புட்டு புட்டு வெச்சிட்டீங்க போங்க!!
உங்க கால் எங்கே இருக்குன்னு மொதல்ல காட்டுங்க!! :-D

said...

//நாந்தான் ஃப்ர்ஸ்ட்டா??? //

சவுண்டு, மை பிரண்டுக்கே ஆப்பா :-)

said...

//(ஆனாலும் கைப்பு, நாட்டாமை அநியாயத்துக்கு நல்லவங்கப்பா ஆவ்......)//

இப்புடி சொல்லி சொல்லியே ஆப்படிக்கறாங்களே....முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))))

said...

//நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. ஒரு சிலருக்கு தங்கமணிகூட கிடைக்கலாம்//

அது என்ன ஒரு சிலர்னு குத்து மதிப்பா சொல்றீங்க...அம்பினு நேரடியா சொல்ல வேண்டியது தான :-)

said...

///
CVR said...
ஆகா!!
அக்கா!! புட்டு புட்டு வெச்சிட்டீங்க போங்க!!
உங்க கால் எங்கே இருக்குன்னு மொதல்ல காட்டுங்க!! :-D
///

இது கூட தெரியில
தரையிலதான்...:)

said...

//
ஒரு சிலருக்கு தங்கமணிகூட கிடைக்கலாம். எல்லாம் நம்ம நேரத்தை பொருத்தது.
///


ம்ஹும்

சான்சே இல்ல ...:)

said...

///
தகுதிகள்
1. முதல்ல ப்ளாக் எழுத ஆரம்பிக்கனும்னா..

///


உங்ககிட்ட பிளாக்கர் அக்கொண்ட் இருக்கனும்

said...

//
3. எழுத ஆரம்பிச்சவுடனே பின்னூட்டம் வர்லியேனு கவலை பட கூடாது. நீங்க
மத்த ப்ளாக்குகளுக்கு போயி பின்னூட்டம் போட்டு இருக்கறேன்னு அட்டெண்டண்ஸ் போட்டுட்டு வந்தாதான் நம்ம ப்ளாக்குக்கு எட்டி பார்ப்பாங்க
//


நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும்
வந்தாலும் வராட்டாலும் ஆப்பு உண்டு உங்களுக்கு...:)

said...

//1. கண்டிப்பா நிறைய fwd மெயில் படிக்கனும் அப்பதான் ஏதாவது ஒன்னு க்ளிக் ஆகும் அதைய உல்டா பண்ணி கொஞ்சம் தேத்தலாம்.//

முக்கியமா பூக்கள் படத்தோட வரும் fWD மெயில்ல இருக்கும் ஒரு பூ வை செலக்ட் பண்ணி அந்த பூவோட பேர் என்னனு எல்லார்கிட்டயும் கேட்கிற மாதிரி ஒரு பதிவு போடனும் ..அதுகப்பறம் அந்த பூ வோட பேர் தெரிஞ்சவுடனே அதைப் பத்தி விக்கிலயும்,கூகிள்லயும் தேடி கொஞ்ச பாயின்ட்ட புடிச்சு அடுத்தபதிவு போடனும்..அதுக்கப்பறம்..இது எங்க ஆபிஸ் பக்கதுல இருக்கும் பூ,இது எங்க ஆபிஸ் அக்கவுண்டன்ட் வூட்ல எடுத்த பூ அப்படி இப்படினு டெய்லி போஸ்ட் போட்டுட்டே இருக்கலாம்..நான் சொன்னதெல்லாம் சரிதானுங்க அனு :P

said...

சுந்தர் : நன்றி

சென்ஷி : ஆகா அடுத்த பதிவுக்கு ஐடியா குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க

முத்துலெட்சுமி : இதையெல்லாம் நம்பறீங்களா? :)

said...

நாமக்கல் சிபி : கூல் டவுன் சிபி சார். ஆஞ்சநேயர இழுத்தவுடனே டென்ஷன் ஆகறீங்களே? சும்மா ஒரு பேச்சுக்குதான சொன்னேன்.

சந்திரவதனா : நன்றி

CVR : //ஆகா!!
அக்கா!! புட்டு புட்டு வெச்சிட்டீங்க போங்க!!
உங்க கால் எங்கே இருக்குன்னு மொதல்ல காட்டுங்க!!//
ம் இப்டிதான் முதல்ல ஒன்னுமே தெரியாத மாதிரி எழுதி நல்ல பேர் வாங்கனும். கீப் இட் அப் :)

said...

Syam : //இப்புடி சொல்லி சொல்லியே ஆப்படிக்கறாங்களே...முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))))
//பாருங்க நாட்டாமை எவ்வளவு ஆப்பு வெச்சாலும் சந்தோசமா தாங்கிக்கறாரு அதான் ஸ்பெஷல்.

அம்பினு உலகத்துக்கே தெரியும். தெரியாம சிலர் இருக்கலாம் இல்லையா அதான் பொதுவா எழுதியிருக்கேன். :)

said...

@அனுசுயா
அக்கா சொல் மிக்க மந்திரம் இல்லை!! :-D (எப்படி?? ஒழுங்கா தேரிட்டு வரேனா?? :-) )

said...

@GR,

ஒரு முடிவோட தான் வந்து இருக்கீங்க போல இருக்கு :-)

said...

மின்னுது மின்னல் : //உங்க கால் எங்கே இருக்குன்னு மொதல்ல காட்டுங்க!! :-D
/// இது கூட தெரியில
தரையிலதான்...:) //

கலக்கல் பதில் மின்னல்..... :)

கோபாலன் : போதும் போதும் உண்மையெல்லாம் இப்‍டி பொதுவுல சொல்ல கூடாது. எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்.

said...

CVR : ஆகா போதும்பா ரொம்ப தேறிட்ட. சந்தடி சாக்குல நீ சின்ன பையன்னு வேற சொல்லிக்கற. எப்டியோ நல்லா இருந்தா சரி :)

ஷ்யாம் : நாட்டாமை நன்றி சர்போர்ட்டுக்கு :)

Anonymous said...

'பூ'வையரா? பாவையரா??
எனக்கு தமில் வீக்கு!

said...

//கோபாலன் : போதும் போதும் உண்மையெல்லாம் இப்‍டி பொதுவுல சொல்ல கூடாது. எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்.//

கோபாலன்! உஷாரா இருங்க!
பேசிட்டு உங்களை தீர்த்துடுவாங்க!

said...

நன்றிகள்

நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. சில ன்லூஙெர்ஸ் இடம் கேட்டேன் ஏமாற்றி விட்டார்கள்

This is unicode font. What font to use as default blog. what is the secret???

said...

wow. very good posting.
i too started my blog some 2 years blog. Then i had do delete them is it appeared to have many (almost all) scraps.
so i restarted my second innings.

 

BLOGKUT.COM