Friday, May 4, 2007

ப.பா.ச.வின் விருந்தும் வ.வா.ச.வின் வயித்தெரிச்சலும்

ப.பா.ச தலைமைக் கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது

எதிரிகளையும் மதிக்கும் பண்பான பாவையரே
வாழ்க வாழ்க

விரோதிக்கும் விருந்தளிக்கும் வஞ்சியரே
வாழ்க வாழ்க


என வீதியெங்கும் பதாகைகள்

அனானிகளின் வருகை அதிகமிருக்கும் என்பதால் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி என சங்கத்தின் தானைத் தலைவி
அஞ்சா நெஞ்சம் கொண்ட மலேசிய மங்கை
சொன்னதின் பேரில் வ.வா.சவினருக்கு அடையாள அட்டை அனுப்பப் பட்டிருந்தது.

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.

கண்மணி: ஐயோ அபிஅப்பா வர்றாரு.. அழைப்பு அனுப்பலியே எப்படி?

மை ஃபிரண்ட்: அக்கா அவரு கைப்பு அழைப்ப புடுங்கிட்டு வந்துட்டாரு

கண்மணி: அப்ப கைப்பு?

அனுசுயா: அவரு 'தல' ங்கிறதால அனுமதி இலவசம்.

G3: எல்லாரையும் சமாளிக்கலாம். இவரு பாசக்கார தங்கச்சின்னே ஆப்பு வைப்பாருன்னுதான் இம்சை அழைப்ப அனுப்ப மறந்துட்டாங்க. சரி சமாளிப்போம்..

இம்சை: அக்கா சில்லி சிக்கன் ரெடி டேஸ்ட் பாருங்க.

கண்மணி: ஆஹா இவ்ளோ டேஸ்டாயிருந்தா சரி வராது. இன்னும்
கால் கிலோ வர மொளகாத்தூள கொட்டு. அவிங்க நாக்கு வெந்து கண்ணுல வுட்ற தண்ணியில ரெண்டு மாசத்துக்கு கிடேசன் பார்க் பக்கமே போகக்கூடாது.

G3: அக்கா இந்த 65க்கெல்லாம் ரெட் கலர் பெயின்ட் அடிக்கட்டுமா இல்ல வார்னிஷா?

மை ஃபிரண்ட்: வேண்டாம் நான் பச்சைக்கலர் அடிச்சி மலேசிய ஸ்பெஷல்,’பிக்கினி மிக்கினி’ சிக்கன் அப்டீன்னு சொன்னா பசங்க சுலபமா நம்பிடுவாங்க.

அனுசுயா: ரஸ்னா ரெடி அதுல கொஞ்சம் புளித்தண்ணியும் மிக்ஸ் பண்ணிட்டேன். ஏதோ புதுசான அயிட்டம்னு குடிக்கட்டும்

மை ஃபிரண்ட்: குடிச்சிட்டு வயித்தக் கலக்கட்டும்.. இப்பவே நம்ம சங்கத்தப் பாத்து அவிங்களுக்கு வயித்துல புளி கரைக்குது.

அபிஅப்பா மெள்ள கண்மணி அக்காகிட்ட வந்து,

அபிஅப்பா: தங்கச்சி இது உனக்கே ஓவராத் தெரியில? அந்த பாசக்கார புள்ளைங்க எப்படி,’யக்கோவ்...யக்கோவ்’ னு பாசமா இருந்தானுங்க.அவுங்களுக்கே ஆப்பா? ஏதோ முதுமை,புதுமைன்னு பதிவு போட்டமான்னு இல்லாம இந்த சின்ன புள்ளங்க கூட சேர்ந்துகிட்டு....

கண்மணி: ஸ்டாப்...ஸ்டாப்...நான் எப்பவாச்சும் உங்கள மாதிரி 40+ ன்னு சொன்னனா? இந்த கண்மணி ஆயாப் பதிவும் போடுவேன் ஆப்பு பதிவும் போடுவேன். பாசம் வேற...சங்கம் வேற.. நாங்க இதுல தெளிவா இருக்கோம்.

அபி அப்பா கண்ணை கசக்கியபடியே நகர,புலியும் ராமும் ஓடி வந்து கைத் தாங்கலாக அழைத்துச் செல்கிறார்கள்.

இம்சை: அக்கா அக்கா...

கண்மணி: என்னம்மா?

இம்சை: நம்ம புலிக்கு வச்சிருந்த பச்சக் கறிய அபி அப்பாவோட டைகர் தின்னுடுச்சு. இப்ப என்னக்கா பண்ண?

கண்மணி: இவரு தொல்லையே தாங்கல.இதுல டைகர் வேற.சரி சரி வர்ற வழில மூலைக் கடையில காக்கா பிரியாணி போட்டுக்கிட்டு இருந்தான். அதுல தனிக்கறியா ½ கிலோ வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிடுவோம்.

அனுசுயா: அக்கா அதுக்கு வேற செலவு பண்ணனுமா? நாமலே ஒரு காக்காயப் புடிச்சி...

G3: நோ நோ...அதுக்கு நேரமில்ல. அக்கா சொன்னபடியே செஞ்சிடுவோம்.

இம்சை: அதுக்குத்தான் கீரை ரெடி பண்றேன்னு சொன்னேன். இதுங்க நொந்த புலிங்க புல்லு மட்டுமில்ல புண்ணாக்கும் தின்னுவாங்க..

இதற்குள் தலைவிக்கு ஏகப்பட்ட போன் கால்ஸ்.மலேசியப் பிரதமரிடமிருந்து வாழ்த்து..புஷ்ஷிடமிருந்து பேக்ஸ்..கலாமிடமிருந்து வாழ்த்துக் கவிதை எனக் குவிய எதிரணியும் வந்து குவிந்தனர்.

மை ஃபிரண்ட்: அக்கா இவிங்க வாழ்த்தவா வந்தாங்க.. ஓசியில சோறுன்னதும் ஆணி புடுங்கறதையும் வுட்டுட்டு வந்துட்டாங்க பாருங்க

கண்மணி: சரி சரி போதும் நமக்கு சம பலம் உள்ளவங்களைத்தான் நக்கல் பண்ணனும்.நொந்து நூலாயி அந்து அவலாப் போனவங்களை ஒன்னும் சொல்லாதே..

பஃபே முறையில் விருந்து வைக்கப் பட்டிருந்தது.யார் யாருடைய அயிட்டம் எது எனக் கண்டு பிடிக்க சுலபமாக போத்திஸ்,சரவணா பாணியில் வெட்டி,ராம்,கைப்பு,புலி,ஜொள்ளு தேவ்,சிபி,எனக் கவுண்ட்டர் போல் எழுதி....வைக்கப் பட்டிருந்தது.

விழா ஆரம்பித்து கண்மணி டீச்சர் அனைவரையும் வரவேற்று
நிகழ்ச்சியைத் தொடங்க ப.பா.ச நிர்வாகிகள் அறிமுகம் ஆரம்பித்தது.

தலைவி: மை ஃபிரண்ட்
துணைத் தலைவி: இம்சையரசி
செயலாளர்: G3
பொருளாளர்: அனுசுயா
கண்காணிப்பு& ஆலோசகர்: கண்மணி


எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அந்த நேரம் விவசாயி அவசரமாக டிராக்டருடன் வந்து இறங்கி அதிலிருந்த
நிர்வாகிகளின் குரூப் போட்டோ பெரிய சைஸ் டிஜிடல் பேனராக வரையப்பட்டு இருந்ததை கீழே இறக்கி வைத்தார்.வெல்வட் துணியால் கவர் செய்யப் பட்டிருந்த அந்த டிஜிட்டல் பேனர்
மலேஷிய பிரதமர் திறந்து வைப்பதாக ஏற்பாடு.

எதிரணியாக இருந்தாலும் பேனர் எடுத்து வரச் சம்மதித்த விவசாயிக்கு நண்டும் அருகம்புல்லும் கலந்த சூப் தாக சாந்திக்குத் தரப்பட்டது.

எதிரணியினர் கவனம் முழுவதும் சாப்பாட்டு அறைப் பக்கமேயிருக்க,ஜொள்ளு பாண்டியார் வழக்கம் போல் மகளிர் கூட்டம் பார்த்தபடி ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்.

லேட்டாக வந்த வெட்டி ,’ஏமன்டி போஜன் எக்கட உண்ணாரு’ என,கோபி ,’ ரா ரா வெட்டி இன்னும் யாரும் துன்னலே நாங்களே வெயிட் சேஸ்தாரு.இவங்க பேசி முடிச்சதுக்கு பிறகுதான் எல்லாம் இக்கட கூச்சண்டி’ என அலுத்துக் கொண்டார்.

திடீரென்று ச்சுப்பிரமணி எங்கியோ பார்த்துக் குலைக்க அங்கே தூண் மறைவில் ஒளிந்திருந்த நாட்டாமை ஷியாம் தலையில் முக்காடு போட்டபடியே வெளிப்பட,

சிபி 'யோவ் ஓசி சோறு தின்னறதுன்னு முடிவோட வந்துட்டம் இதுல நீயி ஏன் ஒளிஞ்சி ஒளிஞ்சி நிக்கற' என

'இல்லப்பூ நான் உள்ள நுழஞ்ச போது யாரோ
'நாட்டாமை தீர்ப்ப மாத்து'
ப.பா.ச வை வாழ்த்து ' ன்னு ரைமிங்கா சவுண்டு உட்டாங்க அதான் 'என புலம்பினார்.

கைப்பு மட்டும் ஏதோ பறி கொடுத்தவர் போல சோகத்தில் இருக்க, சிபியார் தேற்றிக் கொண்டிருந்தார்.

‘தல இதெல்லாம் வீரனுக்கு ஜகஜம்.இப்படி ஆடிப் போனா எப்பிடி கொஞ்சம் வுட்டு புடிப்போம் இல்லாட்ட்டி........

‘இல்லாட்டி.....’

‘நாம கடையக் கட்டிடுவம்....’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என கைப்பு குமுற ,

புலி என்னதான் செஞ்சிடுவாங்க பாப்பம்னு உறும,

தேவ் கையப் பிசைய ஜொள்ளு தன் கருமமே கண்ணாயிருக்க

வெட்டியும் அபிஅப்பாவும் ‘சோறு எப்ப போடுவாங்க;என ஒவ்வொருத்தராக் கேட்டுக் கொண்டிருக்க..

தின சூரியன் பத்திரிக்கை நிருபர் மொக்கையன் கைப்புவை பேட்டி கண்டார்.

'உங்களுக்கு எதிரா சங்கம் ஆரம்பிக்கப் பட்டது குறித்து உங்க கருத்து என்ன?'

'என்னத்தச் சொல்ல நம்மளுக்கே ஆப்பு வைக்க கிளம்பிட்டாய்ங்கய்யா...கெளம்பிட்டாய்ங்க...'

'நீங்க எப்படி எவ்வளவு ஆப்புன்னாலும் தாங்கறீங்க.'

'எவ்வளவு வச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களே.'

ராமும் தேவும் வலிய நிருபரிடம் சென்று,'இவங்களப் பத்தி மேட்டர 16ம் பக்கத்தில் 8 வது பத்தியில 'துக்கினியூண்டு' போடுங்க உங்களுக்கு வேண்டியத தனியா கவனிக்கிறோம்'என

'யோவ் என்னா நாட்டு நிலவரம் தெரியாதா உமக்கு வேர்ல்ட் கப்புக்கு அப்புறம் எல்லா பேப்பெர் சேனல் லயும் இவங்க சங்க மேட்டர்தான் ஹாட் டாபிக்.அவிங்க படத்தை மொதல்ல போட்ற சேனலுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும்னு அவனவன் கியூவுல நிக்கறான் நாங்க கடேசி பத்தியில போடனுமாம்.போய் சாப்பிட்டுட்டு கெளம்பற வேலையப் பாருங்க'என்று சீறினார் நிருபர்.

சங்கத் தலைவி சிறப்புரை ஆற்ற வந்தார்.கூட்டத்தினரைப் பார்த்து,

'செலாமாட் டாத்தாங்' என்றார்.

'கைப்பு,'யோவ் என்னய்யா திட்டறாங்க 'என கிலியடைய,

தம்பி[உமாகதிர்],'சாப்பாடு தயாரா இருக்குன்னு சொல்லுதுங்க பாச மலரு 'என மொழிபெயர்க்க

உரையை முடித்த தலைவி,'ஜூம்பா லாகி' என்றதும்,

'ரெண்டாவது தபாவும் சோறு உண்டாம்' என அபி அப்பா மொழிபெயர்க்க,

அய்யனார் கடுப்பாகி,'யோவ் இவங்க சொல்றதக் கேக்காதே இங்கே போய்ப்பாரு புரியும் என்றார்.

கண்மணி;இம்சை;G3;அனுசுயாவும் தலைவி மை பிரண்ட் கூடச் சேர்ந்து கோரஸாக,

தெரிமா காசே.....ஜூம்பா லாகி எனக்கூறியதும்

கூட்டம் மிகப் பெரிய கரகோஷத்துடன் ஆர்ப்பரித்தது.விழா முடிந்தததும்

விருந்து ஆரம்பித்தது..

டிஸ்கி:வ.வா.சாவுக்கு ஏன் வயித்தெரிச்சல்னா காரம் அதிகமா போட்டதாலதான்.மத்தபடி ப.பா.ச வைப் பார்த்து இல்லை.அவிங்கதான் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்தப் போறாங்களே.

***************************************************************************
ஓவர் டூ.....G3

18 Comments:

Anonymous said...

இப்படியே போனா இது எங்க போய் முடியும் பொழைச்சுப் போகட்டும் வவாசவை விட்டுடுங்களேன் தாய்க்குலமே.

said...

//இன்னும்
கால் கிலோ வர மொளகாத்தூள கொட்டு. அவிங்க நாக்கு வெந்து கண்ணுல வுட்ற தண்ணியில ரெண்டு மாசத்துக்கு கிடேசன் பார்க் பக்கமே போகக்கூடாது//.

மொளகாத்தூள் எல்லாம் எதுக்கு இந்த மாதிரி ஒரு நாலு மொக்க போஸ்ட் போட்டீங்ண்ண.. அவிங்க மட்டும் இல்ல படிக்கற எல்லாரும் போகப் போற இடம் ஒன்னே ஒன்னுதான் ஹி... ஹி ;)

said...

அது என்ன இடம்னு உங்க வாயாலே சொல்லிடுங்க கோபாலன்

said...

நானும் விருந்துக்கு வந்துட்டேன்..

யார் யாருக்கு அழைப்பு வேணும்? சொல்லுங்க அனுப்பிடலாம். :-D

said...

அடபாவி அக்காக்களா!

இன்னும் எங்களை விடலயா???? உங்க சமையல் சோதனைக்கு இன்னும் எங்களையே பாடாப்படுத்திறிங்களே? :(

said...

//கண்மணி: சரி சரி போதும் நமக்கு சம பலம் உள்ளவங்களைத்தான் நக்கல் பண்ணனும்.நொந்து நூலாயி அந்து அவலாப் போனவங்களை ஒன்னும் சொல்லாதே..//

அமைதியா இருந்தா என்னோமோ... என்னோவோ ஆகுமின்னு பழமொழி இருக்கு....

அது எதுக்கு இப்போ???

நல்லாயிருங்க.... :)

said...

\\G3: அக்கா இந்த 65க்கெல்லாம் ரெட் கலர் பெயின்ட் அடிக்கட்டுமா இல்ல வார்னிஷா?\\

வார்னிஷ் எல்லாம் எதுக்கு ரொம்ப செலவு ஆகும். பேசமா லேமினேட் பண்ணி சங்கத்து முன்னாடி மாட்டிடுங்க...ஒரு பயலும் உள்ள வரமாட்டான் ;)

said...

\மை ஃபிரண்ட்: குடிச்சிட்டு வயித்தக் கலக்கட்டும்.. இப்பவே நம்ம சங்கத்தப் பாத்து அவிங்களுக்கு வயித்துல புளி கரைக்குது.\\

தாய்க்குலமே....எதுக்கு இப்படி ஒரு கொலைவெறியோட இருக்கிங்க..... மார்கெட்டில் வேண்டாமுன்னு தூக்கி போட்டதை எல்லாம் வச்சி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் சமைக்க முடியும் ;((

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நானும் விருந்துக்கு வந்துட்டேன்..\\

என்ன தலைவி...வழக்கம் போல பதிவை படிக்கவில்லையா ;)

Anonymous said...

பயமறியா
பாவியர் சங்கம்
வாலுக வாலுக!

said...

//விரோதிக்கும் விருந்தளிக்கும் வஞ்சியரே
வாழ்க வாழ்க//

இப்படியே ரெண்டு வாரமா சொல்லிகிட்டு தான் இருக்கீங்களே ஒழிய சாப்பாடு போடற மாதிரி தெரியலயே....இத நம்பி ரெண்டு மூனு ஓசி சோறு விருந்துக்கு வரலனு வேற சொல்லிட்டேன்....:-)

said...

//தலைவிக்கு ஏகப்பட்ட போன் கால்ஸ்.மலேசியப் பிரதமரிடமிருந்து வாழ்த்து..புஷ்ஷிடமிருந்து பேக்ஸ்..கலாமிடமிருந்து வாழ்த்துக் கவிதை எனக் குவிய எதிரணியும் வந்து குவிந்தனர்.
//

சாக்கி சான், மைக்கேல் சாக்ஸன் விட்டுட்டீங்க...அவிங்க ரெண்டு பேரும் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க...:-)

said...

ஜாக்கிஜான் மைக்டைசன் எல்லாம் வேண்டாம்.அபி பாப்பாவும் டைகரும் போதும் விருந்து முடிஞ்சதும் 'நல்லா'கவனிச்சு அனுப்பும்.

said...

//
அனுசுயா: ரஸ்னா ரெடி அதுல கொஞ்சம் புளித்தண்ணியும் மிக்ஸ் பண்ணிட்டேன். ஏதோ புதுசான அயிட்டம்னு குடிக்கட்டும்

மை ஃபிரண்ட்: குடிச்சிட்டு வயித்தக் கலக்கட்டும்.. இப்பவே நம்ம சங்கத்தப் பாத்து அவிங்களுக்கு வயித்துல புளி கரைக்குது.//

ROTFL..:)
நல்ல கலக்கல் காமெடி பதிவு..இப்பதான் புரியுது
ப.பா.ச ஆரமபித்ததின் உண்மை நோக்கம்.:)

சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல ஆசை..ஆனால் பாருங்க அண்ணன்மார்கள் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க..:)

said...

ROFL post!! :-D

loved these
//இம்சை: அக்கா சில்லி சிக்கன் ரெடி டேஸ்ட் பாருங்க.

கண்மணி: ஆஹா இவ்ளோ டேஸ்டாயிருந்தா சரி வராது. இன்னும்
கால் கிலோ வர மொளகாத்தூள கொட்டு. அவிங்க நாக்கு வெந்து கண்ணுல வுட்ற தண்ணியில ரெண்டு மாசத்துக்கு கிடேசன் பார்க் பக்கமே போகக்கூடாது.
//

//அனுசுயா: ரஸ்னா ரெடி அதுல கொஞ்சம் புளித்தண்ணியும் மிக்ஸ் பண்ணிட்டேன். ஏதோ புதுசான அயிட்டம்னு குடிக்கட்டும்

மை ஃபிரண்ட்: குடிச்சிட்டு வயித்தக் கலக்கட்டும்.. இப்பவே நம்ம சங்கத்தப் பாத்து அவிங்களுக்கு வயித்துல புளி கரைக்குது.//

said...

//நியாயஸ்தன் said...
பயமறியா
பாவியர் சங்கம்
வாலுக வாலுக!//

நியாயமா பார்த்தா இவர் தான்யா நியாயஸ்தன்:-))

said...

ஏன் இந்த கொலவெறி !! நாங்க உங்க தொல்லையில்லாம ஏதோ வாரம் ஒருக்கா கிடேசன் பார்க் ல ஒதுங்குறோம் அதுக்கும் வைக்கனுமா ஆப்பு..மக்களே இந்த வன்முறைய எதுத்து யாராவது குரல் கொடுங்க
:))

said...

உங்க கிடேசன் பார்க் மீட்டிங்குக்கு ஆப்பு வைக்கத்தானே இவ்ளோ போரடுறோம்.ஹா...ஹாஹா

 

BLOGKUT.COM