கிடேசன் பார்க்கில் ப.பா.சங்க நிர்வாகிகள் பேரீச்சம்பழ ஜூஸ் குடித்தப் படி தங்கள் முதல் பொதுக்கூட்டம் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கன்னாப்பின்னாவென கற்பனை வெள்ளம் அங்கே கரைப் புரண்டு ஓட கிடேசன் பார்க்கில் வெள்ள நிவாரண நிதி ஏற்பாடு செய்ய அபி அப்பா தலைமையில் இன்னொருக் குழு கிளம்பி விட்டதுன்னாப் பாருங்களேன்...
எதுக்கு மீட்டீங்காம்... அவங்க சங்கப் பெயரை உலகம் எங்கும் பரப்பணுமாம்... அதுக்கு உலகப் பதிவர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்து கூட்டத்தை மலேசியா ட்ரேட் சென்டர்ல ஏற்பாடும் பண்ணிட்டாங்க.. இனி ஓவர் டூ அறிமுகப் பொதுக்கூட்டம்.
ப.பா.சங்கம்
பாப்பா சங்கமா?
பாபா சங்கமா?
அய்யோ ப குறில்...அடுத்து பா நெடில் நடுவில்ல மெய் ப் வராது வராது வராது.. கண்மணி டீச்சர் கண்டப்படி கதற.. மொத்த பதிவுலக மக்களும் புதுசா ஆரம்பிச்ச சங்கம் பேரைச் சரியாச் சொல்ல முயற்சி பண்ணி வாயைக் கோணி சுளுக்கி பிடிச்சு உக்காந்து இருந்தாங்க...
"சரி மை ஃபிரண்ட்.. எங்கே நீ வா..வந்து மக்களுக்கு நம்ம சங்கம் பெயரைச் சொல்லிக் கொடு பார்க்கலாம்.."
மை ஃபிரண்ட் ஆயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பியைக் கையிலே பிடிச்ச மாதிரி தலை முடி எல்லாம் ஸ்பைக் ஸ்டல்ல மாறுன எஃபெக்ட்ல்ல..
"அக்கா நான் தான் சொல்லணுமா? நீங்கச் சொல்லியே இவங்க இந்தப் பாடு படுறாங்க நான் சின்னப் பொண்ணு".
அப்படி பேச்சு வார்த்தை நடத்தியும் ஒண்ணும் ஆகாத நிலையில்.. ம்ம் என்று கண்மணி டீச்சர் அதட்ட மை ஃபிரண்ட் மைக் பிடித்து பாஆஆஆஆ....என்று இழுக்க கண்மணி டீச்சர் ஃபிரண்டை முறைக்க.... ஃபிரண்ட் மைக்கை கையை வச்சு மூடிகிட்டு "அக்கா நான் தான் சொன்னேனே நான் தமிழ்ல்ல கொஞ்சம் வீக்ன்னு நீங்கத் தான் இப்படி இழுத்து விட்டூட்டீங்க"ன்னு கெஞ்ச...
அடுத்து நம்ம இம்சை அரசியை டீச்சர் முன்னுக்கு வரச் சொல்ல..
இம்சை அரசி மியூசிக் ட்ரூப் எல்லாம் மேடைக்கு வரச் சொல்லிட்டு தொண்டையைச் செரும ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு ஏறுது... கூட்டத்துல்ல் விசில் எல்லாம் கிழியுது....
ம்ம்ம்..ப...ம்ம்..ப...ம்ம....ப....ம்ம்...ப இதே ரேஞ்சுல்ல இமசையக்கா ராகம் போட்டு இழுக்க.. மியூசிக் ட்ரூப் பொறுமைக் கொஞ்சம் கொஞ்சமா குறையுது...
டக்குன்னு மியூசிக் ட்ரூப் மியூசிக்கை மாத்தி வாசிக்க ... மொத்தப் பதிவாளர்களும் உற்சாகம் ஆயிடுறாங்க... அட இது நமக்கு தெரிஞ்ச பாட்டு தானே..
அட இம்சையக்கா நாமளும் பாடணும் அப்படின்னு ஒரு நல்ல எண்ணத்துல்ல தான் இவ்வளவு நேரம் பொறுமைய இழுத்து இழுத்து பாடியிருக்காங்க...
"இனியும் நாம பாடாம தங்கச்சியை சோதிக்கக் கூடாது... வாங்கய்யா பாடுவோம்"ன்னு அபி அப்பா எல்லோரையும் கூப்பிட...
"அப்பா அது இங்கிலீஸ் பாட்டு உங்களுக்குச் சரியா வ்ராது அத்தைக் கூட நான் போய் பாடுறேன்"னு அபிபாப்பா ஸ்டைலா மேடைக்குப் போய் மைக்கை இம்சையக்கா கையிலே இருந்து வாங்கி கூட்டத்தைப் பார்த்து எம்.ஜீ.ஆர் ஸ்டல்ல டாட்டா எல்லாம் காட்டிட்டு.. தொண்டையை லைட்டா அட்ஜெஸ்ட் பண்ணிட்டு பாடுது.
BABA BLACK SHEEP HAVE U ANY WOOL...உடனே மொத்தக் கூட்டமும்..
YES PAAPA YES PAAPA 3 BAGS FULL
அப்படின்னு ரிப்ளைக் கொடுக்குது...பாட்டு முழுசும் முடிஞ்சப் பொறகு அபிபாப்பா இம்சையக்கா பக்கத்துல்ல ஸ்டூல் போட்டு ஏறி நின்னு ஒரு கொட்டு வைக்குது..
"அத்தை.. நீயும் எங்கப்பா அதான் உங்கண்ணன் மாதிரியே மக்கு தான்... இந்தப் பாட்டு பாடத் தான் ப....ப....ன்னு இழுஇழுன்னு இழுத்தீயா.. அந்த மியூசிக் அங்கிள்ஸ் எல்லாம் பாட்டு ட்யூன் எடுத்துக் கொடுத்துக் கூட நீ ஒரு டோட்டல் சொதப்பல்."
இம்சையக்கா முகத்துல்ல அசடு வழிய பேக் அடிக்குறங்க... கண்மணி டீச்சர் கையிலே பிரம்பு இருக்குது இப்போ.. அடுத்து அவங்க பார்வை அனுசுயா, ஜி3 பக்கம் திரும்புது...
இரண்டு பேரும் பிரம்பைப் பாக்குறாங்க... அய்யோ பபபப..ன்னு உள்நாக்கு மடங்கி சத்தம் வராம வெறும் காத்து மட்டும் வருது ரெண்டு பேர் கிட்டயும்..
கூட்டம் எல்லாம் பெ.பெ.பென்னு சவுண்ட் விட மேடையிலே நிலவரம் கலவரம் ஆகுது.... அப்போ கண்மணி டீச்சர் கையிலிருந்த பிரம்பை வானம் நோக்கி நீட்டி எதோ மந்திரம் எல்லாம் சொல்ல வானம் இடி இடிக்குது... மின்னல் மின்னுது ( இது நிஜ மின்னலுங்கோ) பயங்கர சவுண்ட் கேக்குது...
இவங்க என் அன்புக் குழந்தைகள் பயமறியா பாவையர்கள்... இவங்க சங்கம் பேர் பயமறியா பாவையர் சங்கம்... சுருக்கமாப் ப.பா.சங்கம்....புரியுதா....
அப்படியே ரெயின்போ கலர்ல்ல வானத்துல தெரியுது...
ப.பா.சங்கம்...
ஒடனே மொத்தப் பதிவுலகமும் அப்படியே பக்தி பரவசத்துல்ல ப.பா.சங்கம் வாழ்க..ப.பா.சங்கம் வளர்கன்னு பயங்கர சந்தோசத்துல்ல குரல் கொடுக்குறாங்க...
இப்படியே இனிதாக முடிவடைகிறது நம்ம ப.பா.சங்கத்தின் முதல் அறிமுக பொதுக்கூட்டம்...