Monday, February 16, 2009
surya vs goundamani!
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 4:16 PM 1 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், காமெடி
Saturday, February 14, 2009
கண்டதும் காதல்? கண்டதெல்லாம் காதல்!
அனைவருக்கும் ப.பா. சங்கத்தின் அன்பர் தின வாழ்த்துகள்.
அப்படின்னா என்னவா?
அதாங்க காதலர் தின வாழ்த்துகளை தான் அப்படி பொதுவா சொல்கிறோம்.
இன்று நிறைய டீவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள். நேற்று 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியில் காதலை பத்தி பேசுனாங்க.
காலையில் எனக்கு வந்த ஸ் எம் ஸ்,
"ஏப்ரல் 1 தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் என்ன வித்தியாசம்?
ஏப்ரல் 1- முட்டாள்கள் தினம்
பிப்ரவரி 14- முட்டாள்கள் ஆகும் தினம்"
இப்படி ஒரே காதல் விஷயமா இருந்துச்சா.. சரி அத பத்தி ஏதாச்சு எழுதலாமேன்னு வந்தேன்.
காதல் என்பது கழிட்டு போட்ட ஷூ மாதிரி.. சைஸ் சரியா இருந்தா.. யாரு வேணாலும் போட்டுகிட்டு போகலாம்.
ஐயோ அப்படின்னு நான் சொல்லல. என் காலேஜ் நண்பர் ஒருத்தன் அடிக்கடி சொல்வான். சொன்னது காமெடியாக இருந்தாலும், காதல் என்பது ரொம்ப சீரியஸான மேட்டர். அந்த seriousness இன்று மட்டும் ரொம்ப தூக்கலா இருப்பது ஆச்சிரியமா இருக்கு.
காதலர்கள் என்ன செய்யலாம் இன்று?
ரோஸ் மற்றும் வாழ்த்து அட்டை வாங்கி கொடுங்க.
காதல் பிடிக்காதவர்கள் என்ன செய்யலாம் இன்று?
ரோஸ் மற்றும் வாழ்த்து அட்டை விற்கும் கடை போடுங்க. செம்ம collection வரும்!
நேற்று இரவு தோழியிடம் உரையாடி கொண்டிருந்தேன் தொலைபேசியில்,
தோழி: ஏய் நாளைக்கு என்ன ஸ்பெஷல்?
நான்: அம்மா, மட்டன் குழம்பு வைக்க போறாங்க.
தோழி: அட ச்சி, அது இல்ல. ஏதாச்சு டேடிங்?
நான்: ஆமா!
தோழி: ஓ மை காட்! நீயா? யாரு அவரு?
நான்: உனக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும்.
தோழி: என்னடி சொல்லவே இல்ல.
நான்: நீ கேட்கவே இல்ல.
தோழி: எத்தன நாளா தெரியும்.
நான்: சின்ன பிள்ளையா இருக்கும்போதே தெரியும்.
தோழி: யூ மின் childhood love?
நான்: அட ச்சே, லவ் எல்லாம் கிடையாது? மரியாதை, ரொம்ப பிடிக்கும் அவர...
தோழி: ஓ ஓ...அப்படி போகுதா கதை. ஆமா எனக்கு தெரியும்னு சொன்னீயே, பார்த்து இருக்கேனா...
நான்: ம்ம்... பாத்து இருக்கே...
தோழி: எப்போ, எங்க?
நான்: போன வாரம் நம்ம வெளியே போனோமே...அப்போ.
தோழி: என்னடி குழப்புறே? நம்ம இரண்டு பேரும் மட்டும் தானே வெளியே போனோம்... யாரு நம்மகூட வந்தா... சரி அவரு பெயரு என்ன?
நான்: ஹாஹா.... நான் நாளைக்கு ஆஞ்ஜநயா கோயிலுக்கு போறேன் டி. ஜே ஆஞ்ஜநயா!
தோழி: what!!!!!??? valentine's day அன்னிக்கு ஆஞ்ஜநயா கோயிலுக்கு போறே! ஓ மை கடவுளே!!!
இன்னொரு முறை, அனைவருக்கும் இந்த ஆஞ்ஜநயா பக்தையின் காதலர் தின வாழ்த்துகள்
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 9:19 AM 1 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: காமெடி, சும்மா ஜாலிக்கு, வாழ்த்து
Wednesday, February 4, 2009
கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (2)
தொடர்கிறது ஷோ...
போன ஷோல கொடுத்த ஷாக்கால மீள முடியாமல், தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தேன்.
நான்: அவங்க குஷ்புவா??? ஏன்? எதுக்கு இந்த விபரீதம்?
தேவா: இந்த படத்துக்கு நிறைய ரிசுக்கு எடுத்து இருக்கோம். அதுல இதுவும் ஒன்னு.
(தலையில் அடித்து கொண்டு தொடர்ந்தேன்.)
நான்: வேற என்னென்ன ரிசுக்கு எடுத்து இருக்கீங்க, தேவா?
(விஜய் குறிக்கீட்டு பதில் அளித்தார்.)
விஜய்: நயன் தாராவ ஹீரோயினா போட்டது. வடிவேலு காமெடி.
நான்: வர வர நீங்களே நல்ல காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.... அப்பரம் தேவா, உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் எப்படி தெலுங்கு பாடல்கள் சாயலே பண்ணீங்க?
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 11:08 AM 2 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், சினிமா