Wednesday, March 18, 2009

நம்மூரு சென்னையிலே

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்க, பிரேமின் அண்ணன் வெங்கட் பிரபு பாட ஒரு பாடல் வெளிவந்தது.



பாடல்: நம்மூர சென்னையிலே நாள்தோறும் வீதியிலே

பல நூறு பொண்ணுங்கள பாத்தேனே
......
.....

பச்சோந்தி தேவலடா, அந்த பொண்ணுங்க மோசமடா
அந்த விஷயம்கூட தேவலடா, நம்ம ஆபத்து பொண்ணுங்கடா..

என்று வரும் அப்பாடல்.


இந்த பாடலை கேட்டு கொதித்து எழுந்த சில தோழிகளின் கோபங்களை அடக்க முடியவில்லை. online chat status, facebook status, orkut community- இப்படி எல்லா இடங்களிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிகளிடம் நான் சொன்னது,



"விடு விடு.... சில பொண்ணுங்க உண்மையிலே அப்படி தானே... சும்மா பாட்டு தானே விட்டு தள்ளு."



எனக்கும் சேர்த்தே கண்டனம் தெரிவித்து, வன்மையாக கண்டித்தனர். ஹாஹா... என்ன செய்ய? அவர்களிடம் அதிகாரப்பூர்வமான ஒரு மன்னிப்பை போட்டு, அவர்கள் அமைத்த திடீர் சங்கத்திற்கு என்னை உறுப்பினராக மாற்றிவிட்டனர். எனக்கு கொடுத்த முதல் வேலை, சங்கத்திற்கு ஒரு tagline அமைப்பது. மூளையை கசக்கி பிழிந்து யோசித்தால்... ஒன்னும் வேலைக்கு ஆகல.



ஆக, ஒரு முடிவுக்கு வந்தேன். ஏதேனும் ஒன்றை ரீமேக் பண்ணிவிடலாம்னு.

ஆட்டோ பின்னாடி பார்த்திருக்கும் வாசகம்,



"சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே!"



ரீமேக் செய்த வடிவம்,



"அச்சுறுத்தும் அனக்கோண்டாவை நம்பு, ஆசையாய் பேசும் ஆண்களை நம்பாதே!"



மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

Thursday, March 5, 2009

ஆண்களின் டைரியிலிருந்து....

ஆண்கள் பெண்களிடம் சொல்லும் சட்டங்கள்:

  1. ஞாயிற்றுகிழமை= கிரிக்கெட் பார்த்தல். எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று
  2. shopping கிரிக்கெட் மாதிரி அல்ல. அப்படி நாங்க நினைக்கபோவதும் இல்ல.
  3. அழுவது என்பது blackmail.
  4. உங்களுக்கு ஒன்னு வேணும்னு, தெளிவா சொல்லிடுங்க. மறைமுகமா கேட்பது, புதிர் போட்டு பேசுவது, தெளிவா குழப்புவது- இது எதுவுமே வேலைக்கு ஆகாது!
  5. பிறந்தநாட்களும், கல்யாண தேதியும் எங்களுக்கு நினைவில் இருக்காது. ஆக, அவற்றை நாள்காட்டியில் குறித்துவைங்க. எங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க, ப்ளீஸ்!
  6. 'ஆம்' மற்றும் 'இல்லை'- இவை இரண்டுமே சமமான பதில்கள், எல்லா கேள்விகளுக்குமே.
  7. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மட்டுமே எங்களிடம் வாங்க. அனுதாபம் வேண்டும் என்றால் உங்களோட படித்த எல்கேஜி தோழிகளை போய் பாருங்க.
  8. நாங்கள் 6 மாசத்துக்கு முன்னாடி சொன்னவற்றை இன்று போடும் சண்டையில் இழுக்க கூடாது. நாங்கள் என்ன சொன்னாலும், 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.
  9. நீங்கள் குண்டாக இருக்கீங்கன்னு நினைத்தால், நினைத்துகொள்ளுங்கள். உண்மையிலே நீங்க அப்படிதான். எங்ககிட்டு வந்து கேட்காதீங்க. பதில் சொல்ல விருப்பமில்லை.
  10. நாங்கள் சொல்வது சில, உங்களை காயப்படுத்தும் அல்லது கோபப்படுத்தும். எங்கள் நோக்கம் இரண்டுமே.
  11. எங்களிடம் ஒன்றை செய்ய சொல்லுங்கள் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் சொல்லாதீங்க. அந்த வேலையை பற்றி முழுமையா தெரிந்தால், நீங்களே செய்யலாம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல.
  12. எது சொல்ல வேண்டும் என்றாலும், டிவி விளம்பரங்கள் நேரத்தில் மட்டுமே சொல்லுங்க. live match நடந்து கொண்டிருக்கும்போது....மூச்!!
  13. கோலாம்பஸுக்கு திசைகள் தேவைப்பட்டது இல்லை. நாங்களும் அப்படிதான். காரில் செல்லும்போது கொஞ்ச நேரம்.....'shut up'
  14. எங்களிடம் உலக பொருளாதாரம், அமெரிக்கா வரலாறு, கிரிக்கெட், மொக்கை ஜோக்ஸ்-இதை பத்தி பேச விருப்பம் என்றால் மட்டுமே கேளுங்க இல்லை என்றால் நாங்கள் அமைதியாக இருக்கும்போது என்ன நினைக்குறீங்க என்று கேட்காதீங்க.
  15. I am in shape. ROUND is a shape too.
இதை உங்க மனைவியிடம் சொன்னால், நீங்க அநேகமா இன்று இரவு ஹாலில் அல்லது வீட்டு திணையில் தான் படுக்க நேரிடும். இருந்தாலும் பரவாயில்ல, camping போன உணர்வு கிடைக்கும்! அப்படி வெளியே படுக்க பயம் என்றால், உடனே ஒரு ரோஜா பூவை வாங்கி மனைவிடம் கொடுத்து இதை சொல்லுங்க,

"happy women's day!"

கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க. மார்ச் 8ஆம் தேதி அன்று மகளிர் தினத்தை கொண்டாடும் அனைத்து பெண்களுக்கு எங்க சங்கத்தின் வாழ்த்துகள்!:)

 

BLOGKUT.COM