Thursday, September 11, 2008

தமிழ் சினிமான்னா இப்படித்தான் இருக்கும்!

1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..

* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..

* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..

* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
_____________

2) ரெண்டு கதாநாயகி இருந்தா...

* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..

* வெளிநாட்டுக்கு போயிடணும்..

* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
____________

3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...

* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..

* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..

* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..
____________

4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...

* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..

* வில்லனை தான் லவ் பண்ணனும்..

* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
_____________

5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...

* அடி வாங்கணும்..

* அடி கொடுக்கணும்..

* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
_____________

6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..

* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..

* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி காட்டணும்..

* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
_______________

7) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...

* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..

* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..

* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
_____________

8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..

* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..

* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..

* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
______________

9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..

* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..

* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..

* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.

நன்றி: அரசர் நகைச்சுவை

Friday, September 5, 2008

காக்க காக்க ரீமேக்

படங்களை ரீமேக் செய்யும் காலம் இது!! ஆக, ப.பா சங்கம் ஒரு படத்த ரீமேக் செய்ய போகுது... அதுக்கு நல்ல ஜோடிய தேடுறோம்!



இந்த சீன்னை இவர்கள் சொல்லியிருந்தால்....

சூர்யாவாக சாலமன் பாப்பையா (acp பாப்ஸ்)

ஜோவாக 'பருத்திவீரன்' பிரியாமணி

பிரியாமணி அழுது கொண்டே: ஏன்ய்யா,நீயா? ஏண்டா இந்த பக்கம் வந்தே?

பாப்ஸ்: எனக்கு இங்க வேற யாரும் தெரியாதுலே. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்லே! வா...பழகுவோம்ய்யா!

***
பாப்ஸ்: ஏன் புள்ள, உனக்கு என்ன தான் வேணும்?

பிரியாமணி: புரியல்ல...(அழுது கொண்டே...)

பாப்ஸ்: நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ய்யா...(குரல் கொஞ்சம் கம்மி செய்துகொண்டு)

பிரியாமணி: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்டா! உன்கூட என் வாழ்க்கைய வாழனும்டா. உன்கூட நான் இருக்கனும்டா. உன்கூட சிரிச்சு பேசனும்டா. சண்ட போடனும்டா... உன் தோள்ல சாஞ்சி அழனும்டா.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்கனும்டா (தலை முடியை பிடித்து கொண்டு அழுகிறார்)

மூன்னு குழந்தைய பெத்துக்கனும்டா. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்கனும்டா. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்கனும்டா.
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும்டா! (சத்தம் போட்டு அழுகிறார்)
அவ்வளவுதான் டா எனக்கு வேணும்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. (பாப்ஸ் காலை பிடித்து அழுகிறார்)


பாப்ஸ்: ஏன்ய்யா? நான் யூத் கிடையாதுய்யா! நான் ஒரு பட்டிமன்ற நடுவர்ய்யா... என்னைய சுத்தி எப்போதே 4 பேரு பேசிகிட்டே இருப்பாங்கலே. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்யா! உனக்கும் எனக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம் இருக்கு! ஏன் நான்?


பிரியாமணி: அது ஒரு பொண்ணுக்கு தான்டா விளங்கும்! உனக்கெல்லாம் எங்கடா புரிய போகுது....


பாப்ஸ்: சரிய்யா, கல்யாணம் பண்ணிக்கலாம்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்லே. கல்யாணம் பண்ண... நாளை சந்திப்போமா?

இயக்குனர்: cuT!!!!!!!!! ஏங்க பிரியாமணி, இந்த சீன்ல ஜோதிகா எப்படி அழகா நடிச்சிருக்கும். உனக்கு நடிப்புன்னாவே அழதான் தெரியுமா? போ போ.... யோவ் assistant அடுத்த ஜோடிய வர சொல்ல. இந்தா பிரியாமணி, பாப்ஸ் கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. அப்பரம் கூப்பிடுறோம்.

அடுத்து சூர்யாவாக வைரமுத்து
ஜோவாக நமீதா

நமீதா: ஏ மச்சான்ஸ்? ஏண்டா இந்த பக்கம் வந்து?

வைரமுத்து: எனக்கு இங்கு வேற யாரையும் தெரியாது. உன்கூட தான் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
***

வைர: ஏன் நமீதா(high pitch voiceலில்), உனக்கு என்ன வேண்டும்?

நமீதா: எனக்கு ஒன்னும் புரியுது? (புரியல்ல)

வைர: நம்மை பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேண்டும்? மனைவியா?சிநேகிதியே?(எச்சில் தெறித்தது)


நமீதா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் மச்சான்ஸ்! உன்கூட என் life வாழது. உன்கூட நான் இருக்குது. உன்கூட சிரிச்சு பேசுது. சண்ட போடுது... உன் தோள்ல சாஞ்சி அழது.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்குது three kids பெத்துகுது. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அது உன்னைய மாதிரியே இருக்குது. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்குது.

அப்பரம் ஒரு நாள் செத்துபோது! அவ்வளவுதான் மச்சான்ஸ்!(சிரிக்கிறார் நமீதா)

வைர: ஏன்? நான் இளரத்தம் கிடையாது! நான் ஒரு பாடலாசிரியர்.. என்னை சுற்றி எப்போதுமே 4 பேரு பாட்டு எழுத சொல்லி கொண்டே இருப்பார்கள். அது என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். உனக்கும் எனக்கும் வயது வித்தியாசத்தை பார்த்தாயா? அப்படி இருந்தும் ஏன் என்னை...? (வெள்ளை ஜிப்பா பாக்கேட்டில் கையைவிட்டு வானத்தை பார்க்கிறார்)


நமீதா: நான் இட்லி சாப்பிடுது. இடியாப்பம் சாப்பிடுது. நான் ஒரு தமில்நாட்டு புண்ணு!அது ஒரு புண்ணுக்கு தான் விளங்குது!


வைர: சரி. கல்யாணம் செய்து கொள்ளலாம்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உன்னை பார்த்த முதல் நாளே
கண்கள் கடிதமானது
இதயம் இன்பாக்ஸானது!

(இந்த இடத்துல, தருவீயா தரமாட்டீயா ரீமிக்ஸ் சாங்)

இயக்குனர்: cutttttttttttttt!! நமீதா சூப்பரா நடிச்சீங்க! யோவ் assistant, மேடத்துக்கு ஆப்பிள் ஜூஸ் கொடு! வைரமுத்து சார், நீங்க கொஞ்சம் தமிழ்ல பேசி நடிக்க முடியுமா? நீங்க பேசின தமிழ் வெள்ளக்காரங்களுக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளுங்களுக்கு விளங்காது. சோ கொஞ்சம் ப்ளீஸ்....

assistant: director சார், இன்னொரு ஜோடி ரொம்ப நேரமா வேட் பண்ணிகிட்டு இருக்காங்க.

இயக்குனர்: வர சொல்லுய்யா!

(கவுண்டமணியும், ஜெனிலீயாவும் உள்ளே வர)

சூர்யாவாக கவுண்டர்
ஜோவாக ஜெனிலீயா


ஜெனிலீயா குதித்து கொண்டே(தோள்பட்டையில் நீல கலர் பை): ஏ என்ன மேன்,நீயா? ஏண்டா இந்த பக்கம்?(லூசுத்தனமாக சிரிக்கிறார்)


கவுண்டர்: ஹாலோ லேடிஸ்,எனக்கு இங்க வேற யாரும் தெரியாது. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்! let's go talk ya.
***

கவுண்டர்: உனக்கு என்ன வேணும்?

ஜெனிலீயா: என்ன சந்தோஷ், நீ சொல்றது புரியல்ல...

கவுண்டர்: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே! நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்?

ஜெனிலீயா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்! அப்பரம்...உன்கூட பைக்கல ஊர் சுத்தனும். நாயர் கடையில டீ குடிக்கனும். பக்கத்துவீட்டு பையன்கூட கோலி விளையாடனும்.மொட்ட மாடில ஜஸ்கீரிம் சாப்டனும். உன்கூட சிரிச்சு பேசனும். சண்ட போடனும்... .. நிறைய குழந்த பெத்துக்கனும். அப்ப தான் சந்தோஷ், எதித்தவீட்டு ஆண்டி பிள்ளைங்ககூட கிரிக்கெட் ஆட முடியும். பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்க கூடாது. என்னைய மாதிரி இருக்கனும் சந்தோஷ்.


(முகத்தை பாவமாக வைத்து கொண்டு)
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும் சந்தோஷ்! அவ்வளவுதான் எனக்கு வேணும்!

கவுண்டர்: ஏன்? நான் யூத் தான்! எவ்வளவு ஆம்பளைங்க இருக்கும்போது இந்த ஆல் இன் ஆல் அழகுராஜ்வ why selected? நான் ஒரு அரசியல்வாதி. என்னைய சுத்தி 4 அல்லகைங்க, 5 நாத்தாரிங்க, 6 பிக்பாக்கெட் பசங்க இருப்பாங்க. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்! நீ என்னையவிட 3 வயசு மூப்பு.அரசியல இதெல்லாம் சகஜமா இருந்தாலும், இந்த விஞ்ஞான உலகத்துல....


ஜெனிலீயா: அது ஒரு பொண்ணுக்கு தான் விளங்கும் சந்தோஷ்! உனக்கெல்லாம் அது புரியாது சந்தோஷ். (கண்ணை கசக்குகிறார்)

கவுண்டர்: சரி சரி...லேடீஸ் அழுதா என் heart தாங்காதும்மா! கல்யாணம் பண்ணிக்குவோம்!வாலிப வயசுல இதெல்லாம் சகஜமப்பா!(ஜெனிலீயாவோடு கை குலுக்குகிறார் ஒரு romantic look கொடுத்து...)

இயக்குனர்: cutttttt!! இந்த 3 ஜோடில யார select பண்றது?????

 

BLOGKUT.COM