போன வருசம் இதே மாசம், நான் பாலைவனத்துல இருந்தப்போ சோத்துக்கு ரொம்பத்தான் காய்ஞ்சு போயிருந்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு சமைச்சு(வேக வெச்சு) சாப்பிட்டுக்கிட்டே நாளைக் கழிச்சுட்டு இருந்தேன். ஒரு நாள் நம்ம கூட்டாளி வந்து "மாப்ளே, நமக்கு வாய்தா அவ்ளோதான், இந்தியா போறேன். என்கிட்ட ஒரு இந்திய மிக்ஸி இருக்கு. மிக்ஸி கண்டிசனை பார்த்து ஒருத்தனும் வாங்க மாட்டேங்குறான். சும்மா குடுத்தாக்கூட வாங்க ஆள் இல்லை. ஆப்போதான் உன் ஞாபகம் வந்துச்சு. வந்து எடுத்துக்கோ"ன்னான். அப்பாடா.. இட்லி, தோசைக்கு வழி பண்ணிய தெய்வமே கும்பிட்டுட்டு ஓட்டமா போயி மிக்ஸிய எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
அப்புறமென்ன? மொதல்ல நல்ல சட்னி அரைக்கிறது எப்படின்னு கூகிளோ கூகிளு. ஒரு 20 பக்கத்தைப் பார்த்து, 10 பக்கத்தை செலக்ட் பண்ணி, 5ஐ தேத்தி.. ஒரு வழியா சட்னி எப்படி அரைக்கிறதுன்னு மனப்பாடமே ஆகிருச்சு.
அப்போதான் சடார்னு மண்டையில ஏறுச்சு. மாவுக்கு என்ன பண்ண. எடுடா வண்டிய, தேடுடா அதுக்கு raw materla. தேடிப் புடிச்சு இட்லி அரிசியும், உளுத்துப் போற நெலமையிலிருந்த உளுந்தையும் வாங்கியாந்தேன். கூகிள் மொதலாளி மாவை எப்படி அரைக்கிறதுன்னு சொல்ல மாட்டேன்னு அடம்புடிக்க, "போடா வெங்காயத்தான் எங்க ப.பாச மக்கள் கில்லி மாதிரி சும்மா சேட்ல தட்டினா மாவே அனுப்புவாங்க, நீ பெரிய டுபுக்கு"..................... அப்படின்னு கூகிள் சேட் தொறந்து பபாச மக்கள் யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன். டொய்ங்கன்னு சத்தம்.
கவிதாயினி: "அண்ணா சவுக்கியாமா?"
"அதெல்லாம் இருக்கட்டும், எப்படி மாவரைக்கிறது?" இது நானு.
"கிரைண்டர்லதான், இதுகூடவா தெரியாது? நீங்க எல்லாம் என்னத்த படிச்சு கிழிச்சீங்களோ?"எகத்தாளமா சிரிச்சுகிட்டே இப்படி ஒரு பதிலு.
எனக்கோ செம கடுப்புதான் என்ன பண்ண? மாவாட்டி ஆவனுமே
"என் கிட்ட மிக்ஸிதான் இருக்கு, பரவாயில்லியா?"
"ஹ்ம்ம் பரவாயில்லே, அட்ஜஸ்ட் பண்ணி அரைச்சுரலாம்"
"சரி, எப்படி?"
"ஊர வெச்சதை போட்டு சுட்சிய போட்டா அரைக்குது. இது கூடத்தெரியாமையா இத்தனை வருசம் உயிரோட இருக்கீங்க? ஹஹஹாஹ்ஹ்ஹ்"
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுத்திருச்சு, மிக்ஸி இல்லீங்க என் தலைதான். " அரிசி எவ்வளவு போடனும், உளுந்து எவ்வளவு போடனும்? அதுதான் தெரியனும். சுட்சிய போட்டா ஓடும்னு எங்களுக்கும் தெரியும்"
"அண்ணா வேலை இருக்கு, பார்க்கலாம் பை"
"சொல்லிட்டுப் போ, இல்லாட்டி ஊர்ல இருக்க மாட்டே"
"தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? ____________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)
"சரி வெயிட் பண்ணு. இன்னொரு சேட் விண்டோ வருது"
"அண்ணா" இது அனு.
ஆஹா வந்துட்டாடா என் குல தெய்வம், மாரியாத்தா.
"தெய்வமே, மாவரைக்க என்னென்ன போடனும்?"
"யு மீன் இட்லி மாவு?"
அப்பாடா வெவரமா ஒருத்தியாவது இருக்காளேன்னு "ஆமாம்மா ஆமா"
"தோசைக்குக் கூட"
"அத்தேதான். ஆமாண்டி என் ராசாத்தி" மனசுக்குள்ள நெய் தோசை மணக்க ஆரம்பிச்சுருச்சு
"குழிப்பணியாரம் கூட.."
ஆஹா, என்ன ஒரு பொது அறிவு "அப்படித்தாண்டி என் ராசாத்தி"
"இட்லிக்கு எல்லாம் என்ன போயி கேட்கலாமா? பிட்சா பர்கர் அப்படின்னு கேளுங்க."
"தோடா, அறுக்க மாண்டாவதனுக்கு அம்பெத்துட்டு அருவாளாம்.இட்லிக்கு இப்போ சொல்லு போதும்"
"ஹிஹிஹி________________________________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)
"அண்ணா, இதுக்கு எல்லாம் பிஸ்து G3தான் இன்னும் ஒரு மணி நேரத்துல சேட்டுக்கு வந்துருவாங்க. அவுங்கள கேளுங்க. சும்மா பிச்சு எடுத்துருவாங்க"
"என்னத்த, தோசையவா?"
"அட அவுங்க சரியான சமையல் ஸ்பெசலிஸ்டு தெரியுமா? பபாசவுக்கு ஒரே செஃபு அது G3தான்"
மனசுக்குள்ள நெய் வாசம் வீசுன தோசை, லைட்டா கருகிறாப்ல ஒரு எபஃட்டு. சே, இதுக்கு எல்லாமா கலங்குறது. சிங்கம் இதுக்கே சோர்த்துட்டா எப்படி? G3 வந்து வயித்துல மாவை வார்ப்பாங்கன்னு நினைச்சுகிட்டே சேட் விண்டோவ பார்த்துட்டே இருந்தேன். அப்பவே நடு ராத்திரி, இன்னும் ஒரு மணி நேரமா? இருக்கட்டும். நமக்குன்னு ஒரு தோசை பொறக்காமையா இருக்கும்?
டொங்க்...டொங்க்..டொங்க்..
எப்ப தூங்கினேன்னே தெரியல, கண்ண முழிச்சு பார்த்த G3. உலகத்துல மானஸ்த்தின்னு ஒன்னு இருந்தா அது G3தான், பின்னே ஒத்த லைன்ல அனுபோட்ட மெயிலுக்கு ஓடோடி வந்துருக்காங்களே.
அப்படியே சிவாஜி மாதிரி பாசத்தக் கொட்டிப் பேச ஆரம்பிச்சேன் "அம்மா, மாவரைக்கிறது எப்படின்னு சொல்லும்மா. நீ சின்ன வயசா இருக்கும்போது..."
"ஹல்லோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ______________(இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)ஆளை விடுங்க. டொங்க். ஆப்லைன்னுக்கு போயாச்சி.
வெளங்குமாடா? ஒரு தோசைக்கு ஆசைப்பட்டு இப்படிச் சின்னா பின்னமாயிட்டேனே.
அதென்ன அந்த _________________
"யாராவது எனக்கு இட்லி, தோசை சுட்டுப் போட்டா நல்ல ரவுண்டு கட்டி திங்கத்தான் தெரியும். மாவெல்லாம் அரைக்கத் தெரியாது. "
இப்படித்தாங்க, சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி சொன்னாங்க. ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனா டபுள் மீல்ஸ் திங்கிற புள்ளைங்க, ஒரு தோசைக்கு வழி இல்லாம பண்ணிபுட்டாங்க. இவுங்களையும் நம்பி ஒருத்தன் வருங்காலத்துல தாலிய கட்டி தோசைக்கு ஆசப்படுவானே அந்த மவராசன், போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ.
இப்போ தலைப்புக்கு வரலாமா.
வட்டல்ல சோத்தக் கொட்டி வாய்க்கா வெட்டி, அதுல சாம்பார் ஊத்தி (தலைப்பை ஒரு முறை நிமிர்ந்து உக்காந்து படிங்க) திங்கிறீங்களே, மாவாட்டத் தெரியாதா?
Friday, May 16, 2008
வெட்கமே இல்லாம....
Subscribe to:
Post Comments (Atom)
31 Comments:
-----------------------
இல்லாமச் சத்தம் போட்டுச் சிரிச்சேன்.
:-)))))
நானும் கூட
-------------------------------
இப்படி சிரிக்காம
________________________________
இப்படி சிரிச்சேன் :))))))))))))))
எனக்கும் கூட இதே நிலைமைதான் இன்னிக்கு
புதுசா மிக்ஸி இருக்கு பாத்திர பண்டமெல்லாம் இருக்கு!
ஆனா மோர்குழம்பு வைக்க கடலைபருப்பு ஊறவைச்சு அரைக்கணுமா அல்லது து.பருப்பு ஊறவைச்சு அரைக்கணுமா அல்லது பொட்டுகடலை ஊறவைச்சு அரைக்கணுமான்னு தெரியல :((((((
எனி ஹெல்ப் ஃப்ரம் ப/பா/சங்கம்
:)))))))
கடைசில மாவு அரைச்சீங்களா இல்லையா?
அதச்சொல்லாம முடிச்சிட்டீங்களே.!
:)
பயமறியாத பாவைகளை பாத்து எப்படி இப்படி ஒரு கேள்வி கேக்கலாம் நீங்க.. அவங்க மாவாட்ட பிறந்தவங்களா அவங்க...
:))
// அவங்க மாவாட்ட பிறந்தவங்களா அவங்க...//
அட சுடுதண்ணிகூட வெக்கத் தெரியாதுங்க. ஊருக்குள்ள இவுங்க செம பில்டப்பு. அவுங்க வீட்டுக்கு போனா காபி கூட ஹோட்டல்ல இருந்துதான் வரும். அந்த நிலைமை. இந்த ப.பாசவுக்கு அர்த்தம் தெரியுங்களா?
பந்தா -பாவ்லா -சங்கம்.
//"யாராவது எனக்கு இட்லி, தோசை சுட்டுப் போட்டா நல்ல ரவுண்டு கட்டி திங்கத்தான் தெரியும். மாவெல்லாம் அரைக்கத் தெரியாது. "
இப்படித்தாங்க, சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி சொன்னாங்க. ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனா டபுள் மீல்ஸ் திங்கிற புள்ளைங்க, ஒரு தோசைக்கு வழி இல்லாம பண்ணிபுட்டாங்க. இவுங்களையும் நம்பி ஒருத்தன் வருங்காலத்துல தாலிய கட்டி தோசைக்கு ஆசப்படுவானே அந்த மவராசன், போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ.//
ஹா..ஹா.. செம ஆப்பு மாமோய்ய்ய்ய்ய் :))))))))
//கயல்விழி முத்துலெட்சுமி said...
பயமறியாத பாவைகளை பாத்து எப்படி இப்படி ஒரு கேள்வி கேக்கலாம் நீங்க.. அவங்க மாவாட்ட பிறந்தவங்களா அவங்க...//
சப்போர்ட்ட பாருங்கய்யா?:P:))))))
//ஆயில்யன். said...
எனக்கும் கூட இதே நிலைமைதான் இன்னிக்கு
புதுசா மிக்ஸி இருக்கு பாத்திர பண்டமெல்லாம் இருக்கு!
ஆனா மோர்குழம்பு வைக்க கடலைபருப்பு ஊறவைச்சு அரைக்கணுமா அல்லது து.பருப்பு ஊறவைச்சு அரைக்கணுமா அல்லது பொட்டுகடலை ஊறவைச்சு அரைக்கணுமான்னு தெரியல :((((((
எனி ஹெல்ப் ஃப்ரம் ப/பா/சங்கம்//
இவர்வேற... விட்டா இதெல்லாம் ஆண்கள் கடமைன்னு சொன்னாலும் சொலுவார் போல:p
// ILA said...
// அவங்க மாவாட்ட பிறந்தவங்களா அவங்க...//
அட சுடுதண்ணிகூட வெக்கத் தெரியாதுங்க. ஊருக்குள்ள இவுங்க செம பில்டப்பு. அவுங்க வீட்டுக்கு போனா காபி கூட ஹோட்டல்ல இருந்துதான் வரும். அந்த நிலைமை. இந்த ப.பாசவுக்கு அர்த்தம் தெரியுங்களா?
பந்தா -பாவ்லா -சங்கம்.//
இது டாப்பு:)))))))
இதான் துமபை விட்டு வாலைப் புடிக்கிறதுன்னு சொல்றது...பெர்ர்ர்ர்ரிய டீச்சர் இருக்கச்ச பச்சப்புள்ளங்க கிட்ட கேட்டா பாவம் அதுக என்ன செய்யும்?
ஆமா இளா என்ன கேட்டீங்க இட்லி மாவா?இட்லின்னா வெள்ளையா ரவுண்டா குஷ்பு மாதிரி இருக்குமே அதுவா..
ச்சே இந்த காலத்து ஆம்பிளைங்க மோசம் இட்லி மாவு கூட அரைக்கத் தெரிஞ்சிக்கலை....
என்ன முத்துலஷ்மி நான் சொல்றது?கரீட்டா
ஏதோ இட்டிலிக்கு மாவு அரைக்கணும்ங்கற அளவுக்காவது தெரிஞ்சிருக்கே.
:))))))))))))))
ஆமா.. கண்மணி ரொம்ப சரி..
இட்லிக்கு மாவரைக்க தெரியாம காஞ்ச ஊரில் போய் உக்காந்தது அவர் தப்பு.. அப்பறம் விவரம் யாருகிட்ட கேக்கனுமோ அவங்க கிட்ட கேக்காம சின்னபுள்ளைங்கள கேட்டு நாளை வாழ்க்கையில் மாவாட்டனும்ன்னு சொல்லி பயமுறுத்துவது பெரிய தப்பு..
///பந்தா -பாவ்லா -சங்கம்.//
:))))))))))))))))))))))
:))
பபாச'வில் இளா!!?? ஏதோ ஆபரேசன் அது இதுன்னு சொல்றாங்களே.. அந்த மேட்டரா?
ஆத்தா மிக்ஸி குடுத்தா, அரிசி குடுத்தா, உளுந்து குடுத்தா
ரெசிபி மட்டும்தான் குடுக்கல....
சும்மா எல்லாத்தையும் போட்டு கலந்து அரச்சு வுடு வாத்யாரே...
ஹாஹாஹாஹாஹா.. ILA சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் காமெடி!!
"அரைச்ச மாவ அரைப்போமா
துவைச்ச துணிய துவைப்போமா?"
எக்ஸ்கீயூஸ் மீ.மே ஐ கம் இன்.
யூ மீன் மாவு.த வொயிட் செமிசாலிட் திங்க்.
வெரி சிம்பிள்.
வண்டியெடுங்க.தமிழ்க் கடைக்குப் போங்க.ரெடிமேட் மாவு வாங்கிட்டு வந்து பாத்திரத்துல வைங்க.
:D :D :D :D.
:))
//விவரம் யாருகிட்ட கேக்கனுமோ அவங்க கிட்ட கேக்காம சின்னபுள்ளைங்கள //
அது சரிங்க.டிபார்ட்மெண்ட் கை மாற காலம் வந்தாச்சு போல தெரியுது.
//"அரைச்ச மாவ அரைப்போமா
துவைச்ச துணிய துவைப்போமா?"//
மாவ அரைக்கிறதுக்கே இன்னும் வழிய காணோமாம். இதுல அரைச்சு வெச்ச மாவை அரைக்கனும். அது பெரிய கம்ப சூத்திரம் பாருங்க.
ஆளப் பாருங்க, துணிய வேற தொவைக்கனுமாம்லே.
எது அப்ளை ஆவுதோ அது செலக்டு பண்ணீக்கங்க:
1. என்னாது? இட்லிக்கு மாவு அரைக்கணுமா? அரிசி, உளுந்தா? முன்ன பின்ன ஹோட்டல்ல காசு கொடுக்காம சாப்பிட்டுருந்தாத் தானே தெரியும்?
2. இவ்வளவு மரம் மாதிரி வளந்து நிக்கிறிங்க. உங்க வீட்டுல, 'பையன் நாளைக்கு குத்து விளக்கு வாங்கப் போறான் (எதுக்கு?), இன்னிக்கு மாவரைக்கக் கத்துக்க வேணாமா?'ன்னு சொல்லிக் கொடுக்கலையா?
3. அட்ரஸ் மாறி வந்துட்டு, ரவுசைப் பாரு. இப்பிடி ரைட்டுல திரும்பி, லெஃப்டு வாங்கி, யூ டர்ன் அடிச்சு, முத ரைட்டு, அப்பாலிக்கா லெஃப்டு, வ.வா.ச. வந்துடுவீங்க. அங்க இருக்கும் பாரு சனம், நல்லா இட்லிக்கு மாவு என்ன, முழங்கை நெய் வார பொங்கலே பொங்குவாங்கப்பா.
//ஆளப் பாருங்க, துணிய வேற தொவைக்கனுமாம்லே.//
ஆமாங்க, மாவு தான்.. ஹாஹா.. சரி அதவிடுங்க, atleast துணியவாவது துவைக்க கத்துக்கனும் மச்சி!
துணி துவைக்கணுமுன்னு இருக்கறவங்க எல்லாம் இங்கே என்ன பண்ணுறீங்க?
ஓடுங்க உடனே நம்ம செல்வேந்திரன் பதிவுக்கு:-)
ஹாஹாஹா..
அண்ணே, நாங்கெல்லாம் அடுத்த தலைமுறை மக்கள்ஸ்ங்க. ஒரு தோசை சுடுறதுக்கு ரெண்டு நாள் முன்னவே உளுந்து, அரிசி எல்லாம் ஊற வச்சு, மாவாட்டி (அல்லது நைஸா அரைச்சு), நைட்டு மூனு மணிக்கு எழுந்திருச்சு பார்த்து மாவு பொங்கிடுச்சா இல்லையான்னு பார்த்து காலையில எழுந்திரிச்சு தோசை சுடுறது எல்லாம் உங்களை போல ஓல்டு ஜெனெரேஷன் செய்யுற வேலை..
இப்போ இருக்கவே இருக்கு ரெடி மேட் மாவு.. தோச சுடுறதுக்கு ரெண்டு நிமிடம் முன்பு மாவுல தண்ணியை ஊத்தி கொஞ்சமா கலக்கி, தோசைக்கல்லுல அலேக்கா அந்த மாவை ஊத்தினா அழகா வருது தோசை.. தோசை என்ன, ரவா, இட்லி, சப்பாத்தி, நான், பெர்கர், நாசி லெமாக், பித்ஜான்னு பல ஐட்டம் 5 நிமிடத்திலேயே செஞ்சு முடிக்க வேண்டிய வேலையை ரெண்டு நாளா செஞ்சா இப்படித்தான் ஆகும். :-P
இதுக்குதான் ஏதாவது செய்யுறதுக்கு முன்னே எங்கே கிட்ட சஜ்ஜெஸ்ஷன் கேட்கணும். :-))))
என்னங்க இளா இது.. இட்லி அரைக்கிறது எப்படீன்னு பொண்ணுங்க கிட்டயா கேக்குறது? சரியாப் போச்சு போங்க. இதெல்லாம் பசங்க கிட்ட கேக்கனும்.
நம்மூர்கள்ள 1க்கு 3ன்னு போடுவாங்க. அதாவது ஒரு பங்கு உழுந்துக்கு மூனு பங்கு அரிசியாம். நான் சரிக்குச் சரி போடுவேன். அப்பத்தான் மெத்தோமெத்துன்னு வரும். அதுவுமில்லாம உழுந்து ஊறப் போடுறப்போ வெந்தயத்தையும் ஊறப்போட்டு அரைச்சா தோசை சுடும் போது அமெரிக்காவே உங்க வீட்டு வாசல்ல தட்டோட நிக்கும். அவ்வளோ கமகமக்கும்.
உழுந்தைத் தோலோடையும் அரைக்கலாம். இல்லாமயும் அரைக்கலாம். சுவையில வித்தியாசம் இருந்தாலும் ரெண்டுமே நல்லாருக்கும்.
இப்பத்தான் இந்த ஆம்ஸ்டர்டாம் மாநகரிலே ரெண்டு தோசையை வெங்காயத் துவையலோடு உள்ளே தள்ளிவிட்டு தெம்பாக இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.
இளா இதெல்லாம் பொம்பளை புள்ளைங்கிட்ட கேட்டா அவங்க என்ன பண்ணுவாங்க.. ராகவன் பாருங்க சும்மா பின்னி பெடல் எடுக்குறாரு..
//எனக்கும் கூட இதே நிலைமைதான் இன்னிக்கு
புதுசா மிக்ஸி இருக்கு பாத்திர பண்டமெல்லாம் இருக்கு!
ஆனா மோர்குழம்பு வைக்க கடலைபருப்பு ஊறவைச்சு அரைக்கணுமா அல்லது து.பருப்பு ஊறவைச்சு அரைக்கணுமா அல்லது பொட்டுகடலை ஊறவைச்சு அரைக்கணுமான்னு தெரியல :((((((
எனி ஹெல்ப் ஃப்ரம் ப/பா/சங்கம்//
இதுக்கெல்லாம் பா பா சங்கம் ஒதவாது வ.வ சங்கம் தான் உதவும்.. துவரம் பருப்பை ஊற வெச்சி அரைங்க..
Ada
sirithu sirithu vairu vali yae vanthu tathu ponga
ARUMAI
Post a Comment