Monday, May 19, 2008

டும் டும் டும்... அத்தான் வருவாக

டும் டும் டும்!!!! இங்க எல்லாருக்கும் ஒன்னு தெரிவிச்சுக்கு விரும்புறோம்- நம்ம பயமறியாப் பாவையர் சங்க உறுப்பினர் 'இம்சை அரசி'க்கு கல்யாணம்ங்கோ!! (ஜோரா எல்லாரும் ஒரு தடவ கைதட்டுங்கோ).
இம்சை அரசிக்கு கல்யாணம் என்றதும் மை பிரண்ட்டுக்கு ஒரே குஷி. ஓசியில் நல்லா ஒரு வெட்டு வெட்டலாம் என்பதற்காக அல்ல (நிஜமா), தோழி ஒருத்தி வாழ்க்கையின் அடுத்த பகுதி போகிறாள் என்ற மகிழ்ச்சியோடு இருந்தார்.
மற்ற ப. பா உறுப்பினர்கள் அனைவரையும் சந்தோஷ் சுப்பரமணியத்தோடு இருந்தனர்.. ச்சீ.. ஐ மின் சந்தோஷமாக இருந்தனர். மை பிரண்ட் அனைத்து உறுப்பினர்களையும் கூட்டிகிட்டு இம்சை அரசி கல்யாணத்திற்கு இரண்டு நாளைக்கு முன்பே சென்றார். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தோம். கல்யாண நாள் அன்று மணப்பெண்ணை அலங்கரிக்கும் வேலை எங்கள் கடமை! கடமை என்று வந்துவிட்டால் நாங்கல்லாம் காந்தி மாதிரி, நேர்மை என்று வந்து விட்டால் நாங்கல்லாம் நேரு மாதிரி!
ஒரு அறைக்குள் நாங்க எட்டு பேரும் இம்சை அரசியை அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம்.. இதோ கல்யாண கலாட்டா..
இம்சை அரசி: ஏய் காயத்ரி வலிக்குதுடி, பார்த்து hairபின்ன குத்து.
எல்லாம் காயத்ரிகளும்: ஏய் நான் என்ன பண்ணேன். நான் பாட்டுக்கும் என் வேலைய பாத்துகிட்டு இருக்கேன்.
இம்சை அரசி: ஐயோ உங்கள சொல்லல்ல, இவள சொன்னேன்.
கண்மணி: என்ன இம்சை அரசி, மாப்பிள்ளை எப்படி இருப்பாரு? அஜித் மாதிரியா? இல்ல விஷால் மாதிரியா? இல்ல ரண்டும் கலந்த விஜய் மாதிரியா?
அனுசுயா: அவரு இவளுக்கு பிடிச்ச மாதிரி.. அப்படிதானே அரசி!
(கோரஸா எல்லாரும் சிரித்தனர். இந்த தமிழ் படங்களில் ஹீரோயினுக்கு பக்கத்துல சில பெண்கள் நின்று கொண்டு தேவையில்லாமல் சிரிப்பாங்களே, அந்த மாதிரி வச்சுக்குங்க)
இம்சை அரசி: ஏய் ரொம்ப பேசினீங்களா, சாப்பாடு கிடையாது!
மை பிரண்ட் : நோநோநோநோ!!
அனுசுயா: அட சத்தம் போடாம இருக்குறீயா நீ! இப்ப ஏன் நோன்னு கத்துற. அப்பரம் மாப்பிள்ள, பொண்ண ரொம்ப torture பண்ணுறோம்னு நினைச்சுட போறாரு.
காயத்ரி: என்ன அரசி, கல்யாணம் நடக்க போகுது. கொஞ்சம்கூட முகத்துல வெட்கம் இல்ல.. என்ன பொண்ணு போ நீ..
இம்சை அரசி: வெட்கம்ன்னா??
மை ஃபிரண்ட்: அது சரி, நான் அப்பவே சொன்னேன் ..daily 2 மணி நேரம் வெட்கப்படற மாதிரி train பண்ணிக்கோன்னு. கேட்டா தானே.
g3: வெட்கம் தானே, மாப்பிள்ளைய பாத்த பிறகு தானா வந்துடும்.
காயத்ரி: அப்பரம் அரசி, இனி வலைப்பூ பக்கம் வர நேரம் இருக்குமா?
தமிழ்மாங்கனி: ஏன் இல்லாம, இனி தான் காதல் கதைகள், காதல் கவிதைகள் எல்லாம் குருவி மாதிரி..ச்சி ஐ மின் அருவி மாதிரி கொட்ட போது!
அனுசுயா: இல்லடி, கல்யாணம் முடிஞ்சு, அவங்க வீடு, இவங்க வீடுன்னு விருந்து, அப்பரம் honeymoon trip, அப்படி இப்படின்னு இரண்டு மூனு மாசத்துக்கு இம்சைக்கு ஒரே பிஸி தான்!!
(அனைவரும் அதே கல்யாண பொண்ணு தோழிகளின் சிரிப்பை சிரித்தனர்.)
மை பிரண்ட்: ஆமா நீ எப்போதும் இரட்டை வாழைப்பழம் சாப்பிடுற ஆளுதானே, அப்ப கண்டிப்பா இரட்டை குழந்தைதான் பிறக்கும்.
இம்சை அரசி: ஏய் ச்சீ போடி!
காயத்ரி: தோடா, வெட்கம் வந்துடுச்சு டோய்!
(எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்ய...)
அறை கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டது. காயத்ரி சென்று கதவை திறந்தார்.
"இங்க யாரு தமிழ்?" என்றார் ஒரு பெரியவர்.
அனைத்தும் ப.பா சங்க உறுப்பினர்களும் :(கோரஸாக) நாங்க எல்லாரும் தமிழ் ஆளுங்க தான்.
"அட அத சொல்லல்ல, தமிழ்மாங்கனின்னு ஒரு பொண்ணு, அந்த பொண்ண கூப்பிடுறாங்க, மேடையில வாழ்த்து சொல்ல.. சீக்கிரம் வாங்க." என்றார்.
தமிழ்மாங்கனி மேடையில்: மைக் டெஸ்திங், திரிஷா, நயன், சிம்ரன்
"என்னது??" என்றார் அவர்.
தமிழ்மாங்கனி: இல்ல, எத்தனை நாளைக்கு தான் மைக் டெஸ்திங் 1,2,3ன்னு சொல்றது. அதான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லி பாத்தேன். ஏன்னா, நாங்க பயமறியாப் பாவையர்கள்!! பாவையர்கள்! பாவையர்கள் (echo effectல்)
"சரி வாழ்த்த சொல்ல" என்றார்.
தமிழ்மாங்கனி:
இயக்குனர் இறைவனுடைய
இன்றைய
புதிய கதை
உன் வாழ்க்கையின்
என்னொரு அழகிய
பக்கம்
கதாநாயகி நீயே
புதுமுகத்துடன்
கதாநாயகன் அவரோ
அறிமுகத்துடன்
கல்யாண வானில்
காதல் வானவில்
அன்பான நதியில்
அக்கறையான நீரோடை
உன் வாழ்க்கையில்
இனி சோலைவனம்
இனிமையான மலர்வனம்!
வாழ்க! வாழ்க!
என்று வாழ்த்துவோர் ப.பா சங்கம்!
கல்யாணம் இனிதே முடிவடைய, மை பிரண்ட் முதல் பந்தியில் தன் கடமையை ஆரம்பித்தார் :)))))

4 Comments:

said...

கொஞ்சம் லேட்டா சொன்னாலும் சூப்பரா சொல்றோம்.

அக்கா ஜெயந்திக்கும் - மாமா பிரபுவுக்கும் திருமண வாழ்த்துக்கள். :)

said...

//மை ஃபிரண்ட் ::. said...
கொஞ்சம் லேட்டா சொன்னாலும் சூப்பரா சொல்றோம்.//

நல்லா இருக்கு:)

//
அக்கா ஜெயந்திக்கும் - மாமா பிரபுவுக்கும் திருமண வாழ்த்துக்கள். :)
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

\\அக்கா ஜெயந்திக்கும் - மாமா பிரபுவுக்கும் திருமண வாழ்த்துக்கள். :)
\\ ரிப்பீட்டேய்

Anonymous said...

Happy Married Life Imsai

 

BLOGKUT.COM