Thursday, May 22, 2008

இளையர்களின் ஆத்திசூடி

எல்லாத்தையும் ரிமிக்ஸ் செய்யும் காலம் இது. சரி நாமும் இந்த தவறை செய்யலாம் என்று நினைத்து உருவாக்கப்பட்டது இது. தவறு செய்வது ஒன்று தப்பில்லை. அப்படினு நான் சொல்லவில்லை. வசூல் ராஜா படத்தில் சிரிச்சு சிரிச்சு வந்தா பாடலில் வைரமுத்து சொன்னது தான்

" தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேடா!"

சரி நம்ம கதைக்கு வருவோம், இன்றைய காலத்தில் இளையர்களின் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை-

அபிஷேக் பச்சனை ரசி
ஆன் லைன் chatting செய்
இண்டர்நெட்டை கைவிடேல்
ஈமெயிலில் forward msg அனுப்பு
உறங்கும்போது தலையணைகீழ் cellphone வை
ஊறுகாய் தொட்டுகொள்
எக்ஸாமுக்கு பின் பதில் பார்க்காதே
ஏ பி சி மற
ஐ லவ் யூ சொல்ல பழகு
ஒன்றுக்கு மேல் வலைப்பூ உருவாக்கு
ஓ போடு
ஔவையே, என்னை மன்னிச்சிக்கோ!!

11 Comments:

said...

ஜூப்பரு.. :-)

said...

//ஔவையே, என்னை மன்னிச்சிக்கோ!!/
இந்த கடேசி பஞ்ச் சூப்பரு

said...

//எக்ஸாமுக்கு பின் பதில் பார்க்காதே
//

இத சொல்றதுல 100% தப்பே இல்ல :))

said...

//ஊறுகாய் தொட்டுகொள்///

ஆமாங்க எனக்கும் கூட, சில பேர் அதை அப்படியே சாதம் மாதிரி சாப்பிடும் போது சொல்லத்தோணும் :))

said...

//ஊறுகாய் தொட்டுகொள்//
எப்போ??

said...

கலக்கல்

said...

//இன்றைய காலத்தில் இளையர்களின் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை-

அபிஷேக் பச்சனை ரசி//

இது ஏதோ இளைஞியின் ஜொள்ஸ் குரல் மாதிரி தெரியுதே:P

இந்த மேட்டர் ஐஸ்வர்யாராயுக்கு தெரியுமா?:P

said...

@ILA,

//இந்த கடேசி பஞ்ச் சூப்பரு//

பின்ன இல்லாம!!

////ஊறுகாய் தொட்டுகொள்//
எப்போ??//

ஆஹா, ஒன்னுமே தெரியாத பாப்பா!!

said...

//இந்த மேட்டர் ஐஸ்வர்யாராயுக்கு தெரியுமா?:P//

தெரியாது, அபிஷேக் இந்த மேட்டரை ரகசியமா வச்சுருக்க சொல்லியிருக்கு.

said...

\\தெரியாது, அபிஷேக் இந்த மேட்டரை ரகசியமா வச்சுருக்க சொல்லியிருக்கு\\
ஹா ஹா ஹா ஹா

said...

//அபிஷேக் பச்சனை ரசி
ஆன் லைன் chatting செய்
இண்டர்நெட்டை கைவிடேல்
ஈமெயிலில் forward msg அனுப்பு
உறங்கும்போது தலையணைகீழ் cellphone வை
ஊறுகாய் தொட்டுகொள்
எக்ஸாமுக்கு பின் பதில் பார்க்காதே
ஏ பி சி மற
ஐ லவ் யூ சொல்ல பழகு
ஒன்றுக்கு மேல் வலைப்பூ உருவாக்கு
ஓ போடு//

இதெல்லாம் கற்பனையா? நாங்க நம்பனுமா? நீ தினமும் கடைபிடிக்கிறதை கற்பனைனு சொல்லி அடிச்சி விடறியா தங்காச்சி..

 

BLOGKUT.COM