Monday, November 26, 2007

சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!

எத்தனை நகைச்சுவை வந்தாலும் இதுக்கு ஈடாகுமா?

சொல்லுங்க.. இதுக்கு ஈடாகுமா?



“மெதுவா மெதுவா.. சுவருக்கு வலிக்குமுல்ல.”

“சாவடிக்கிறாங்களே என்னைய!”

மறக்க முடியுற டயலோக்கா இது! எத்தனை தடவை இந்த டயலோக் வச்சி சுத்தி உள்ளவங்களை காமெடியனா ஆக்கியிருக்கோம் நாங்க..

ம்ம்.. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.. போதும் நிறுத்துங்க.. உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நிறுத்துங்க.. இந்த டயலோக் கேட்டதும் எனக்கு வயசாயிடுச்சோன்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சிருப்பீங்களே.. அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக்கூடாது..
நம்ம கவிதாயினியே எனக்கு பாட்டின்னா நான் சின்ன குழந்தைன்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்?

தெரியுமே! உடனே ஆரம்பிச்சிடுவீங்களே அடுத்த டயலோக்கை??

ன் கொடுமை சார் து!!!!

அதானே?


கரேக்ட்.. நானும் அதான் சொல்ல வர்றேன்.. போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. வந்து பட்டையை கிளப்பலாம்.. உங்க எண்ட்ரியை பதிவு பண்ணியாச்சா??

Sunday, November 25, 2007

என்ன கொடுமை சார் இது??

தீபாவளிக்கு ஒரு குஷில ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு ஓடியாச்சு. தம்பியும் வந்து ஆஜர் ஆயிட்டான். நம்ம கைலதான் ஒரு கேமரா மாட்டிக்கிச்சு இல்ல ;) சும்மா ப்ரொஃபஷனல் கொரியர் ரேஞ்சுக்கு... ச்சே... ப்ரொஃபஷனல ஃபோட்டோக்ராபர் ரேஞ்சுக்கு வளைச்சுக் கட்டி ஃபோட்டோவா எடுத்து தள்ளினேன். எங்க பாட்டி ஆச்சர்யமா அந்த டிஜிகேமயே பாத்துட்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்ததும் இப்படி யாருமே காட்டினதில்லனு வேற ஒரே ஃபீலிங்கா விட்டுட்டு நான்தான் அதுகிட்ட காட்டறேன்னு என் மேல ஒரு பாசப் பார்வைய வீசுச்சு.

"அய்யோ ஆயா... அவங்க இதுவரைக்கும் வச்சிருந்தது வேற கேமரா. இது இப்போதான் புதுசா வந்திருக்கு" னு நான் சொல்லவும்

"எவ்வளவு கண்ணு இது"-ன்னு கேட்டுச்சு. நானும் அப்படியே பந்தா விடலாம்னு

"இருபதாயிரம்"-னு சொன்னதும் அப்படியானு எதும் சொல்லாம ஆ-னு நாங்க ஃபோட்டோ எடுக்கறதையே பாத்துட்டு இருந்துச்சு. நானும் என் தம்பியும் ஓடி போயி எடுத்த ஃபோட்டொஸ் எல்லாத்தையும் சிஸ்டத்துல காப்பி பண்ணினோம். எங்கம்மாவும் எங்களோட வந்து உக்காந்துக்கிட்டாங்க. எல்லாத்தையும் ஓபன் பண்ணி பாத்துட்டு இருந்தப்போ ஒரு ஃபோட்டோ டிம்மா இருக்குனு நான் ஃபீல் பண்ணவும் என் தம்பி உடனே அதை ஃபோட்டோஷாப்ல போட்டு ப்ரைட்டாக்கினான். என் தம்பி சாஃப்ட்வேர் இஞ்சினியர் கிடையாது. எங்க வீட்டோட ஒரே சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் அடியேன்தான். அதனால அவன் இந்த வேலை பண்ணவும் எங்கம்மா ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. அப்படியே பெருமை தாங்கலை. எனக்குனா ஒரே எரிச்சல். சரி நாம எதாவது பண்ணி நாமளும் ஒண்ணும் சளைச்ச ஆளில்லைனு காட்டனும்னு ஒரு விபரீத முடிவ எடுத்தேன். முடிவ எடுத்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு. அய்யகோ! இந்த இத்து போன ஃபோட்டோஷாப்ப கத்துக்காம போனியேடி செல்லக்குட்டி-னு என்னை நானே நொந்துகிட்டு சரி எதாவது எடுத்து நம்ம MS-Paint அறிவ வச்சு சமாளிச்சடலாம்னு, எங்கம்மா ஃபோட்டோவ எடுத்து இதை பாருங்கம்மா கல்யாண ஆல்பத்துல எல்லாம் போடற மாதிரி பேக்ரவுண்ட் எப்படி மாத்தி தரேனு சொல்லிட்டு களத்துல இறங்கிட்டேன். அட ராமா! உள்ள ஒரு எழவும் புரியலை. நானும் வச்சுக்கிட்டு ஒரு கால் மணி நேரமா திரு தி்ருனு முழிச்சுட்டே உக்காந்திருந்தேன். அட புள்ளையே! சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டயே-னு உள்ளுக்குள்ள ஒரு பரிதாப குரல். எங்கம்மாவும் புள்ள எதாவது பண்ணும் பண்ணும்னு என்னையும் சிஸ்டத்தையும் மாறி மாறி பாத்துட்டே இருந்தாங்க.

என் உடன்பிறப்பு அதுக்கு மேல பொறுக்க முடியாம இங்க குடுக்கானு என் கைல இருந்து மவுஸ வாங்கி கசமுச கசமுசனு ஏதேதோ சித்து வேலையெல்லாம் பண்ணி ஃபோட்டோவ நான் சொன்ன மாதிரி சூப்பரா மாத்தி குடுத்தான். எனக்கு அவமானம் தாங்க முடியலை. எங்கயாவது ஃபேன் ஆஃப் பண்ணியிருக்குதானு பாத்தேன். வேற எதுக்கு???? :(((

எங்கம்மா என்னைய பாத்து கேவலமா ஒரு லுக் விட்டு "உன்னை போயி இவ்ளோ செலவு பண்ணி கம்ப்யூட்டர் படிக்க வச்சா ஒழுங்கா படிக்காம இப்படிதான் ஒண்ணுந்தெரியாம இருப்பியா? அவன் வேற படிச்சாலும் எப்படி சூப்பரா எல்லாம் பண்றான். இப்பயாவது அவன்ட்ட கத்துக்கோ"-னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாங்க. முருகா! ஏன் என்னை சோதிக்கற?!! ஃபோட்டோஷாப் தெரியாததால நான் சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் இல்லைன்ற அவப் பெயரா???? என்ன கொடுமை சார் இது?????

---------------------------------------
போட்டி நாள் முடிய இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கு.. கலந்துக்க நினைப்பவர்கள் சீக்கிரமே உங்க பதிவுகளை அனுப்புங்க..

Monday, November 12, 2007

மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா

என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..?

ஏன்.. என்னாச்சு சாந்தி..?

நம்ம குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு பாடுறா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?

என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..?

புது வேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க வந்தாராம்...!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நம்ப அய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு முனியம்மா..

நான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை வெறுப்பேத்த இப்படியெல்லாம் சொல்றீங்க...!



Wednesday, November 7, 2007

தீப ஒளி வாழ்த்துக்கள்..

வாங்க மக்களே வாங்க..

அட எல்லாரும் தீபாவளி மூட்ல இருக்கீங்களா? சூப்பருங்க. வருஷத்துல ஒரு முறைதாங்க வருது தீபாவளி! 2-3 நரகாசுரன் இருந்திருந்தா வருஷத்துல 2-3 தடவை தீபாவளிங்கிற பேருல கொண்டாடி பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா காது செவுடாகிற மாதிரி வெடி கொளுத்தி போடலாம்தான்.. ஆனா பாருங்க.. நம்ம ஆதங்கத்தை கேட்கத்தான் ஆள் இருக்கா என்ன..

கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. G3 ரெண்டு நாளைக்கு முன்னவே சங்கத்து பக்கம் ஆளை காணோம். கேட்டால் யார் யார் வீட்டுக்கு எப்பெப்போ போகணும், என்ன சமையல்ன்னு குறிப்பெடுத்துட்டு இருக்காங்க. ஹ்ம்ம்.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு!

இம்சை அரசி விகடன்ல வந்துட்டேன்னு ட்ரீட் தர்றேன்ன்னு சொன்னாங்க. குரல் மட்டும்தாங்க கேட்டுச்சு. அதுக்கப்புறம் அவங்களையும் சங்கத்து பக்கம் காணவே இல்லை. ஆமா.. காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டணும்ங்க. கண்மணியக்கா காணாமல் போயிட்டாங்க. எங்கேயாவது பார்த்தீங்கன்னா சங்கத்துல கொண்டு வந்து விடுங்க. இவருடைய அங்க அடையாளங்கள்: ரெண்டு கண்கள், அவைகளை மறைக்கிற மாதிரி பெரிய சோடா பொட்டி கண்ணாடி, ரெண்டு காதுகள். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. ஒரே ஒரு மூக்கு.. ஒரே ஒரு வாய்தான். கைகளும் கால்களும் ரெண்டுதான்னு நினைக்கிறேன்..

அனுசுயா இங்கேதான் எங்கேயோ இருந்தாங்களே!

“அனுசுயா.. அனுசுயா.. இருக்கீங்களா?”

ஹ்ம்ம்.. இவங்க மட்டும்தான் என்ன பண்ணுவாங்க. கோவை மாநகரமே இவங்களை நம்பிதானே இருக்கு..

என்ன கொடுமை சார் இது!!!!

சரிங்க.. ஒத்த ஆளா இங்கே நின்னாலும், பாப்பாக்களின் சார்பா எல்லாருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்... சே சே.. தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்படியே கீழே இந்த வாழ்த்து பொட்டியை பாருங்க..


என்னத்தான் வளர்ந்தாலும் நம் அடையாளத்தை, கலாச்சாரத்தை மறந்திட கூடாதுங்க. எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் சந்தோஷமாக இருக்க இறைவனை வணங்குவோமாக..

சரி, இப்போது இன்னொரு முக்கியமான மேட்டர்.. சங்கம் போட்டிக்கு உங்கள் படைப்பு ரெடியாச்சா? இன்னும் இல்லையா? என்ன கொடுமை சார் இது!! ஒரு சின்ன பையன் போட்டின்னு வந்துட்டா கலத்துல குதிக்காமல் விடுறதில்லைன்னு பட்டையை கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

இந்த தீபாவளி விழாவில் “என்ன கொடுமை சார் இது!” தலைப்புக்கு பொருத்தமா எதாவது இருந்தால் அதையும் எழுதலாமே!

ஆமா... தலை தீபாவளி கொண்டாடும் அண்ணாக்களும் அக்காக்களும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்களுக்கு படத்தை கொண்டு பதிவெழுதும் போட்டி பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க.

அனைவருக்கும் மீண்டும்
தீபாளி வாழ்த்துக்ள்!!!

Thursday, November 1, 2007

நாங்க ரெடி... நீங்க ரெடியா??



அடடா எதுக்கு ரெடினு மண்டைய பிச்சுக்காதீங்க. இதோ தீபாவளி வந்துடுச்சு. கைல வச்சுக்கற கர்ச்சீப்புல இருந்து மாவாட்டுற கல்லு வரைக்கும் எல்லாத்துக்கும் ஆஃபர் போடறாங்க. பட்டாம்பூச்சி புடவை தட்டாம்பூச்சி புடவைனு புதுசா புதுசா அறிமுகப்படுத்தறாங்க. அப்பப்பா.... எங்க பார்த்தாலும் ஒரே ஜவுளிக் கடை விளம்பரம்.... கடை விளம்பரம்... விளம்பரம்... (நல்லா எக்கோ அடிக்குதா???;))) )

சரி நாமளும் தீபாவளி ஸ்பெஷலா சங்கத்துல புதுசா எதுனாச்சும் பண்ணோனுமின்னு சங்கத்து மக்கா எல்லாரும் சேர்ந்து நம்ம சங்கத்து ஆபிஸ் ரிசப்ஷன்ல, மீட்டிங் ரூம்ல, ஸ்விம்மிங் பூல்கிட்ட, தோட்டத்துலனு ரவுண்டு கட்டி யோசிச்சோம். Cappucino, Hot chocalateனு குடிச்சு, choc-a-vloc, chicken burger, veg croizantனு சாப்பிட்டு சாப்பிட்டு ஏதோ எங்களுக்கு இருக்கற குருவி மூளைய கசக்கி கசக்கி தீபாவளிக்கு மட்டும் ஏன்? நியூ இயருக்கும் சேர்த்தே பண்ணிடலாம்னு இந்த முடிவ எடுத்திருக்கோம். ஏதோ விபரீதமான முடிவு எதுனாச்சும் எடுத்துட்டோமானு பயந்துக்காதீங்க... ஹி... ஹி... ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இனி மேட்டருக்கு போவோம்.

இதனால எல்லாருக்கும் அறிவிக்கறது என்னன்னா..............

நமது ப.பா.சங்கம் சிறந்த நகைச்சுவை திலகத்தை போட்டி வைத்து தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். கீழே உள்ள தலைப்பிற்கோ அல்லது படத்திற்கோ அல்லது இரண்டிற்குமோ பொருத்தமான நகைச்சுவை பதிவை எழுதி papaasangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடுவர் குழு தீர்மானிக்கும் சிறந்த நகைச்சுவைப் பதிவருக்கு "நகைச்சுவை திலகம்" என்ற பட்டத்துடன் ஜனவரி மாதம் சங்கத்தில் எழுத வாய்ப்பும் வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்பு :
என்ன கொடுமை சார் இது!!!

போட்டிக்கான படம் :


விதிமுறைகள் :

1. எவ்வளவு பெரிய பதிவு வேண்டுமானாலும் எழுதலாம்

2. எந்த ஒரு Celebrity, சக ப்ளாக்கர், உறவினர், நண்பர் என்று யாரையும் தாக்கி எழுதக் கூடாது

3. எந்த ஒரு பொதுவான வலைதளத்தையோ, வலைப்பூவையோ தாக்கி எழுதக் கூடாது

4. உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான கடைசி தேதி 30/11/2007

5. ஒருவர் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

அவ்ளோதானுங்க....... come on guys........ cheer up.......... Rush ur entries soon...........

 

BLOGKUT.COM