Monday, May 7, 2007

நாட்டாமையின் திருவிளையாடல்..

விருந்து ஆரம்பம்னு சொன்னதுமே நம்ம வ.வா.சங்கத்து மக்கள் எல்லாரும் அவங்கவங்க பேர் போட்டிருந்த கவுண்டர் பக்கம் போக அப்போ பாத்து நம்ம நாட்டாமை திடீர்னு "நில்லுங்க எல்லாரும்"னு கத்தினதுல நம்ம சங்கத்து சிங்கமெல்லாம் ஒரு நிமிஷம் மெரண்டு போய் அப்படியே நின்னுட்டாங்க..

** மக்களே.. இதுக்கப்புறம் கொஞ்சம் திருவிளையாடல் சீன கற்பனை பண்ணிக்கிட்டு மீதி பதிவ படிங்க :-)) **

ஷ்யாம் (நக்கீரர்) : தலைவரே.. சற்று இப்படி வாரும்..

கைப்புள்ள (தருமி) : முடியாது.. சாப்பிட்டு விட்டு தான் வருவேன்.. சாப்பாடு பரிமாருங்கள்..

ஷ்யாம் : அதில் தான் பிரச்சனை இருக்கிறது..

கைப்புள்ள : வந்தேன்.. என்னையா பிரச்சனை??

ஷ்யாம் : இந்த விருந்திற்கு அழைத்தது நமது சங்கத்தை தானே?

கைப்புள்ள : ஆம்.. ஆம்.. நமது சங்கத்தை தான் அழைத்தார்கள்... பின்ன..பக்கத்து சங்கத்துக்காரனை அழைத்ததற்கா நாங்கள் வந்து உட்கார்ந்திருக்கிறோம்?

ஷ்யாம் : அப்படியானால் சங்கத்தில் இருக்கும் நான ஏன் ் அழைக்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் கூறிவிட்டு நீங்கள் உணவருந்த செல்லலாமே....

கைப்புள்ள: ஆண்டவா.. நானே ரொம்ப பசியில் இருக்கிறேன்.. இவர் வேறு விளக்கமெல்லாம் கேட்கிறார்..

ஷ்யாம் : எனக்கும் ஒரு பங்கு கொடுத்துவிட்டு மற்றவர் உணவு உண்ணுகிறார்கள் என்றால் அதற்கு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான் தான். அதே சமயம் என்னை விட்டு விட்டு யாரேனும் உணவு உண்ணுகிறார்கள் என்றால் முதலில் வருத்தப்படுபவனும் நான் தான்.

கைப்புள்ள : ஓ.. எல்லாமே நீர் தானோ?? விருந்தளித்து பெயர் வாங்கும் கொடை வள்ளைகள் இருக்கிறார்கள்.. விருந்து உண்டே பெயர் வாங்கும் சாப்பாட்டு ராமர்களும் இருக்கின்றார்கள்..

ஷ்யாம் : ஹி..ஹி..

கைப்புள்ள : சிரிக்காதீர்.. இதில் நீர் எந்த பிரிவை சார்ந்தவர் என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.. ஒன்று நிச்சயம் அய்யா.. உம்மை போல் இரண்டு சிங்கங்கள்.. ச்சே.. இரண்டு சிங்கங்கள் வேண்டாம்.. நீர் ஒருவரே போதும்.. நமது சங்கம் உருப்பட்டுவிடும்.. விருந்தே எங்களுக்கு வேண்டாம்..

எங்களுக்கு வேண்டும்.. எங்களுக்கு வேண்டும்.. ஆசை.. ஆசை.. ஏண்டா... மானம் போச்சே... இனிமே எங்க போனாலும் சங்கத்துல எல்லாரையும் இழுத்துட்டு தான் போகனும் போல இருக்கே.. ஒருத்தன விட்டாலும் பிரச்சனை பண்ணுரானுங்களே.. நான் என்ன பண்ணுவேன்..

தொரத்தி தொரத்தி வந்து கேள்வி கேக்கற மாதிரியே இருக்கே.. இந்த ப.பா. சங்கத்த நம்பி சாப்பிட வந்ததுக்கு வீட்டு சாப்பாடும் போச்சு.. இப்போ கத்தி கத்தி கொரலும் போக போகுது.. அவங்கள கூப்பிட கூடாது... அவங்க இல்லை.. அவங்க இல்லை.. நம்பாதே.. நம்பாதே....

அது வரை தொலைபேசியில் வந்த வாழ்த்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல சென்றிருந்த நமது தங்கத்தலைவி .::மை பிரண்ட்::. அங்கே வருகிறார்...

கைப்புள்ள : வாங்கம்மா.. வாங்க.. திமுரு தானே உங்களுக்கு...

.::மை பிரண்ட்::. (சிவன்) : தலைவரே.. நன்றாக சாப்பிட்டீர்களா??

கைப்புள்ள : உம்.. எல்லாம் சாப்பிட்டோம்.. ஒதை ஒன்னு தான் பாக்கி.. விட்டா.. அதையும் வாங்கிட்டு வத்திருப்பேன்..

.::மை பிரண்ட்::. : (கோவமாக) தலைவரே.. என்ன நடந்ததென்று விளக்கமாக கூறுங்கள்..

கைப்புள்ள : பேசும் போது நல்லா தான் பேசுங்க.. விருந்து வைக்கும்போது மட்டும் ஒழுங்கா வைக்காதீங்க.. உங்க விருந்துல குத்தம் சொல்லிட்டாங்க..

.::மை பிரண்ட்::. : எவன் சொன்னது??

கைப்புள்ள : அங்க ஒருத்தன் இருக்கான்.. உங்க பாட்டன்.. நாட்டாமை.. அவன் தாம்மா சொன்னான்..

இருவரும் நாட்டாமை முன் வந்து நிற்கிறார்கள்..

.::மை பிரண்ட்::. : சாப்பிட உட்கார்ந்த தலைவரிடம் குற்றம் சொன்னவன் யார்??

ஷ்யாம் : விருந்து உபசரித்தலில் பிழை இருந்ததால் விருந்து எங்கள் சங்கத்து மக்கள் ஏற்கும் அருகதை அற்றது என்று தடுத்து கூறியவன் நான் தான்..

.::மை பிரண்ட்::. : ஓ.. நாட்டாமையோ.. என்ன குற்றம் கண்டீர்??

ஷ்யாம் : முதற்கண் விருந்து அளிக்கும் நீங்கள் யாரும் இங்கே பரிமாற இல்லாமல் வேறெங்கோ சென்றதன் காரணம்?

.::மை பிரண்ட்::. : அது நடந்து முடிந்த கதை.. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்..

ஷ்யாம் : விருந்திற்கு முதலில் உபசரிப்பு முக்கியம் என்பது தெரிந்திருக்கும்..

.::மை பிரண்ட்::. : அறிந்தது.. அறியாதது.. உண்டது.. உண்ணாதது.. சமைத்தது.. சமைக்காதது... இனிப்பது.. கசப்பது.. உவர்ப்பது.. அனைத்தும் யாம் அறிவோம்..

ஷ்யாம் : எல்லாம் தெரிந்தவர் என்றால் ஏற்பாடு செய்யும் விருந்தில் பிழை இருக்காது என்று அர்த்தமா?? அதை யாம் எடுத்து கூற கூடாதா??

.::மை பிரண்ட்::. : கூறும்.. கூறும்.. கூறிப்பாரும்.. ஹா..ஹா... எங்கே குற்றம் கண்டீர்??? விருந்தில் உள்ள உணவிலா? அல்லது விருந்து ஏற்பாடு செய்த எங்களிடமா??

ஷ்யாம் : உணவில் குற்றம் இல்லை.. இருந்தாலும் நாங்கள் அதற்காகவெல்லாம் உண்ணாமல் இருக்க மாட்டோம்.. விருந்து ஏற்பாடு செய்த உங்களிடம் தான் குற்றம்..

.::மை பிரண்ட்::. : என்ன குற்றம்??

ஷ்யாம் : எங்கே உமது விருந்தாளிகளின் பட்டியலை கூறும்..

.::மை பிரண்ட்::. : வ.வா.சங்கத்து சிங்கங்கள்...

ஷ்யாம் : இதன் பொருள்??

.::மை பிரண்ட்::. : சங்கத்தில் உள்ள அனைத்து சிங்கங்களும் பட்டியலில் அடக்கம் என்பது..

ஷ்யாம் : இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது??

.::மை பிரண்ட்::. : எதிரிகளுக்கும் விருந்து கொடுத்து நட்பை வளர்க்கும் அன்பு உள்ளம் கொண்டவர்கள் நாங்கள் என்பது...

ஷ்யாம் : ஒருக்காலும் இருக்க முடியாது.. சங்கங்கள் எல்லாம் சுயநலச்சங்கங்கள்... எங்கள் சங்கத்தில் ஒரு சிலரை மட்டுமே அழைத்து மற்றவர்களை அழைக்காமல் எங்கள் கட்சியில் பூசலை உண்டாக்க நினைக்கிறீர்கள்..

.::மை பிரண்ட்::. : ர.ரா. சங்கமும் அப்படித்தானோ??

ஷ்யாம் : ஆம்..

.::மை பிரண்ட்::. : க.கா. சங்கம்??

ஷ்யாம் : க.கா. சங்கம் என்ன.. எல்லா சங்கங்களுமே தங்கள் சுயநலத்துக்காகவே பாடுபடுகிறார்ர்கள்..

.::மை பிரண்ட்::. : உங்கள் சங்கமும் அப்படித்தானோ??

ஷ்யாம் : எங்கள் சங்கம் என்ன.. நான் அன்றாடம் வழிபடும் என் தலைவி நயந்தாராவின் வீட்டிற்கு இடப்பக்கம் அமைந்திருக்கும் அவர் ரசிகர் சங்கமும் சுயநல சங்கமே...

.::மை பிரண்ட்::. : நிச்சயமாக??

ஷ்யாம் : நிச்சயமாக

.::மை பிரண்ட்::. : உங்கள் வெற்றிலை பெட்டியின் மீது ஆணையாக??

ஷ்யாம் : எனது கூஜாவின் மீது ஆணையாக..

.::மை பிரண்ட்::. : அல்லும் பகலும் நயந்தாரா போட்டோவை வைத்து ஜொள்ளு விடும் தாங்களா என் விருந்தை ஆராய்ந்து குற்றம் சொல்லத்தக்கவன்???

ஷ்யாம் : நாங்கள் என்ன தான் நயந்தாரா போட்டோவை வைத்து ஜொள்ளு விட்டாலும் எங்கள் எதிர் கட்சியை போற்றி அவர்கள் வளர உதவுவோமே அன்றி உங்களை போல் பொறாமையால் கலகம் செய்ய மாட்டோம்..

.::மை பிரண்ட்::. : நாட்டாமை.. என்னை நன்றாக பார்...
(பகார்டி பாட்டில் ஒன்றை நாட்டாமையின் கண் முன் ஆட்டுகிறார்.. )
நான் வைத்த விருந்தில் குற்றமா??

ஷ்யாம் : இல்லை இல்லை.. இல்லவே இல்லை.. தங்கள் விருந்தில் குற்றமே இல்லை.. தங்கள் சங்கத்தை போல் சமூக அக்கறை கொண்ட சங்கம் ஏது?? நீவீர் வாழ்க!! உமது கட்சி வாழ்க!!! உமது கொள்கை வளர்க!!!

சொல்லிவிட்டு பகார்டி பாட்டிலுடன் எஸ்கேப் ஆகிறார் நாட்டாமை.. தங்கள் உணவில் பங்குக்கு அவர் வரவில்லை என்ற சந்தோஷத்தில் மக்கள் அனைவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை மகிழ்ச்சியாக உண்டு களித்தனர்.. இப்படி ஒரு அருமையான் விருந்தளித்த எங்கள் கட்சியினரை வாயார வாழ்த்திவிட்டும் சென்றனர்..

24 Comments:

said...

First??

said...

திருவிளையாடலை பின்னி பெடலெடுத்திருக்கீங்க.. :)

சூப்பருங்க.. :))

நாட்டாமை வீக்னெஸ் தெரிஞ்சு அடிச்சிருக்காங்க மை ஃபிரண்ட் :):)

said...

நாட்டாமை, வெறும் பகார்டிய எடுத்துட்டு போயிட்டாரா?? சைட் டிஷ் வேண்டாமா??

பகார்டிக்கு பங்கு கேக்க வந்துடுவாங்கன்னு எஸ் ஆயிட்டாரா?? :):)

said...

//நான் அன்றாடம் வழிபடும் என் தலைவி நயந்தாராவின் வீட்டிற்கு இடப்பக்கம் அமைந்திருக்கும் அவர் ரசிகர் சங்கமும் //

ஹஹா. சிரிப்பை அடக்கவே முடியலை.

"மகுடிக்கு மயங்காத பாம்பா?
பகார்டிக்கு மயங்காத நாட்டாமையா?" :)

said...

en intha kolaveri?? ippadi Naattaamaiya naalu pakkamum natchunnu aditchaa appuram avaru thani sangam aarambitchu ellaaraiyum pottu thaakkiduvaar sollitten :))

said...

@சிங்கம்லே ACE !! : நீங்க தான் பர்ஸ்ட்டு.. வ.வா.சங்கத்து மக்களுக்கு குடுத்த ரஸ்ணா உங்களுக்கும் உண்டு :-))

//நாட்டாமை வீக்னெஸ் தெரிஞ்சு அடிச்சிருக்காங்க மை ஃபிரண்ட் :):) //
தலைவினா சும்மாவா :-))

//சூப்பருங்க.. :))//
நன்றிங்க :-)

//பகார்டிக்கு பங்கு கேக்க வந்துடுவாங்கன்னு எஸ் ஆயிட்டாரா?? :):) //
கேள்வியும் நானே.. பதிலும் நானே ரேஞ்சூக்கு நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிட்டீங்களே :-))

said...

@அம்பி : //பகார்டிக்கு மயங்காத நாட்டாமையா?" :) //

:-)))))

said...

@ஜி : //avaru thani sangam aarambitchu ellaaraiyum pottu thaakkiduvaar sollitten :))//

அவரு கடைல போடவே சரக்கில்லாம ஒக்காந்திருக்காரு.. அவரு தான் போட்டு தாக்க போறாராக்கும்.. நடக்கற கதையா சொல்லுங்கப்பு :-))

Anonymous said...

ஏதோ நாட்டாமை பேர் அடிபடுதேன்னு பாக்க வந்தா ... "ப. பா.ச" கான்செப்ட் முத முறையா பாத்து அசந்து போயிட்டேன்.

கலக்குங்க கலக்குங்க! ;)

said...

ஹா ஹா!!

படித்தேன்
சிரித்தேன்
ரசித்தேன்

வாழ்த்துக்கள்!! :-)

said...

@Madura & CVR : நன்றிங்க :-)

said...

இன்னைக்கு நானா....நடக்கட்டும் நடக்கட்டும்...:-)

said...

யப்பா ஒரு வழியா சாப்பாடு போட்டீங்க போல இருக்கு...:-)

said...

//எல்லாம் தெரிந்தவர் என்றால் ஏற்பாடு செய்யும் விருந்தில் பிழை இருக்காது என்று அர்த்தமா?? //

நம்ம பிழை கண்டுபுடிக்கற ஒரே மேட்டரு சாப்பாடு பத்தலனா தான்...சாப்பாட்டு விசயத்துல குவாலிடி முக்கியமே இல்ல குவாண்டிட்டி தான் முக்கியம் :-)

said...

ROTFL post :)
chance-ae illa

adhuvum nayan thara maater and bacardi weekness TOPPU :)

said...

//
"மகுடிக்கு மயங்காத பாம்பா?
பகார்டிக்கு மயங்காத நாட்டாமையா?" :)
//
LOL :)

said...

//சாப்பாட்டு விசயத்துல குவாலிடி முக்கியமே இல்ல குவாண்டிட்டி தான் முக்கியம் :-)
//

நாட்டாமை, ஒரே இனம்னு prove பண்றீங்க.. :) :)

repeatte :)

said...

ROTFL :-)
ஏங்க, எல்லாரோட போதைக்கும் Syam தான் ஊறுகாயா?

said...

ஹாய் My friend,

ஆஹா..சூப்பரோ சூப்பர்...

இது என்ன நாட்டாமையோட வாரமா?
எல்லாரும் நாட்டாமய போட்டு இந்த தாக்கு தாக்கிரிக்கீங்க....நடக்கட்டும் நடக்கட்டும்.

said...

//
மை பிரண்ட்::. : அறிந்தது.. அறியாதது.. உண்டது.. உண்ணாதது.. சமைத்தது.. சமைக்காதது... இனிப்பது.. கசப்பது.. உவர்ப்பது.. அனைத்தும் யாம் அறிவோம்
//
அரிந்தது.. அரியாதது.. என்று இருந்தால் பதிவிற்கு பொருத்தமாக இருக்கும்.

said...

Ahaha inaikku thaan naan padichaen..
I cannot control my laugh..

Apuram pavamnga naatamai ..En ipdi avarayae ellarum pottu thaakkureenga ...

said...

haha :) super post. Naatamai paavam, avara pottu indha kizhi kizhichirukeenga :)

(பகார்டி பாட்டில் ஒன்றை நாட்டாமையின் கண் முன் ஆட்டுகிறார்.. )
நான் வைத்த விருந்தில் குற்றமா??

ROTFL !!

Anonymous said...

நாட்டாமையினை அழைக்காத விருந்தினை

விருந்து என்று கூறுவதா?

யாரடா அங்கே

சொற்குற்றம்,பொருள் குற்றம்,சுவை குற்றம் என எல்லா குற்றமும் உள்ளதே..

--
நக்கீரர் நாட்டாமை பாசறை குழு

Anonymous said...

Nice fill someone in on and this enter helped me alot in my college assignement. Thanks you for your information.

 

BLOGKUT.COM