Tuesday, May 1, 2007

எதிரிகளிடமும் அன்பு காட்டும் ப.பா.ச!!!

கிடேசன் பார்க்ல நடந்த பொதுக் கூட்டத்து போட்டோஸ் எல்லாம் வந்தாச்சு. எந்த போட்டோவை நம்ம ரிசப்ஷன்ல வைக்கலாம்னு மைஃப்ரண்ட், G3, அனுசுயா, இம்சை அரசி எல்லாரும் பயங்கரமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. திடீர்னு கண்மணி டீச்சர் சத்தம். "பாப்பாங்களா இங்க ஓடி வாங்க"-ன்னு.

எல்லாரும் ஓடிப் போய் அவங்க முன்னாடி நிக்கறாங்க. சீரியஸா கம்ப்யூட்டர பாத்துட்டு இருந்த கண்மணி டீச்சர் சந்தோஷமா நிமிந்து பாக்கறாங்க. இனி ஓவர் டூ ஸீன்.

கண்மணி : நம்ம எதிரி அணி வ.வா.ச-க்கு விருந்து குடுக்கணும்னு முடிவு பண்ணி கைப்பு-க்கு மெயில் அனுப்பினோம் இல்ல. அவங்க கண்டிப்பா வரோம்-னு ரிப்ளை அனுப்பியிருக்காங்க.
அதைக் கேட்டதும் எல்லாரும் வேக வேகமாக கைத்தட்டினார்கள்.

அனுசுயா : பின்ன ஓசி சோறுன்னதும் விழுந்தடிச்சு ஓடியாருவாங்கன்றது பச்ச புள்ளைக்கு கூட தெரியுமில்ல டீச்சர்........

கண்மணி : வெயிட்... வெயிட்... இனிமேதான் நாம ஜாக்கிரதையா இருக்கணும். நாம சரியா கவனிக்கலை-னு நம்ம மேல அவதூறு பரப்ப அவங்க தயங்க மாட்டங்க. அதனால ரொம்ப நல்லா விருந்து கொடுத்து அனுப்பனும். சரியா???
G3: பேசாம தாஜ்-ல ஆர்டர் பண்ணிடுவோமா???

மைஃப்ரண்ட் : ஓ நோ! இப்போதான் சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். ஏற்கனவே பொது கூட்டம் போட்டதுல எக்கச்சக்க செலவு. அதுமில்லாம நம்ம ரேஞ்சுக்கு யோசிக்காதீங்கக்கா. அவங்க ரேஞ்சுக்கு யோசிங்க...

அனுசுயா : பேசாம எல்லா திங்ஸையும் வாங்கி கொடுத்து அவங்களையே சமைக்க சொல்லிடுவோமா? பஃபே சிஸ்டம் மாதிரி பஃபே சமையல். எப்படி ஐடியா???

இம்சை அரசி : அய்யோ! அப்புறம் இந்த புள்ளைங்க நம்மள பழி வாங்கறதுக்குனே விருந்துக்கு கூப்பிட்டுச்சுங்க கைப்பு மீட்டிங்க போட்டு குமுறுவாரு. வேணாம்பா....

கண்மணி : அழகா நாமளே நம்ம கையால செஞ்சு விருந்து வைப்போம். அதுதான் அவங்களுக்கு பெரிய ஆனா கண்ணுக்கு தெரியாத ஆப்பு. சரியா?

G3 : ஆனா டீச்சர் ரொம்ப செலவு பண்ண வேணாம். ஏற்கனவே ரொம்ப செலவு பண்ணிட்டோம். அதனால இதை starting course மாதிரி starting விருந்துனு சொல்லிடுவோம்

மைஃப்ரண்ட் : வாவ்! சூப்பர் ஐடியா G3 அக்கா :)

அனுசுயா : அப்போ எதாவது ஒரு ஐயிட்டம் பண்ணி ஒரு ஜூஸ் செஞ்சுடுவோம்

இம்சை அரசி : ஹையா! அப்போ நாந்தான் கீரை பொரியல் செய்வேன்

G3 : ஆ!!!!!!!! வ.வா.ச-ல புலியெல்லாம் இருக்கே!! அது எப்படி கீரையெல்லாம் சாப்பிடும்???

கண்மணி : ஆமாமாம். அதனால நான்-வெஜ் செஞ்சுடுவோம்...

இம்சை அரசி : ஆனா எங்க யாருக்கும் நான்-வெஜ் செய்ய தெரியாதே.... :(((

கண்மணி : அது ரொம்ப ஈஸி. நான் சொல்லி தாரேன். நீங்க செய்ங்க. அவங்களை வச்சு டெஸ்ட் பண்ணிடுவோம்.

மைஃப்ரண்ட் : குட் ஐடியா! இப்படியே நாம சமையல்ல எக்ஸ்பர்ட் ஆயிடலாம்.

கண்மணி : சரி எல்லாரும் கவனிங்க. நாம சில்லி சிக்கன் செய்யறோம். சரியா?
G3 : அப்போ ஜூஸ்???

கண்மணி : அது ஆப்பிள் மில்க் ஷேக் செஞ்சுடலாம்....

அனுசுயா : அய்யோ வேணாம்!! அப்புறம் கைப்ஸ் அது ஒட்டகப்பால்ல செஞ்சதானு கேப்பாரு....

மைஃப்ரண்ட் : ஆமாம். அதனால ரஸ்னா செஞ்சுடுவோம். அதுதான் சீப் அண்ட் பெஸ்ட்

கண்மணி : சரி எப்படி செய்யறதுனு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. ஆளுக்கு ஒரு வேலை. மொதல்ல மைஃப்ரண்ட்... நீ என்ன பண்ற சிக்கன், சில்லி சிக்கன் பவுடர், ரஸ்னா, சர்க்கரை எல்லாம் வாங்கிட்டு வந்துடற.
G3... நீ சிக்கன் எல்லாம் கட் பண்ணி க்ளீன் பண்ணி மசாலாவை கரைச்சு அதுல ஊற வைச்சுடற. இம்சை... நீ வந்து சிக்கன் ஊறுனதுக்கப்புறம் அதை எண்ணைல போட போட அனுசுயா அதை ஃப்ரை பண்ணி எடுக்கணும். சின்ன புள்ளைங்கன்றதால எல்லாருக்கும் சின்ன வேலை. ரஸ்னா போடற பெரிய வேலைய நான் செஞ்சுடறேன். சரியா?

இம்சை அரசி : ஆனா டீச்சர் அந்த சிங்கங்கள் ஒண்ணொண்ணுக்கும் ஒரொரு மாதிரி செய்யணுமே. இப்போ பாருங்க புலிக்கு செஞ்சு குடுக்கறதை விட அப்படியே கொடுத்தாதான் ரொம்ப புடிக்கும்

மைஃப்ரண்ட் : ஆமாம். அப்படியே சாப்பிடுவேனு ரசிச்சு ருசிச்சு சாப்பிடும்

கண்மணி : புலிக்கு மொதல்லயே கொஞ்சம் தனியா எடுத்து வச்சிடுவோம். ப்ராப்ளம் சால்வ்ட்.

அனுசுயா : அதே மாதிரி வெட்டிக்கு ஆந்திரா ஸ்டைல்ல காரமா இருந்தாதான் பிடிக்கும்.

கண்மணி : வெட்டிக்கு நிறைய மொளகாப்பொடி தூவி குடுத்துடுவோம்.

G3 : அய்யோ கைப்ஸ் சில்லி ஒட்டகம் கேட்டுட்டார்னா??? தம்பி வேற துபாய் ஆளு.... அவரும் இப்படிதான் கேப்பாருனு நினைக்கறேன்....

கண்மணி : கைப்ஸ்கிட்டயும் தம்பிக்கிட்டயும் இது சில்லி ஒட்டகம்தான்னு அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லிடுவோம். வேற?

மைஃப்ரண்ட் : ராமு தம்பிக்கு வேற பேபி ஃபுட்தான் உடம்புக்கு ஒத்துக்கும்.. என்ன பண்ண?

அனுசுயா : ராமுக்கு சின்ன சின்னதா எலும்பு இல்லாததா பொறுக்கி எடுத்து குடுத்துடுவோம்.

இம்சை அரசி : விவசாயி அவங்க ஊரு ஸ்டைல்ல கோழி குருமா கேட்டாருனா?

G3 : விவசாயிக்கு கொஞ்சம் சில்லி சிக்கனை எடுத்து தண்ணில போட்டு கொதிக்க வச்சு கோழி குருமானு குடுத்துடலாம்.

மைஃப்ரெண்ட் : தளபதி-க்கு வேற ஸ்பெசல் கவனிப்பு குடுக்கணும். இல்லாட்டி அவருக்கு கோபம் தலைக்கேறிடுமே?

அனுசுயா : தளபதிக்கு கொஞ்சம் எலுமிச்சம்பழம், தக்காளி எல்லாம் கட் பண்ணி டெகரேட் செஞ்சு, சிக்கன் பளபளன்னு தெரிய வார்னிஷ் பூசிடுவோம்.
இம்சை அரசி : போர்வாள் வேற கச்சேரி வச்சாதான் சாப்பிடுவேன்னு அடம் புடிப்பாரே.....

கண்மணி : போர்வாளுக்கு சச்சேரி வைக்க வேணும்னா நம்ம பாப் பாடலாசிரியர் ஜி-யையும் விருந்துக்கு கூப்பிடலாம்.

மைஃப்ரண்ட் : ஜொள்ளு வேற அவர் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் குடுக்கணும்னு நிறைய கேப்பாரே....

G3 : ஜொள்ளுக்காக ஸ்பெஷலா மீந்து போனதெல்லாம் எடுத்து பேக் பண்ணி வச்சிடுவோம். கேட்டார்னா உடனே எடுத்து நீட்டிடுவோம்.

எல்லார் முகமும் குழப்பத்தில் இருந்து தெளிந்து ஒரு சந்தோஷ சூழல் நிலவுகிறது. இரு நிமிட அமைதிக்குப் பின்.....

கண்மணி , G3, இம்சை அரசி, அனுசுயா, மைஃப்ரண்ட்(கோரஸாக) : ஓகே! டன்!!!!!!!!!! ஹூர்ர்ர்ர்ர்ர்ரேரேரே............

மைஃப்ரண்ட் : சரி இந்த செலவை எந்த கணக்குல எழுதறது???

G3 : வேற எதுல??? வேஸ்ட் கணக்குலதான் ;))))

(விருந்து பற்றிய பதிவு விரைவில்......)


ஓவர் டூ கண்மணி......

25 Comments:

Anonymous said...

//G3 : வேற எதுல??? வேஸ்ட் கணக்குலதான் ;)))) //

:-)))))))

நல்ல கூத்து போங்க! நான் தான் பஸ்ட்:-))

said...

பாவையர் அனைவரும் ஒன்று கூடி சங்கம் அமைத்ததற்க்கு வாழ்த்துக்கள்!!!

நீங்களும் வ வா ச ஸ்டைலில் (அதே கேரக்டர் வேற) காமெடியில் இறங்க வேண்டுமா? பழகப் பழக பாலும் புளிக்கும் என்பதை விட இது திகட்ட ஆரம்பிக்கும் நாள் தொலைவில் இல்லை என்பதுதான் உண்மை.

said...

ஆஹா.. உங்க சமையல் ஆராய்ச்சிக்கு சங்கத்துச் சிங்கங்கள் பழியா?? நடத்துங்க.. நடத்துங்க...

ஆமாம்.. இந்தக் கொலவெறில என்னைய ஏன் சேத்துக்கிறீங்க?? நான் எங்க தெரு முனைல இருக்குற கையேந்தி பவன்லையே பரோட்டா, பாயா சாப்டுக்கிறேன் அம்மணிகளா...

said...

உதய்,

வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. :-)

இது எங்களுடைய ஸ்டைல் கிடையாதுங்க. இப்படித்தான் எழுதனும் என்றும் நாங்க எந்த முடிவும் பண்ணவில்லை. வவாசவை காப்பி அடிக்க கூடாது என்பதில் நாங்களும் உருதியோடு இருக்கிறோம். மாற்றத்தை நீங்கள் விரைவில் காண்பீர்கள். :-D

said...

// வ.வா.ச-க்கு விருந்து குடுக்கணும்னு முடிவு பண்ணி கைப்பு-க்கு மெயில் அனுப்பினோம் இல்ல. //

ennadhu gundu vaipeeengala....
adra adra......

//பின்ன ஓசி சோறுன்னதும் விழுந்தடிச்சு ஓடியாருவாங்கன்றது பச்ச புள்ளைக்கு கூட தெரியுமில்ல டீச்சர்........ //
adhu thaan ippa ellathaium inga nikka vachi irrukunu engalukku theriadhaa...

said...

//ஏற்கனவே பொது கூட்டம் போட்டதுல எக்கச்சக்க செலவு. //

koootathuku selavu seinga'na, neeenga vera edhuko selavu sencha ippadi thaaan.....

//அதுமில்லாம நம்ம ரேஞ்சுக்கு யோசிக்காதீங்கக்கா.//
aaama unga range panjumittai, appuram popcorn thaaney?

//அவங்க ரேஞ்சுக்கு யோசிங்க... //
G3 sonnadhu right thaaney....Taj la irrundhey ok .....

said...

அய்யோ.. இங்க இந்த மாதிரிதான் விருந்து தயாராகுதா..! நல்லவேள நான் அந்த சங்கத்துல சேரல :)

ஆனாலும் சூப்பர் காமெடி.. ரொம்ப நாளைக்கப்புறம் சிரிக்க முடியுது.


சென்ஷி

said...

//"எதிரிகளிடமும் அன்பு காட்டும் ப.பா.ச!!!" //

இந்த சமையல் மேட்டர படிச்சப்புறமும் இந்த தலைப்புல அன்பு இருக்கணுமா? :)))

சென்ஷி

said...

\\"எதிரிகளிடமும் அன்பு காட்டும் ப.பா.ச!!!"\\

தலைப்பில் அன்புக்கு பதில் ஆப்புன்னு வைங்க ரொம்ப சரியா இருக்கும் ;-)))

said...

கோபி வெள்ளிக்கிழமை பதிவு பாரு உங்களுக்கெல்லாம் வச்சிருக்கேன் ஆப்பு

said...

ஆகா!!
கிளம்பிட்டாய்ங்கையா கிளம்பிட்டாய்ங்கையா!!!

இனிமே ரணகளம் ஆகப்போகுத்தையா!!! :-P

said...

//அனுசுயா : பின்ன ஓசி சோறுன்னதும் விழுந்தடிச்சு ஓடியாருவாங்கன்றது பச்ச புள்ளைக்கு கூட தெரியுமில்ல டீச்சர்........
//

பாருங்க! சங்கத்து சார்பா வாழ்த்து தெரிவிச்ச ஆளு நானு!

இப்படிச் சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர்! சொல்லிட்டேன்! ஆமா!

:-x

said...

//பாருங்க! சங்கத்து சார்பா வாழ்த்து தெரிவிச்ச ஆளு நானு!

இப்படிச் சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர்! சொல்லிட்டேன்! ஆமா!//
ஆகா அப்ப தளபதி விருந்துக்கு வரமாட்டாரு போல. ஒரு தட்டு மிச்சம்.
//G3 : வேற எதுல??? வேஸ்ட் கணக்குலதான் ;)))) //
:))

said...

ஆஹா ஒன்னு கூடீட்டாய்ங்கய்யா

ROTFL போஸ்ட்

உங்க போதைக்கு சிங்கங்கள் ஊறுகாயா? நடத்துங்க :)

அடுத்த பார்ட்டுக்கு சி ஆப்புக்கு வெயிட்டிங்

said...

நாட்டாமய விட்டது தான் மனசு கஷ்டமா இருக்கு :(

அடுத்த பதிவுல அவர லேட் entry குடுத்து கலக்கிடுங்க..

நாட்ஸ், ஏதோ என்னால முடிஞ்சது :)

said...

//நாட்டாமய விட்டது தான் மனசு கஷ்டமா இருக்கு :(

அடுத்த பதிவுல அவர லேட் entry குடுத்து கலக்கிடுங்க..

நாட்ஸ், ஏதோ என்னால முடிஞ்சது :) //

Arun, நான் தான் உங்களுக்கு வேணும்கற பக்கார்டி வாங்கி தரேன்னு சொன்னனே...அப்படியும் ஏன் கொலவெறில இருக்கீங்க :-)

said...

பா(ப்)பாக்களே...(கண்மணி அக்கா உங்கள இல்ல)...ஒரு முடிவோட தான் களத்துல இறங்கி இருப்பீங்க போல இருக்கு...செம நக்கல்...இருந்தாலும் நம்ம சவுண்டு பார்ட்டி சொன்னதயும் மனசுல வெச்சுக்கங்க :-)

said...

//(விருந்து பற்றிய பதிவு விரைவில்......) //

விருந்துக்கு வந்த அப்புறம் எதுத்த மாதிரி இருக்கற கல்லாண மண்டபத்துல தான் விருந்து போய் சாப்பிட்டுக்கோங்கன்னு சொல்லி காமெடி,கீமெடி பண்ணமாட்டீங்களே....
:-)

said...

சங்கத்து சிங்கங்களை வேட்டையாட முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு..

//ரொம்ப நல்லா விருந்து கொடுத்து அனுப்பனும். சரியா???//

இது ரொம்ப நல்ல விருந்தா?? அருண் சொன்ன மாதிரி நாட்டாமை தான் இந்த "நல்ல" விருந்தை மிஸ் பண்ண போறார்.. :) :)

//வேற எதுல??? வேஸ்ட் கணக்குலதான் ;)))) //

LOL :) :)

Anonymous said...

Nice.Chancay illa.

said...

// Syam 덧글 내용...
இருந்தாலும் நம்ம சவுண்டு பார்ட்டி சொன்னதயும் மனசுல வெச்சுக்கங்க :-)
//

எங்க ஸ்டைல் அது இல்லை அண்ணா... ஒண்ணு புதுசா ஆரம்பிச்சா எல்லாருக்கும் வரவேற்பு குடுக்கணும் இல்ல. அதுக்குதான். எல்லாருக்கும் இந்த மாதிரி வரவேற்பு குடுத்துட்டு அப்புறம் எங்க ஸ்டைல்ல ஆரம்பிப்போம் ;)

said...

பாசக்கார அக்காக்களே,

உங்க சமையல் செஞ்சு பார்க்கிற பரிசோதனை முயற்சிக்கு நாங்கதான் சோதனை எலிகளா???

நல்லாயிருங்க தாயிகளா :)

said...

//நீங்களும் வ வா ச ஸ்டைலில் (அதே கேரக்டர் வேற) காமெடியில் இறங்க வேண்டுமா? பழகப் பழக பாலும் புளிக்கும் என்பதை விட இது திகட்ட ஆரம்பிக்கும் நாள் தொலைவில் இல்லை என்பதுதான் உண்மை./

சவுண்ட்,

நம்மளை மாதிரியே இவங்களுக்கும் பேரு எடுக்கனுமின்னு ஆசையாம், அதுதான் நம்ம ஸ்டைலே காப்பி அடிக்கிறாங்க.... :)

அப்புறம் இன்னொன்னு நம்ம சங்கத்து ஸ்டைலு புளிக்க ஆரம்பிச்சிருச்சா?? அப்பிடின்னா சூடேத்திருவோம் :)

said...

//ஆகா அப்ப தளபதி விருந்துக்கு வரமாட்டாரு போல. ஒரு தட்டு மிச்சம்.
//

:-x

ஆசை தோசை அப்பள வடை!

ரெண்டு பிளேட்டா பார்சல் வந்தாகணும்! சொல்லிட்டேன்!

said...

//உங்க சமையல் செஞ்சு பார்க்கிற பரிசோதனை முயற்சிக்கு நாங்கதான் சோதனை எலிகளா???
//

இராம்!
நான் கூட நாளைக்கு ரசம் வெக்கப் போறேன்!

கண்டிப்பா சாப்பிட வரணும்!

 

BLOGKUT.COM