Thursday, August 28, 2008

கல்லூரி கல்வெட்டுகள்

கணக்கு பாடமும்
கடைசி பெஞ்
கலாவும் ஒன்னு!
இரண்டையுமே
புரிஞ்சிக்க
முடியலையே!

- கணக்கு/கலா புரியாமல் நொந்துபோனவர்கள் சங்கம்

21 வயசுல காதலிக்கலாம்
ஆனா என்னைக்குமே
கல்யாணம்
பண்ணிக்ககூடாது
- கல்லூரி காதல் தோல்வி சங்கத்தின் தலைவர்

பாட புத்தக்கத்த பார்த்தால்
brad pitt ஞாபகத்துக்கு
வராரு.
சன்னல் வெளியே பார்த்தால்
சல்மான் கான் ஞாபகத்துக்கு
வராரு.
நாங்கள் என்ன செய்ய?

-கல்லூரி கன்னிகள் சங்கம்

சூர்யா
விஷால்
மாதவன்
சித்தார்த்
ஜெயம் ரவி
வினய்
பரத்
இவங்களாம்....யாரு?

- அப்பாவி பெண்கள் சங்கம்

பிடிச்சிருந்தா சொல்லிடு!
கடைசிவரைக்கும் காத்திருக்காதே.
கடைசியில சொன்னா அதுக்கு
பேரு காதல் இல்ல
'குட் பை'

- 'இதயம்' முரளியின் ஒன்னுவீட்டு தம்பிகள் சங்கம்

கொஞ்சமா சைட் அடிப்போம்
நிறைய அடி வாங்குவோம்
கொஞ்சமா படிப்போம்
நிறைய மார்க் வாங்குவோம்

- கல்லூரி விருமாண்டிகள் சங்கம்

மனசுக்கு எது அழகா படுதோ
அதை மட்டுமே நோக்கி
போகுது
எங்க கால்கள்
அது
கல்லூரி 'கேட்'டாக இருந்தாலும் சரி
கணக்கு டிப்பார்ட்மெண்ட்
கஸ்தூரியாக இருந்தாலும் சரி!

- படிக்காமல் கவிதை எழுதுபவர்கள் சங்கம்

19 Comments:

said...

கொஞ்சமா கழுத்தறுப்போம்
கண்டமேனிக்கு கலாய்ப்போம்
கொஞ்சமா ஜோக் சொல்லுவோம்
நிறைய சிரிப்போம்!!

- இது என்ன சங்கம்னு சொல்லுங்க பார்ப்போம்!

said...

:-)))...

said...

:))

said...

:))))))))))))))))))

said...

இதுல நீங்க எந்த சங்கம் மேடம்...:)

said...

\
சிரிக்க வைக்க முயற்சித்தது Thamizhmaangani
\
நல்லாவே செய்யுறிங்க...

said...

"ஆ..."

தெரியாத்தனமாய் இந்தப்பக்கம் வந்தோர் சங்கம்

நர்சிம்

said...

@குட்டிபிசாசு

//கொஞ்சமா கழுத்தறுப்போம்
கண்டமேனிக்கு கலாய்ப்போம்
கொஞ்சமா ஜோக் சொல்லுவோம்
நிறைய சிரிப்போம்!!//

குட்டிபிசாசே
குட்டிபிசாசே
உன் தொல்லை தாங்கலையே!:))

//இது என்ன சங்கம்னு சொல்லுங்க பார்ப்போம்!//

தெரியலையேப்ப்ப்ப்ப்பா!

said...

@தமிழன்

//இதுல நீங்க எந்த சங்கம் மேடம்...:)///

சூர்யா
விஷால்
மாதவன்
சித்தார்த்
ஜெயம் ரவி
வினய்
பரத்
இவங்களாம்....யாரு?

- அப்பாவி பெண்கள் சங்கம்

நான் இந்த அப்பாவி பெண்கள் சங்கத்தின் பொது செயலாளர்!! அப்பாவி அப்பாவி நான்!:)))

said...

@தமிழன்

//\
சிரிக்க வைக்க முயற்சித்தது Thamizhmaangani
\
நல்லாவே செய்யுறிங்க...//

atleast ஒரு நாலு பேராச்சு சிரிக்கனும்னா...எதையும் செய்வாள் இந்த தமிழ்மாங்கனி
(நாயகன் தீம் மியூசிக் ப்ளீஸ்....)

said...

செம!! :-))..

said...

உங்கள் தோழி
யாருமில்லாத இடத்திற்கு
தனியாக அழைத்தால்
செல்லாதீர்கள்

இப்படிக்கு
சுப்புரமணிபுரம் க்ளைமேக்ஸ் பார்த்து டரியல் ஆனவர்கள் சங்கம்

said...

நல்லாருக்கு,
என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்வோர் சங்கம்(தங்கம்)

said...

//'இதயம்' முரளியின் ஒன்னுவீட்டு தம்பிகள் சங்கம்//

அட நம்ம சங்கத்தையும் கொண்டுவந்து பப்ளிக்கில வைச்சாச்சா?


எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ தெரியலப்பா :)))))

said...

காதலும் கார்ப்பரெஷன் பஸ்ஸும் ஒன்னு
வேணுங்கிற நேரத்தில வராது
தேவையில்லாத நேரத்துல வரிசையா நிறைய வரும்

கிஸ்ஸுக்கு ச்ச பஸ்ஸுக்கு காத்திருந்து நொந்து போனோர் சங்கம்

said...

@சிவா சித்தப்பு

//கிஸ்ஸுக்கு ச்ச பஸ்ஸுக்கு காத்திருந்து நொந்து போனோர் சங்கம்//

சரி சரி..இந்த விஷயம் சித்திக்கு தெரியாம இருந்தால் சரி தான்!

said...

\\- கணக்கு/கலா புரியாமல் நொந்துபோனவர்கள் சங்கம்\\

இதை இப்படி எழுதலாமா ?
"கணக்கு பண்ண தெரியாதவர்கள் சங்கம்!"
:)

said...

@nathas

//"கணக்கு பண்ண தெரியாதவர்கள் சங்கம்!" //

இது டாப்பு டக்கறு!!:)

said...

\\பாட புத்தக்கத்த பார்த்தால்
brad pitt ஞாபகத்துக்கு
வராரு.
சன்னல் வெளியே பார்த்தால்
சல்மான் கான் ஞாபகத்துக்கு
வராரு.
நாங்கள் என்ன செய்ய?//

நல்ல வேளையாக தமிழ் நடிகர்கள் யாரும் உங்கள் படிப்பை கெடுக்கவில்லை. அது அடுத்த கவிதை மூலம் தெரிந்து விட்டது..

 

BLOGKUT.COM