இந்த 'pickup lines' பத்தி கேள்விபட்டிருப்பீங்க... பசங்க போய் பொண்ணுங்க கிட்ட முதன் முதலா பேச முயற்சி எடுப்பாங்க. இல்ல பொண்ணுங்க போய் பசங்ககிட்ட பேச முயற்சி எடுப்பாங்க (இது ரொம்ப குறைவு தான்) இருந்தாலும் அப்படி அவங்க முயற்சி எடுக்கும்போது இது போல சில வரிகளை சொன்னால்...
(இப்படி எதையும் செய்யாமல் நல்ல பிள்ளையா வாழ்ந்திருக்கீங்களா.. அப்படின்னா, இத சொல்லி பாருங்க...)
1) உங்களுக்கு கண்டதும் காதல நம்பிக்கை இருக்கா, இல்ல நான் மறுபடியும் ஒரு தடவ உங்க முன்னாடி நடக்கவா?
2) உங்க பெயரு சித்திரையா? இல்ல.. உங்கள பாத்தவுடனே மனசு சூடா போச்சு.3) உங்ககிட்ட map இருக்கா? உங்க கண்கள என்னைய தொலைச்சுட்டு நிக்குறேன்.
4) இப்ப ஏன் மேகம் ரொம்ப கருப்பா இருக்குதுன்னு சொல்லுங்க?
எல்லாம் நீலமும் உன் கண்கள கொட்டி கிடக்குதே!
5) என்னைய ஞாபகம் இருக்கா? ஒரு நாள் என் கனவுல உங்கள பாத்தேனே!
6) அட உங்கள பாத்தா என் வருங்கால மனைவி மாதிரியே இருக்குங்க.
7) முகத்தை உற்று பார்த்து,
பொண்ணு: ஏங்க இப்படி பாக்குறீங்க?
பையன்: ஏதாச்சு label இருக்கான்னு பாக்குறேன்.
பொண்ணு: what???
பையன்: உங்கள சொர்க்கத்துல செஞ்சாங்களான்னு பாக்க தான்!
8) பொண்ணு: வழி காட்டுறீங்களா?
பையன்: ஏங்க போக?
பொண்ணு: உங்க மனசுக்குள்ள போகதான்...
இப்படி சொல்ல போக, தர்மடி வாங்கி வந்தீங்கன்னா, வீரசூரன் என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுப்போம். முகத்தில், கை கால்களில் அடி பலமா இருந்தா, ஒரு bandage இலவசமா கொடுப்போம்! இது ஸ்டாக் இருக்கும்வரை தான்! இது ஆடி தள்ளுபடி இல்ல, அடி தள்ளுபடி! :))
10 Comments:
note பண்ணிக்கிறேன்....உங்கள நம்பி ஒரு பொண்ணுகிட்ட பேச போறேன்.... அடி வாங்கீட்டு வந்தா இருக்கு உங்களுக்கு கச்சேரி
நல்லா இருக்குங்க எல்லா ஐடியாவும்...
@இவன்
//இருக்கு உங்களுக்கு கச்சேரி//
சாரி, இந்த கச்சேரிக்கு வர முடியாது. நான் இப்போ சூப்பர் சிங்கருக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்! :)
@sen22
//நல்லா இருக்குங்க எல்லா ஐடியாவும்...//
ரூம் போடாமலே யோசிப்போம்ல.:)
/
இப்படி சொல்ல போக, தர்மடி வாங்கி வந்தீங்கன்னா, வீரசூரன் என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுப்போம். முகத்தில், கை கால்களில் அடி பலமா இருந்தா, ஒரு bandage இலவசமா கொடுப்போம்! இது ஸ்டாக் இருக்கும்வரை தான்! இது ஆடி தள்ளுபடி இல்ல, அடி தள்ளுபடி! :))
/
எசகுபிசகா வொர்க்கவுட் ஆகி கல்யாணம் ஆவப்போகுதுனா காப்பாத்த என்ன பண்ணுவீங்க!? சொன்னீங்கனா ட்ரை பண்ணி பாக்கலாம்.
puthusa irukku
ம்ம்ம் ... பத்து வருஷசத்துக்கு முன்னே சொல்லி கொடுத்து இருந்தீங்கன்னா டிரையல் பண்ணி பார்த்து இருக்கலாம் !
//சாரி, இந்த கச்சேரிக்கு வர முடியாது. நான் இப்போ சூப்பர் சிங்கருக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்! :)//
இன்னையோட நான் விஜய் டீவி பாக்கிறத நிறுத்திடுறேன்
@இவன்
//இன்னையோட நான் விஜய் டீவி பாக்கிறத நிறுத்திடுறேன்//
அண்ணா, ஏங்க விஜய் டீவி பாக்குறீங்க.... சொந்தமா டீவி இல்லையா?
அவ்வ்வ்.....:))
Boy: ஸ்மோக் பண்ணா உனக்கு பிடிக்குமா?
Girl: ஏன், நீ பண்ணுவியா?
Boy: இல்ல, ஸ்மோக் பண்ற பசங்கள பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு ஏதோ movieல கேட்டேன்.
Girl: ஆமா, சினிமால கொலை பண்ண ஹீரோவைகூடத்தான் ஹீரோயினுக்கு பிடிக்கும்.
Boy: ??????
Post a Comment