Monday, July 23, 2007

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்...

முதல்ல 22-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் தலைவி மை ஃப்ரண்டிற்கு ஒரு வாழ்த்த சொல்லிட்டு அவங்க குடுத்த அருமையான விருந்துக்கு ஒரு நன்றியும் சொல்லிட்டு பதிவ ஆரம்பிப்போம்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க?? எங்க சங்கத்து மக்களெல்லாம் பயங்கரமா களைச்சு போய் இருக்காங்க.. அட, அப்படி என்ன களைப்புன்னா கேக்கறீங்களா?? மலேசியா வரைக்கும் போய் ஊர சுத்தி பாத்துட்டு வந்திருக்கோமில்ல.. அதான்.. ஆனா எவ்ளோ தான் களைப்பா இருந்தாலும் சங்கத்துல பதிவு போடற கடமைய தவற விடலாமா சொல்லுங்க.. அதான்... திரும்பி வந்ததும் பதிவ போட ஓடோடி வந்துட்டேன் :))

சங்கத்துல நாங்க எல்லாரும் தலைவியோட பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்னு ஒரு வட்ட மேஜை மாநாடு போட்டு யோசிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ தான் நம்ம அனுசுயா வந்து இதை சாக்கா வெச்சு நாம் எல்லாரும் ஒரு தடவை மலேசியா போயிட்டு வரலாமேன்னு சொல்லி சும்மா இருந்த எங்களையும் கிளப்பி விட சரின்னு நாங்களும் பொட்டி படுக்கையோட ப்ளைட் ஏறிப்புட்டோமில்ல மலேசியாவுக்கு.. (யாருப்பா அங்க யாரோட செலவுலன்னு சவுண்ட் உடுறது?? எல்லாம் நம்ம சங்கத்து கஜானா காசு தான்.. இதுக்கு கூட உதவலனா அப்புறம் சங்கம் எதுக்கு? அதுக்கு ஒரு கஜானாதான் எதுக்குங்கறேன்? )

நாங்க மலேசியா வர்ற விஷயத்த தலைவி கிட்ட சொல்லலை.. எங்கள நேர்ல பாக்கறது அவங்களுக்கு ஒரு இன்ப(???) அதிர்ச்சியா இருக்கட்டுமேன்னு சஸ்பென்ஸாவே விட்டுட்டோம் (முன்னாடியே நாங்க சொல்ல, அப்புறம் அவங்க அவசரப்பட்டு எங்கள வர வேணாம்னு சொல்லிப்புட்டா என்ன பண்றது?? ஹி..ஹி.. நாங்க எல்லாம் விவரமில்ல :))) அதனால மலேசியா ஏர்போர்ட்ல இறங்கினதும் பக்கத்துல இருந்த ஹோட்டல்ல போய் செட்டில் ஆயிட்டோம்.. அப்புறம் அங்க இருந்து கிளம்பி, எங்க ப்ளான்படி கரெக்டா 12 மணிக்கு மை ஃப்ரண்ட் வீட்டுக்கு போய் சேந்தோம்.

எங்கள பாத்ததும் தலைவிக்கு ஒரு நிமிஷம் அதிர்ச்சில பேச்சே வரலை.. அப்புறம் கொஞ்சம் சுதாரிச்சதும் எங்க எல்லாரையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கெல்லாம் எங்கள அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டாங்க. அவங்க அப்பாவும் அம்மாவும் இதை சாப்பிடறீங்களா அதை சாப்பிடறீங்களான்னு ஒரே பாச மழை.. அதுல எல்லாம் நனைஞ்சு நாங்க தூங்கப்போறப்போ பொழுதே விடிஞ்சிருச்சு.. அப்ப்டியும் ஒரு குட்டி தூக்கத்த போட்டுட்டு காலைல எழுந்து பாத்தா....

என்னதிது? எல்லாத்தையும் ஒரே பதிவுலயே சொல்லிடனுமா?? நோ.. நோ.. மீதி விஷயங்கள் அடுத்த பதிவுல தான் சொல்லுவோம் ;))

5 Comments:

said...

//எங்க ப்ளான்படி கரெக்டா 12 மணிக்கு மை ஃப்ரண்ட் வீட்டுக்கு போய் சேந்தோம்//

பிறந்த நாள் கீதத்தைப் பாடி பக்கத்து ஃப்ளாட்டில் எல்லாரையும் எழுந்திரிச்ச்சதைச் சொன்னீங்களா G3?:-)

//இதை சாப்பிடறீங்களா அதை சாப்பிடறீங்களான்னு ஒரே பாச மழை.. //

மெனு ப்ளீஸ்!

said...

//அப்ப்டியும் ஒரு குட்டி தூக்கத்த போட்டுட்டு காலைல எழுந்து பாத்தா.... //
அட நடந்தது எல்லாம் கனவு!!!
:-P

said...

cha.. ennaya vitutu poiteengale G3 :(

ROTFL at CVR's comment

said...

அடச்சே, இதுவும் மொக்கையா? என்ன பதிவுலகம் எங்கே பார்த்தாலும் மொக்கையாவே இருக்கு

said...

//மெனு ப்ளீஸ்! //

ஜி3 வேணாம்.. அதை மட்டும் சொல்லிடாதே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ். :))

 

BLOGKUT.COM