ப்யூட்டிஸ் அடிச்ச லூட்டிஸ் ஒரு சீரிஸா போயிட்டு இருக்கு.. சரி நாமும் அதுல ஒரு பகுதி எழுதலாம்ன்னு கம்யூட்டர் முன்னுக்கு உட்கார்ந்தா எதை முதல்ல எழுதுறதுன்னே தெரியல.. காலேஜ்ல அடிச்ச லூட்டி, ஹாஸ்ட்டல்ல அடிச்ச லூட்டின்னு எக்கச்சக்கமா இருந்தாலும், அதுக்கு முன்னவே ஸ்கூல்ல படிக்கும்போதே அடிச்ச லூட்டிகளே கரை புரண்டு ஓடுதே! அதுல ஒன்னு ரெண்டு சொல்லுவோமே..
மலேசியால Form 4 (படிவம் 4) வருடத்தை ஹனிமூன் யியர் (year)ன்னு சொல்வாங்க.. நாமளும் ஒரு வருடம் மஜாவா ஆட்டம் போடலாம்ன்னு சந்தோஷமா முதல் நாள் வகுப்புக்கு போனதும்தான் தெரியுது!!! அந்த வருடம் மட்டும் ஹனிமூன் யியர் எங்களுக்கில்லை.. எங்க வகுப்பு டீச்சர்ஸ்க்குதான்னு.. :(
விடுவோமா நாங்க.. ஆரம்பிச்சிட்டோம்ல லூட்டியை..
என் வகுப்பாசிரியர் வந்த ரெண்டு வாரத்துலேயே மெக்காவுக்கு போரேன்னு கிளம்பிட்டாங்க.. நல்ல டீச்சர்தான். ஆனால், எங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண அவங்களுக்கு கொடுத்து வைக்கலை.
நெக்ஸ்ட்டு, எங்க மலாய் டீச்சர்.. கர்ப்பமா இருந்தாங்க. ஆனாலும் பாடம் நடத்தியே ஆவேன்னு ஒரே அடம்.. ஒரு நாள் க்லாஸுக்கு வந்துட்டு,
டீச்சர்: இன்னைக்கு நாம் ஹாங் துவா காலத்துல நடந்த ஒரு ராஜா கதையை சொல்லி தர்ரேன்..
பாட புத்தகத்தை பார்த்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாங்க.. ஒரு சில நிமிடங்கள் கழித்து (அவங்க பேசுற சத்தத்தை பொறுக்காமல்), நான் எழுந்தேன்..
நான்: டீச்சர், நான் பள்ளி அலுவகத்துல உங்களை பத்தி கம்ப்ளேன் பண்ண போறேன்..
டீச்சர்: ஏன்? நான் உங்களுக்கு பாடம்தானே சொல்லிக்கொடுக்கிறேன்.
நான்: இல்லை.. நீங்க க்லாஸுல அரசியல் சொல்லி தர்றீங்க
டீச்சர்: நான் அரசியல் சொல்லித்தந்தேனா? எப்போ?
நான்: இதோ இப்ப சொன்னீங்களே! அரசியல்ன்னு.. சாட்சிக்கு இங்கே 40 பேர் இருக்கோம். எல்லாரும் சேர்ந்து கையெழுத்து போட்டா, உங்க வேலை அம்பேள்!!
டீச்சர்: ஐயய்யோ!!! அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணிடாதேம்மா.. நான் வேறு ஏதாவது பாடம் தர்றேன். மாண்வர்களே, இன்னைக்கு நான் கொடுக்கிற ஒரு தலைப்புல ஒரு அறிக்கை எழுதுங்க. ஒரு க்ரூப்ல நாலு பேர்..
வைட் போர்ட்டுல ஒரு தலைப்பை எழுதிட்டு அவங்க ஒரு ஓரமா போயிட்டு உட்கார்ந்துட்டாங்க. 15 நிமிடங்கள் கழிச்சு நாங்க எல்லாரும் பேப்பரை டீச்சர் கிட்ட கொடுத்தோம்.. பார்த்ததும் அவங்களுக்கு மயக்கம் வராத குறைதான்..
எந்த பேப்பரிலும் நாங்க ஒன்னுமே எழுதலை. ஆனா கலர் கலரா பேப்பர் மட்டும் அனுப்பியிருந்தோமாக்கும்.. டீச்சர் இது என்னனு கேட்க, நாங்க ஒவ்வொருத்தரும், இது வெள்ளை அறிக்கை.. பச்சை அறிக்கை.. சிவப்பு அறிக்கைன்னு சொல்ல..
அன்னைக்கு க்லாஸை விட்டு வெளியேறினவங்கதான்.. அன்னைக்கே பிரசவ வலி வந்து ரெண்டு மாதம் லீவு!!
அடுத்தது நாங்க விரட்டியது எங்க கணித டீச்சரை.. அதுல என் தப்பு ஒன்னுமே இல்லைங்க. எல்லாமே அவங்க தப்புதான்.. பரிட்சை வச்சாங்க.. நாங்களும் செஞ்சு அனுப்பினோம். உங்களுக்கே தெரியும்.. படிக்கிறதும் பரிட்சை எழுதுறதும் எவ்வளவு கஷ்டமான வேலைன்னு..
சோடா பொட்டி கண்ணாடி போட்ட அந்த டீச்சர் ஒரு வாரம் கழிச்சு பரிட்சை தாளை திருத்தி எங்களிடம் கொடுத்தாங்க.. ஆனால், என் தாளை மட்டும் தரல.. நான் கடுப்பாகி டீச்சர் கிட்ட போய் கேட்டேன்..
நான்: டீச்சர், என் தாள் எங்கே?
டீச்சர்: எங்கிட்ட உள்ள தாள் எல்லாத்தையும் கொடுத்துட்டேனே! நீ பரிட்சைக்கு வரலை போல..
நான்: டீச்சர், விளையாடாதீங்க.. இப்ப நீங்க என் பேப்பரை தரலைன்னா, பின்னால நடக்கப்போற விபரீதத்தை நீங்க சந்திச்சே ஆகனும்!! ரெடியா?
டீச்சர்: சாரி சாரி.. என் பேக்ல ஒரு பேப்பர் மாட்டிகிட்டு இருக்கு.. நாந்தான் கவனிக்கல.. இந்தா!!
நான்: பரவால பரவால.. மன்னிச்சிட்டேன்..
என் பேப்பரை வாங்கி திரும்பி என் மேஜைக்கு வந்து சேர்ந்ததும்தான் கவனித்தேன். என் பேப்பரை கோழி கறி சாப்பிட்டதா? இல்ல கோழி கறி என் பேப்பரை படிச்சதான்னு புரியல.. பேப்பர் முழுசும் கறி ஊத்தியிருந்துச்சு!
திரும்ப டீச்சர் கிட்ட போயி சண்டை போட்டேன். ஒரு வாரம்! ஒரே வாரம்! அவங்க பயந்து வேற ஸ்கூலுக்கே மாறி போயிட்டாங்க.. (சண்டை எப்படியிருந்துச்சு கேட்டுடாதீங்க.. ஹீஹீ)
அப்புறம் என் பயலோஜி டீச்சர்.. க்ளாஸுக்கு வந்தவுடன் வைட் போர்ட்டுல எழுத ஆரம்பிச்சாங்கன்னா மணி அடிக்கிற வரைக்கும் எங்களை திரும்பிகூட பார்க்க மாட்டாங்க. அவங்க வேலையில அவ்வளவு கண்ணும் கருத்துமா இருப்பாங்க. அவங்க அவங்க வேலையை வகுப்பு முன்னாடி செய்ய, நாங்க எங்க வேலையை பின்னால செஞ்சுட்டு இருப்போம்.
இவங்களால எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அதனால அவங்க "வேலை"யை செய்யட்டும்.. ஃப்ரீயா விட்டுடலாம்ன்னு விட்டுட்டோம். :D
கெமிஸ்ட்ரி டீச்சர் வந்தாலே க்ளாஸ் போர்.. அவங்க என்ன சொல்லி தர்றாங்கன்றது அவங்களுக்கே தெரியாது! ஸ்டூடண்ட்ஸ் எங்களுக்கு மட்டும் புரிஞ்சிடுமா என்ன!! ஹீஹீ.. ஸோ, எப்போதுமே அவங்க க்ளாஸுல அவங்கல கலாய்ச்சிட்டே இருப்போம்..
என்ன சொல்லிக்கொடுத்தாலும், "டீச்சர், அது தவறு.. சரியான பதில் இப்படி வரும்"ன்னு ஏதாவது சொல்வோம்.. சில சமயம் சரியா சொல்லிக்கொடுத்தாலும் அது தப்பு தவறுன்னே சொல்லி அவங்களை கொழப்பிடுவோம். 2 வார க்ளாஸுக்கு பிறகு, எங்க க்ளாஸ் டைம்டேபல் வரும்போது ஏதாவது காரணம் சொல்லி ஸ்கூலுக்கே வர மாட்டாங்க அவங்க.. அடுத்ததும் அவுட்டு!
யார் வந்தாலும் விட்டு வைக்க மாட்டோம்ன்னு தெரிஞ்சே ஆரம்பத்திலேயே எங்களுக்கு இங்க்லீஸ் டீச்சர் இல்ல..
சரித்திர க்ளாஸுல டீச்சர் க்லாஸுல என்ன பண்ணிட்டிருப்பாங்கன்னு எங்க யாருக்குமே தெரியாது.. ஏன்னா, அவங்க க்ளாஸுக்கு வர்றதுக்கு முன்னவே நாங்க க்ளாஸை விட்டு வெளிநடப்பு செஞ்சுடுவோம்.. கௌரவமா வகுப்பு கட் அடிப்போம்ன்னு சொல்றேன். ஹீஹீ..
இப்படி ஒவ்வொருத்தவங்களையும் துரத்தி விட்டாச்சு.. சும்மாவா!! ஹனிமூன் யியர்.. ஹனிமூன் யியரா இருக்கணும்ன்னா இவங்க யாரும் இருக்க கூடாதுல..
இதை படிக்கிறவங்க நாங்க அகராதி பிடிச்ச மாணவர்கள்ன்னு நினைக்கலாம்.. அப்படி இல்லை இல்லை இல்லைன்னு சொல்ல இன்னொரு க்லாஸ் பேலன்ஸ் இருக்கு. அதுதான் பிஸிக்ஸ் அண்ட் அட்டிஷனல் மேத்தமதிக்ஸ் க்ளாஸ்.
நாங்க எல்லா டீச்சரையும் துரத்தினாலும், இவங்க கிட்ட மட்டும் அடங்கியிருப்போம்.. எங்கே போனாலும் இவங்க க்ளாஸுக்கு சரியா வந்து சேர்ந்திடுவோம். அற்புதமான டீச்சர். ஆரம்பதுல அட்டிஷனல் மேட்ஸ் சொல்லிக்கொடுத்தவங்க.. 2 மாதத்துல பிஸிக்ஸையும் டேக் ஓவர் பண்ணாங்க..
நாங்க ஒவ்வொரு டீச்சரையும் தொரத்தும் போதும் எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தவங்க. ஏன்னா நாங்க என்ன பண்ணாலும் அதுல ஒரு அர்த்தமும் நியாயமும் இருக்கும்ன்னு நம்புறாங்க. ஒரு காலத்துல பள்ளி நிர்வாகத்தையே எதிர்த்து நின்னு நாங்க போராடும்போது, எங்களுக்கு ஆதரவா எங்க பக்கம் நின்ன ஒரே டீச்சர் இவங்கதான்.
ஸோ, மோரல் ஆஃப் தி ஸ்டாரி என்னன்னா பிடிக்காத டீச்சரை வெளியே துரத்துங்கள். உங்களை அறிஞ்சவங்களை பக்கத்துல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட படிங்க.. வாழ்க்கையில கண்டிப்பா பிற்காலத்துல வெற்றி பெருவீங்க. :D
Friday, June 15, 2007
ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 4
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 9:51 PM
சிரிப்பு வகை: ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
இதுக்கு பேரு லூட்டியா?? அட கடவுளே.. ரவுடியிஸம் பண்ணிட்டு இருந்திருக்கீங்க.. இத இங்க வந்து லூட்டினு அடிச்சு விடறீங்க.. என்ன கொடுமை சார் இது...
@சிங்கம்லே ACE !!:
//இதுக்கு பேரு லூட்டியா?? அட கடவுளே.. ரவுடியிஸம் பண்ணிட்டு இருந்திருக்கீங்க.. இத இங்க வந்து லூட்டினு அடிச்சு விடறீங்க.. என்ன கொடுமை சார் இது... //
தேவை படும் இடத்துல இப்படி நடந்துக்கிட்டாதான் நியாயம் கிடைக்கும்ன்னு நான் கத்துக்கிட்ட பாடம்.. ஏஸ், நீங்க கத்துக்க இன்னும் நிறைய இருக்கு.. அதுன்னாலெ, என்ன சந்தோஷம் ஏஸ் இதுன்னு சொல்லலாமா? ;-)
கும்மிய ஆரம்பிக்கலாமா??
ரெடி ஸ்டார்ட் தி மியூசிக்
//
ஸோ, மோரல் ஆஃப் தி ஸ்டாரி என்னன்னா பிடிக்காத டீச்சரை வெளியே துரத்துங்கள். உங்களை அறிஞ்சவங்களை பக்கத்துல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட படிங்க.. வாழ்க்கையில கண்டிப்பா பிற்காலத்துல வெற்றி பெருவீங்க
//
பிடிக்கதவங்கள விரட்டிடுங்க ஜால்ரா அடிக்கிறவங்கள கூட வச்சக்கங்க இது தன உங்க பாலிசி
ஜிங் ஜக் ஜிங் ஜக் ஜிங் ஜக்
இது எல்லாம் உண்மையிலே பண்ணியதா இல்ல மண்டபத்தில் வர்கார்ந்து யோசிச்சதா... முக்கியமா முதல் இரண்டும்......
எங்க கிட்ட கிளாஸ்ல வந்த டீச்சர் எல்லாம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் எல்லாம் இருக்கு...
எனக்கு பதில் இவங்க பிசாசுனு பேரு வச்சிட்டா நல்லா இருந்து இருக்கும்!!
நாலாவது ஃபார்ம்லயே நல்லா ஃபார்முக்கு வந்திட்டீங்க போல??
உங்க நாலாவது படிவம்ங்கறது எங்க நாலாவது வகுப்பு மாதிரியா??? ஏன்னா நாலாவது வகுப்பிலேயே இவ்ளோ லூட்டி அடிச்சீங்களான்னு தெரிஞ்சுக்கலாமேனு தான்!!
பாப்பாக்கள் ஒவ்வொருத்தர் பின்னாலையும் பாஷா ரேஞ்சுக்கு அடிதடி நடந்திருக்கு போல!! அதை நீங்களும் லூட்டிஸ் அப்படின்னு டீஜென்டா சொல்லிக்கறீங்க!!
பேசாம உங்க சங்கத்து பேர பயமறியா பாவைகள் சங்கம்னு வெக்கறதுக்கு பதிலா நயமறியா பாவையர் சங்கம்னு வெச்சிருக்கலாம்!! :-P
யம்மா! செல்லம்! கண்ணுல ஆனந்தக் கண்ணீர் வருது!
யம்மா! செல்லம்! கண்ணுல ஆனந்தக் கண்ணீர் வருது!
@கும்மிக்கு வந்தவன்:
//கும்மிய ஆரம்பிக்கலாமா??
ரெடி ஸ்டார்ட் தி மியூசிக் //
மியூஜிக் ஸ்டார்ட் பண்ணிட்டு எங்கே போய்டிட்டீங்க?
@Anonymous:
//பிடிக்கதவங்கள விரட்டிடுங்க ஜால்ரா அடிக்கிறவங்கள கூட வச்சக்கங்க இது தன உங்க பாலிசி
ஜிங் ஜக் ஜிங் ஜக் ஜிங் ஜக் //
அனானி, அவங்க ஜால்ரா அடிக்கிரவங்க இல்ல.. அதை சொன்னணும்ன்னா இன்னொரு உண்மை சம்பவமும் சொல்லலாம். சுருக்கமா சொல்றேனே! இங்கே சொன்ன சம்பவங்கள் நடந்த பிறகு பள்ளி நிர்வாகம் எங்களுகு கருப்பு முத்திரை குத்தி விட்டது. அதுக்கப்புறம் இன்னும் சீரியஸா எங்க திருவிளையாடல் ஆரம்பிச்சோம். பள்ளி நிர்வாகத்தையே எதிர்த்து நின்றோம். சண்டை போட்டோம். நீங்க சொன்ன மாதிரி அவங்க ஜால்ரா போடுரவங்கலா இருந்திருந்தா அவங்க வேலையை செcஉரெ பண்ண அவங்க பள்ளி நிர்வாகம் பக்கத்துலதான் இருந்திருக்கணும். அவங்க எங்களுடன் சேர்ந்து போராடினார். வேலை போனால் போகட்டும்.. நியாயம் உங்க பக்கம்ன்னு சொல்லி கூடவே இருந்தாங்க.. அவங்க வேலையே பறிபோனது! பிறகு அதுக்கும் போராட்டம் செய்து மாவட்டம் வரைக்கும் போய் அவங்க வேலையை திரும்ப பெற்றுக் கொடுத்தோம். இவங்கள ஜால்ரான்னு சொல்லிட்டீங்களே.. வருத்தமா இருக்கு! :(
@நாகை சிவா:
//இது எல்லாம் உண்மையிலே பண்ணியதா இல்ல மண்டபத்தில் வர்கார்ந்து யோசிச்சதா... முக்கியமா முதல் இரண்டும்......
//
எல்லாமே அக்மார்க் உண்மை சம்பவங்கள்தான்.. சொல்ல போனால் ஸ்கூல் சமயத்துல நாங்க அடிccஅ லூட்டில ரொம்ப சாதாரணமான அளவுல சேர்க்க வேண்டிய சம்பவங்கள் மட்டும்தான் இவை.. இன்னும் பல சம்பவங்கள் நடந்திருக்கு.. hehehe
//எங்க கிட்ட கிளாஸ்ல வந்த டீச்சர் எல்லாம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் எல்லாம் இருக்கு... //
வகுப்புல நீங்க படிக்கிற அழகுதான் தெரியுமே!!! டீச்சர் அழாம என்ன பண்ணுவாங்க.. :-P
@குட்டிபிசாசு:
//எனக்கு பதில் இவங்க பிசாசுனு பேரு வச்சிட்டா நல்லா இருந்து இருக்கும்!! //
அப்படியே வச்சிக்கலாம் பிசாசு.. நீங்க குட்டிப்பிசாசு.. நாங்க அழகிய பிசாசு.. நல்லதுதான் செய்வோம். ;-)
@:
//நாலாவது ஃபார்ம்லயே நல்லா ஃபார்முக்கு வந்திட்டீங்க போல??
உங்க நாலாவது படிவம்ங்கறது எங்க நாலாவது வகுப்பு மாதிரியா??? ஏன்னா நாலாவது வகுப்பிலேயே இவ்ளோ லூட்டி அடிச்சீங்களான்னு தெரிஞ்சுக்கலாமேனு தான்!!//
இல்ல சி.வி.ஆர்.. படிவம்ங்கிறது 13 வயசுக்கு மேலே படிக்கும் வகுப்பின் பெயர். 16 வயதில் படிக்கும் வகுப்பைத்தான் படிவம் 4ன்னு சொல்வாங்க.. இந்த சிஸ்ட்டத்தை பத்தி ஜில்லென்று ஒரு மலேசியாவில் எழுதுறேன். ஸ்நீட் 16ன்ல பண்ண கலாட்டாக்கள் இவை. ;-)
//பாப்பாக்கள் ஒவ்வொருத்தர் பின்னாலையும் பாஷா ரேஞ்சுக்கு அடிதடி நடந்திருக்கு போல!! அதை நீங்களும் லூட்டிஸ் அப்படின்னு டீஜென்டா சொல்லிக்கறீங்க!!//
ஒவ்வொருத்தவங்க ஃப்ளாஷ்பேக் வித்தியாசமாதான் இருக்கும்.. படத்துல பார்த்ததில்லை..
//பேசாம உங்க சங்கத்து பேர பயமறியா பாவைகள் சங்கம்னு வெக்கறதுக்கு பதிலா நயமறியா பாவையர் சங்கம்னு வெச்சிருக்கலாம்!! :-P //
எனக்கொரு உண்மை தெரிஞாகணும்.. எதுக்கு எப்போ பார்த்தாலும் எங்க சங்கத்து பெயரை மாத்துருதலேயே குறியா இருக்கீங்க நீங்க???
@காயத்ரி:
//யம்மா! செல்லம்! கண்ணுல ஆனந்தக் கண்ணீர் வருது! //
இது ரைக்ட்டு! கரெக்ட்டான ரியாக்ஷன் இதுதான். :-D
ஏனுங்கோவ் மை ப்ரெண்ட்.... பேருக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாம பண்ணிட்டீகளே.... நாயமா? உலகம் தாங்குமா?
@காட்டாறு:
//ஏனுங்கோவ் மை ப்ரெண்ட்.... பேருக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாம பண்ணிட்டீகளே.... நாயமா? உலகம் தாங்குமா? //
ஃப்ரண்டுதாங்க.. நண்பர்களுக்கு ஃபிரண்டு.. அநியாயம் பண்றவங்களுக்கு எதிர்மாறா இருப்பேனாக்கும்... ஹீஹீ..
உலகம்.. கண்டிப்பா தாங்கும்.. கவலையே படாதீங்க காட்டாறு. :-)
அப்படியெல்லாம் தப்பா நெனைச்சிகாதீங்க!அடங்க பிசாசுனு சொல்லவந்தேன்!!
என்னது ஹனிமூன் வருசமா??
என்னங்க சொல்றீங்க?? மலேசியா ஸ்கூலெல்லாம் ரொம்ப மோசமா பேர் வைக்கிறாங்கப்பா...
//
அப்படியே வச்சிக்கலாம் பிசாசு.. நீங்க குட்டிப்பிசாசு.. நாங்க அழகிய பிசாசு.. நல்லதுதான் செய்வோம். ;-)
//
Aiyo amma vitudunga theriama intha pakkam vanthuten
Post a Comment